பூதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பூதனார் சங்ககாலப் புலவர்.
இவரது பாடல் ஒன்றே ஒன்று கிடைத்துள்ளது.
அது நற்றிணையின் 29 ஆம் பாடலாகும்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]
மகளை அவளது காதலனுடன் அனுப்பிவிட்ட செவிலி சொல்கிறாள்.
நான் என் மகளை மார்போடு அணைத்தேன். அவள் கண்ணீர் மல்கப் பெருமூச்சு விட்டாள். (அவன் அணைக்காத ஏக்கம்)
இப்போது பாலை வழியில் எப்படிச் செல்கிறாளோ? உணவு கிடைக்காத புலி வழிப்போக்கர்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வழியாயிற்றே! - என்று செவிலி நினைக்கிறாள்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூதனார்&oldid=852927" இருந்து மீள்விக்கப்பட்டது