பக்குடுக்கை நன்கணியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பக்குடுக்கை நன்கணியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூறு 194ஆம் பாடலாக உள்ளது.

புலவர் பெயர் விளக்கம்[தொகு]

இவர் தன் பாடலில் பக்கத்தில் நிகழ்வனவற்றை உடுத்திக்கொண்டு அவற்றை நல்ல கண் கொண்டு பார்க்குமாறு நம்மை ஆற்றுப்படுத்துவதால் இவரது பெயர் பக்கு+உடுக்கை+நல்+க(ண்)ணியார் என அமைக்கப்பட்டுள்ளது. இது பாடற்பொருளால் அமைந்த பெயர். இது உலகியலைக் கூறும் பெருங்காஞ்சித் துறைப் பாடலாக உள்ளது.

உலகியலும் உண்மை விளக்கமும்[தொகு]

ஓர் இல்லத்தில் இறந்ததற்கு இரங்கும் நெய்தல் பறை ஒலிக்கிறது. மற்றோர் இல்லத்தில் மகிழ்ச்சித் ததும்பும் முழவொலி கேட்கிறது.

ஓர் இல்லத்தில் புணர்ந்தோர் பூமாலை அணிந்துள்ளனர். அவர்களது கண்கள் பூத்து மகிழ்கின்றன. மற்றோர் இல்லத்தில் தலைவன் பிரிந்து சென்றுள்ளதால் தலைவியின் கண்ணில் பனித்தாரை ஒழுகுகிறது.

இப்படி உலகைப் படைத்துவிட்டான் ஒரு பண்பில்லாதவன்.

இப்படிப்பட்ட உலகில் உலகில் வாழ்வது துன்பந்தான்.

இதனை நன்கு உணர்ந்தவர் உலகில் நிகழ்பவை இனியன என்னும் கண்கொண்டே பார்க்க வேண்டும்.