கடுந்தோட் கரவீரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கடுந்தோட் கரவீரன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இவனைக் கரவீரனார் என்று குறிப்பிடாததால் இவனை ஒரு குறுநிலத் தலைவன் என்று எண்ண வேண்டியுள்ளது. இந்தப் புலவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை 69.

பாடல் தரும் செய்தி[தொகு]

தோழி தலைவனை இரவில் வரவேண்டாம் என்கிறாள்.

தன் எண்ணத்தை இயற்கையின்மீது ஏற்றும் கற்பனை இது.

  • கலை = ஆண் குரங்கு
  • மந்தி = பெண் குரங்கு
  • பெரும்பிறிது = சாவு

கலை இறந்துவிட்டதாம். மந்தி தன் குட்டியை மரக்கிளை பிரியும் இடத்தில் கிடத்திவிட்டு இறந்த கடுவனைப் பிரிந்திருக்க மாட்டாமல் உயரமான பாறைமேல் ஏறிக் கீழே விழுந்து தன்னை மாய்த்துக்கொண்டதாம். (இரவில் வந்து தலைவனுக்கு இன்னல் நேரின் தலைவி உயிர் வாழமாட்டாள். ஆகவே திருமணம் செய்துகொண்டு இவளை அடைக - என்கிறாள் தோழி)

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுந்தோட்_கரவீரன்&oldid=1522385" இருந்து மீள்விக்கப்பட்டது