வெண்பூதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வெண்பூதன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் சொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் இடம்பெற்றுள்ளது. அது குறுந்தொகை 83 எண் கொண்ட பாடல்.

அரும்பெற லமிழ்த மார்பத மாகப்
பெரும்பெய ருலகம் பெறீஇயரோ வன்னை
தம்மிற் றமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழந் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வருமென் றோளே.

அது சொல்லும் செய்தி:

  • திணை - குறிஞ்சி

கிளையெல்லாம் பலாப்பழம் தூங்கும் நாட்டை உடையவன், அவன். என் அன்னை அவனைத் தன் இல்லத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாள். (திருமணம் செய்துதர உடன்பட்டுவிட்டாள்) இந்த இனிப்புச் செய்தியைத் தந்த உலகம் பெறற்கு அரிய அமிழ்தத்தை எளிய உணவாகப் பெற்று மகிழட்டும். - இது தலைவி மகிழ்ச்சிப் பெருக்கில் கூறும் உரை.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்பூதன்&oldid=1121577" இருந்து மீள்விக்கப்பட்டது