கருவூர் கிழார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருவூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 170.

பாடல்[தொகு]

  • குறிஞ்சித் திணை

பலரும் கூறுக அஃது அறியாதோரே
அருவி தந்த நாட்குரல் எருவை
கயம் நாடு யானைக் கவளம் மாந்தும்
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனன் யானே.

  • தலைபோகாமை = உயிர்போகாமை

பாடல் தரும் செய்தி[தொகு]

திருமணக் காலம் நீட்டிப்பதைத் தலைவி தாங்கமாட்டாள் என்று கவலைப்பட்ட தோழிக்குத் தலைவி சொல்வதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

ஆறு எருவைப் பூவை அடித்துச் செல்வது போல என் காமம் என்னை அடித்துச் சென்றாலும் அவன் என்னைத் துய்ப்பான் என நம்புகிறாள் தலைவி.

செடியினம்[தொகு]

எருவை என்னும் நீர்வாழ் செடியை யானை விரும்பி உண்ணும் எனத் தெரிகிறது. அதன் பூ நீண்ட குச்சியில் கொத்தாகப் பூத்திருக்கும் எனவும் தெரிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவூர்_கிழார்&oldid=1522414" இருந்து மீள்விக்கப்பட்டது