ஒக்கூர் மாசாத்தியார்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாண்டிய நாட்டில் திருக்கோட்டியூர் என்னும் ஊருக்கு அருகிலுள்ள ஊர் ஒக்கூர். (தற்போது இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது). இந்த ஊரில் பிறந்து வாழ்ந்த மாசாத்தியார் புத்த சமயத்தைத் தழுவிய[சான்று தேவை] சங்க காலத்தவர்.
இவர் பாடிய பாடல்கள் அகநானூற்றில் இரண்டும் (பாடல்:324, 384), குறுந்தொகையில் ஐந்தும் (பாடல்: 126, 139, 186, 220 மற்றும் 275) புறநானூற்றில் ஒன்றுமாக (பாடல்: 279) இடம் பெற்றுள்ளன.