புல்லாற்றூர் எயிற்றியனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புல்லாற்றூர் எயிற்றியனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது - புறநானூறு 213.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

கோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் இருவரோடு போர் தொடுத்தான். இந்தச் செயல் முறைமை அன்று என்று இந்தப் புலவர் கோப்பெருஞ்சோழனுக்குப் பக்குவமாக எடுத்துரைக்கும் பாடல் இது.

அடுமான் தோன்றல்! நீ வெற்றிகள் பல பெற்ற வெண்குடைக்கீழ் ஆள்பவன். நினைத்துப் பார்த்தால் உனக்குப்பின் வந்த உன் மக்கள் இருவரும் உனக்குப் பகைவர் அல்லர். உனமீது போருக்கு எழுந்துள்ள அவர்களுக்கு நீ பகைவனும் அல்லை. நீ இறந்தபின் உன் நாடு அவர்களுக்கு உரியதாகிவிடுமல்லவா? நீ அவர்களை வென்றால் உனக்குப்பின் உன் நாட்டை யாருக்குத் தருவாய்? நீ தோற்றால் உனக்குப் பழிதானே? அதனால் மறவினை ஒழிக. அறவினை கைக்கொள்க. நீயே விருப்பத்தோடு வானுலகம் சென்றுவிடு.

இவரது அறிவுரையை ஏற்ற கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் நீத்தான்.