உள்ளடக்கத்துக்குச் செல்

பாலை பாடிய பெருங்கடுங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேர நாணயங்களில காணப்படும் சேரமன்னர் முத்திரை, வாங்குவில் எனக் குறிப்பிடப்படும் எய்யும் வில்

பாலை பாடிய பெருங்கடுங்கோ சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 58 உள்ளன. இவர் ஒரு சேர மன்னன்.

புகழூர்க் கல்வெட்டு

[தொகு]

புகழூரிலுள்ள தமிழ் கல்வெட்டு அசோகன் காலத்தை சேர்ந்தது. இந்தக் கல்வெட்டில் இவனது தந்தைபெயர் 'கோ ஆதன் செல் இரும்பொறை. இவனது பெயர் பெருங்கடுங்கோ. இவனது மகன் பெயர் இளங்கடுங்கோ' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.[1]

இவரது பாடல்கள்

[தொகு]

அகநானூறு 5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379,
கலித்தொகை பாலைக்கலி 35 பாடல்
குறுந்தொகை 16, 27, 124, 135, 137, 209, 231(மருதம்), 262, 283, 398,
நற்றிணை 9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391,

இவற்றில் காட்டப்பட்டுள்ள மருதத்திணைப் பாடல் ஒன்று நீங்கலாக அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்.

புறநானூறு 282

இவரால் குறிப்பிடப்பட்டோர்

[தொகு]
கொண்கானங் கிழான், மழவர் ஆகியோர் இவரால் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாலைக்கலி

[தொகு]

இந்தப் புலவர் அரசன் ஆதலால் செங்கோலாட்சி, கொடுங்கோலாட்சி போன்றவறை நயமான உவமைகளாகச் சுட்டியுள்ளார்.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ - என்பது கல்வெட்டுத் தொடர்.

வெளிப்பார்வை

[தொகு]

பாலை பாடியவன் வெற்றி, கொடை பற்றிப் பேய்மகள் இளவெயினி