மதுரைப் பெருமருது இளநாகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுரைப் பெருமருது இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது வாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 251.

புலவர் பெயர் - இளநாகனார்
தந்தை பெயர் - பெருமருது
ஊர் - மதுரை

இவரது தந்தையாரும் புலவர். பெயர் மதுரைப் பெருமருதனார்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

தலைவிக்காகத் தலைவன் காத்திருக்கிறான். அவனுக்குக் கேட்கும்படி தலைவி தினையை வேண்டுவது போலச் சொல்கிறாள்.

தினையே! நீ விளைக! உன் வளைந்த கதிர்களில் அமர்ந்து பறவைகள் உன்னை உண்ணட்டும். நான் புள்ளோம்பி உன்னைக் காத்ததை நீ அறிவாய். இப்போது கடவுள் பேணி என்னை வீட்டிலேயே வைத்து என்னைக் காக்கின்றனர். (முருகயர்கின்றனர்). எனவே உன்னைக் காக்க நான் வரமாட்டேன்.

அவன் நன்மலை நாடன். அவன் மலையில் அருவியின் கடும்பாட்டு கேட்டுக்கொண்டிருக்கும். அங்குப் பழுத்திருக்கும் வாழைப்பழத்தை மந்தி கவர்ந்து செல்லும்.

(இறைச்சி - தலைவி வாழைப்பழம். தலைவன் மந்தி)

பழந்தமிழ்[தொகு]

  • உடங்கு பீள் = வளைந்த (தினைக்)கதிர்