கொண்கானங் கிழான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொண்கானங் கிழான் சங்ககால வள்ளல்களில் ஒருவன். மோசி கீரனார் என்னும் புலவர் இவன் பேரரசன் எனக் குறிப்பிட்டு இவனது கொடைநலத்தையும், சிறப்பித்துப் பாடியுள்ளார்.

நீர் நிறைந்த கடல் அருகில் வாழ்ந்தாலும் மக்கள் உண்ணும் நீரையே நாடிச் செல்வர். அதுபோலத் தன்னைச் சூந்து அரசர்கள் பலர் இருப்பினும் தான் அவர்களை விட்டுவிட்டுக் கொண்காணங் கிழானை நாடி வந்துள்ளதாக ஒருபாடலில் குறிப்பிடுகிறார். [1]

பாழூரில் நெருஞ்சிமுள் விதை மழைக்காக ஏங்குவது போல வள்ளலுக்காக ஏங்கும் பாணனைக் கொண்கானங் கிழானிடம் சென்று தன் வறுமையைப் போக்கிக்கொள்ளுமாறு மற்றொரு பாடலில் குறிப்பிடுகிறார். [2]

எல்லா மலைகளும் அனைவருக்கும் வழங்கும் வளத்தை மட்டுந்தான் பெற்றிருக்கும். கொண்கான மலைக்குன்றில் மற்றொரு வளமும் உண்டு. மன்னர்கள் பலர் அம்மலைக்குத் திறைப்பொருள்களைக் கொண்டுவந்து குவிப்பர்.[3]

அடிக்குறிப்பு[தொகு]

  1. புறநானூறு 154
  2. புறநானூறு 155
  3. புறநானூறு 156
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்கானங்_கிழான்&oldid=914612" இலிருந்து மீள்விக்கப்பட்டது