வெள்ளெருக்கிலையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெள்ளெருக்கிலையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 233, 234 ஆகிய இரண்டு பாடல்கள் இவரால் பாடப்பட்டுள்ளனவாகச் சங்கத்தொகை நூல்களில் உள்ளன.

செய்திகள்[தொகு]

இவர் தம் இரண்டு பாடல்களிலும் வேள் எவ்வி என்னும் என்னும் வள்ளலைப் பாடியுள்ளார். இவன் ஓர் அரசன். இவன் இறந்தபின் அவனை எண்ணி இரங்கிய கையறுநிலைப் பாடல்கள் இவை.

புறம் 233[தொகு]

எவ்வி பகைவர்களை அழிக்கும் பெரும் படையை உடையவன். அவன் பெரும்பூண் எவ்வி என்று சிறப்பிக்கப்பட்டவன். தன்னிடம் பரிசில் நாடி வந்தவர்களுக்கு யானைகளைத் தாராளமாக வழங்கியவன். பெரும்பாண் எனப்படும் பாணர்களின் பெருங்கூட்டத்தின் ஒக்கலுக்கு(உறவினர்களுக்கு)த் தலைவன். அதாவது பாணர் கூட்டத் தலைவன்.

அகுதை[தொகு]

அகுதை ஒரு போர்வீரன். பகைவர்கள் தாக்கிய 'திகிரி'(சக்கரப்படை) இவன் மார்பைத் தாக்கிப் பெரும்புண்ணுடன் கிடந்தான் என்னும் செய்தி இவனைப்பற்றிப் பரவியது. இது உண்மை அன்று. பொய்ச்செய்தி.

கையறுநிலை[தொகு]

அகுதையைப் பற்றிய பொய்ச்செய்தி போல எவ்வி புண்ணுற்றான் என்னும் செய்தியும் பொய்யாக இருக்கக்கூடாதா என்பது புலவரின் ஏக்கம்.

புறம் 234[தொகு]

புலவர் புரட்சி[தொகு]

எவ்வி தனியே உண்ணமாட்டான். பலரோடு சேர்ந்தே உண்ணும் பழக்கம் உள்ளவன். அவன் இறந்தபின் அவனது மனைவி படைக்கும் உணவை மட்டும் தனியே உண்பானா? எங்கே உண்டான்? யார் பார்த்தது?

சடங்கு[தொகு]

இறந்தவனுக்குச் சடங்கு செய்யும் அவனது மனைவி யானையின் காலடி அளவு இடத்தை மெழுகுவாள். அதன்மேல் தருப்பைப் புல்லை வைப்பாள். அந்தப் புல்லின்மேல் சோற்றுப்பிண்டம் வைத்து இறந்த அவளது கணவனுக்குப் படைப்பாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளெருக்கிலையார்&oldid=1522934" இலிருந்து மீள்விக்கப்பட்டது