சேந்தன் கீரனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேந்தன் கீரனார் சங்ககாலப் புலவர். குறுந்தொகை 311 எண்ணில் உள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாக உள்ளது. புலவர் பெயர் கீரனார்.இவரது தந்தை பெயர் சேந்தன்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

அவர் தேரில் வந்ததை மணல்மேட்டில் புன்னைமலர் கொய்யும் ஆயமெல்லாம் கண்டது. நான் மட்டும் காணவில்லை. அப்படி இருக்கையில் அவர்கள் அலர் தூற்றுவது எங்கே ஒழியப்போகிறது?
அவன் அவளுக்காகக் காத்திருக்கும்போது தலைவி இவ்வாறு தன் தோழியிடம் சொல்கிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேந்தன்_கீரனார்&oldid=3179490" இலிருந்து மீள்விக்கப்பட்டது