கங்குல் வெள்ளத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கங்குல் வெள்ளத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 387 எண் கொண்ட முல்லைத்திணைப் பாடல். [1]

பெயர் விளக்கம்[தொகு]

இவரது பெயர் தெரியவில்லை. இவரது பாடலில் கங்குல் வெள்ளம் என்னும் தொடர் வருகிறது. குறுந்தொகையைத் தொகுத்த ஆசிரியர் அந்தத் தொடரைக் கொண்டு இந்த ஆசிரியருக்குக் கங்குல் வெள்ளத்தார் என்று பெயர் சூட்டியுள்ளார்.

பாடல் தரும் செய்தி[தொகு]

 • தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் கவலை.
 • எல் என்னும் பகலொளி கழிகிறது. முல்லைப்பூ மலர்கிறது. கதிரவனின் வெப்பம் தணிகிறது. நான் கை என்னும் துணைவலிமை அற்றுப்போய்த் தனிமையில் துன்பம் என்னும் வெள்ளத்தில் உயிர் என்னும் கரையைப் பற்ற நீந்திக்கொண்டிருக்கிறேன். ஏனோ தெரியவில்லை. வாழி தோழி! கங்குல் என்னும் வெள்ளம் கடலைக் காட்டிலும் பெரிதாக உள்ளது. - இவ்வாறு தலைவி தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள்.

அடிக்குறிப்பு[தொகு]

 1. எல்லை கழிய, முல்லை மலர,
  கதிர் சினம் தணிந்த கையறு மாலை,
  உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின்,
  எவன்கொல் வாழி? தோழி!
  கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்குல்_வெள்ளத்தார்&oldid=1805129" இருந்து மீள்விக்கப்பட்டது