மதுரைப் பெருமருதனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வேழ வெண்பூ

மதுரைப் பெருமருதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 241.

இவரது மகனும் புலவர். பெயர் மதுரைப் பெருமருது இளநாகனார்.

நற்றிணை 241 சொல்லும் செய்தி[தொகு]

தலைவன் பொருளுக்காகப் பிரிந்துள்ளான். எனவே அவன் பிரிவைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறாள் தோழி. தலைவி வாடைக் காற்றின் கொடுமையைக் காட்டித் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லையே என்கிறாள்.

பொருளுக்காகப் பிரிந்தவர் நம்மை நினைப்பாரோ, மாட்டாரோ என்று சொல்லிக் கலங்குகிறாள்.

தலைவன் திரும்பிவிடுவேன் என்று சொல்லிச் சென்ற கூதிர் காலம் போய் முன்பனிக் காலம் வந்துவிட்டது.

  • பறவைகள் நடந்த காலடி தோன்றும் ஈரமணல் தெரிகிறது.
  • கரும்பு அரசனுக்கு வீசும் கவரி போல் பூத்துக்கிடக்கிறது. 'வேழ வெண்பூ' என்னும் பாடல் தொடருக்குப் பேய்க்கரும்பு எனப்படும் கொருக்காந்தட்டைப் பூ என்றும் பொருள் கொள்ளலாம்.
  • ஞாயிறு தோன்றி விழித்திமைக்கும் பொழுதில் மறைந்துவிடுகிறது. (பகல்பொழுது குறைவு)

இப்போதும் அவர் வரவில்லையே!

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரைப்_பெருமருதனார்&oldid=726885" இருந்து மீள்விக்கப்பட்டது