குறமகள் இளவெயினி
குறமகள் இள எயினி சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.[1] புறநானூறு 157 எண் கொண்ட பாடல் ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இவரது பெயர் குறமகள் குறியெயினி என்னும் புலவரின் பெயர் அமைப்பைப் போன்றது.
புறநானூறு 157 சொல்லும் செய்தி
[தொகு]ஏறைக்கோன் என்னும் மன்னனின் பெருமையை மற்றொரு மன்னனிடம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
ஏறை
[தொகு]ஏறு என்னும் பெயர் கொண்ட இந்த ஊர் இக்காலத்தில் 'காளையார் கோயில்' என்னும் பெயருடன் வழங்கப்படுகிறது.
ஏறைக்கோன் படைத்தலைவன்
[தொகு]ஏறைக்கோன் தன் படைவீரர்களைப் பழிக்கமாட்டான். தான் முன்னின்று போர்புரிந்து வெல்வான்.
ஏறைக்கோன் தூதன்
[தொகு]பகை வேந்தர்களின் அவையில் அஞ்சாது நடக்கும் ஆண்மை நிறைந்தவன்.
ஏறைக்கோன் பண்புகள்
[தொகு]தன்னைச் சார்ந்தவர்கள் தனக்குத் தப்பு செய்தால் அதனை ஏறைக்கோன் பொறுத்துக்கொள்வான். பிறர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காகத் தான் நாணுவான். அவர்கள் செய்யும் தவற்றினுக்குத் தானும் ஒரு காரணம் என்று எண்ணும் மனப்பாங்கு உள்ளவன்.
குறவர் பெருமகன்
[தொகு]மலைவாழ் குடிகளைக் குறவர் என வழங்குதல் சங்ககால வழக்கம். ஏறைக்கோனைக் குறவர் பெருமகன் என்று புலவர் குறிப்பிடுவதால் இவன் மலைசார் மக்களின் தலைவன் எனத் தெரிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கா., கோவிந்தன் (1956). சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை - V. பெண்பாற்புலவர்கள் (மறுபதிப்பு) (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 44-46.