கடலூர்ப் பல்கண்ணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடலூர்ப் பல்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று நற்றிணை 380ஆம் பாடலாக உள்ளது.

பாடல் தரும் செய்தி[தொகு]

பரத்தையிடம் சென்ற தலைவன் இல்லம் மீள்கிறான். அவனுக்குத் தூதாகப் பாணன் தலைவியிடம் வருகிறான். தோழி வீட்டில் நுழையக் கூடாது என்று தடுக்கிறாள். இவள் சொல்கிறாள்.

பாடல் பகுதி[தொகு]

நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும்
திதலை மென்முலை தீம்பால் பிலிற்றிப்
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே

செய்தி[தொகு]

என் ஆடை சமைக்கும்போது தொட்ட எண்ணெய் பட்டும், தாளிக்கும்போது சிதறியவை பட்டும் அழுக்கேறிக் கிடக்கிறது. என் உடம்பு குழந்தைக்குப் பால் கொடுத்துப் புனிற்று நாற்றம் அடிக்கிறது.

அதனால் அவர் பகட்டும் பெண்ணைத் தேடிச் சேரி சென்றார்.

நீயோ யாழை மீட்டிக்கொண்டு வந்து இப்போது என்னைத் தொழுகிறாய். அன்று அவர் செல்லத் தேரில் குதிரை பூட்டியவன் நீதானே? தந்திரமாக எதையும் பேசாதே. (நாங்கள் மயங்கமாட்டோம்) - என்கிறாள் தோழி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்ப்_பல்கண்ணனார்&oldid=3200981" இலிருந்து மீள்விக்கப்பட்டது