பேய்மகள் இளவெயினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேய்மகள் இளவெயினி பேய்மகள் இள எயினி சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் புறநானூறு 11[1] ஆம் பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளது. அதில் இவர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் கொடைப் பெருமையைப் பாராட்டியுள்ளார்.

சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ புலவராகவும் அரசனாகவும் விளங்கியவர்.

இளவெயினியின் பாடல் சொல்லும் செய்தி:

  • மடமங்கையர் பூக்கொய்து மணல்-பாவைக்குச் சூட்டிவிட்டுத் தண்ணான் பொருநை புனலில் பாய்ந்து விளையாடும் வஞ்சி வேந்தன் இவன்.
  • இவன் பகைமன்னர் அரண் கடந்து அவர்களைப் புறங்கண்டான்.
  • இவனைப்பற்றி மறம் பாடிய பாடினிக்குக் கழஞ்சு எடை கொண்ட பொன்னணிகளை வழங்கினான்.
  • பாடினி பாடும்போது அவள் குரலுக்கு இணையாக யாழ் மீட்டிய பாணனுக்கு பொன்னால் செய்த தாமரைப் பூவை விருதாக வழங்கினான்.

பாடலில் புதுமையான நடையோட்டம் காணப்படுகிறது. பாடலடிகளில் மடக்கணி காணப்படுகிறது. சங்க இலக்கியப் பெண்பாற் புலவர்கள்

வெளி இணைப்புகள்[தொகு]

  1. பேய்மகள் இளவெயினி பாடல் புறநானூறு 11
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேய்மகள்_இளவெயினி&oldid=3345729" இருந்து மீள்விக்கப்பட்டது