பெருந்தேவனார்
Appearance
காலப்பாதையில் பெருந்தேவனார் என்னும் பெயருடன் அவ்வப்போது சில புலவர்கள் வாழ்ந்துள்ளனர்.
நிரல்
[தொகு]புலவர் | காலம் | குறிப்பு |
---|---|---|
பெருந்தேவனார் (சங்க காலம்) | கி.பி. 100-இக்கு முன் | அகநானூறு 9, [1] [2] * நற்றிணை 83 [3] |
பெருந்தேவனார் (கடுகு பெருந்தேவனார்) | கி.பி. 100-இக்கு முன் | குறுந்தொகை 255 [4] |
பெருந்தேவனார் (பாரதம் பாடியவர்) [5] [6] | கி.பி. 700-இக்கு முன் [7] | * அகம், புறம், ஐங்குறுநூறு - சிவன் * குறுந்தொகை – முருகன் * நற்றிணை – திருமால் * ஆகிய கடவுள் வாழ்த்துப் பாடல்களைப் பாடியவர். |
பெருந்தேவனார் (பாரதவெண்பா பாடியவர்) | 825-850 [8] | பாரதவெண்பா ஒரு பகுதி அச்சிடப்பட்டுள்ளது |
பெருந்தேவனார் (வீரசோழிய உரைகாரர்) | 1100-1125 | வீரசோழியம் நூலுக்கு உரை எழுதியவர் |
பெருந்தேவனார் (கவிராச பெருந்தேவனார்) | – | ‘பூவிற்குத் தாமரை’ எனத் தொடங்கும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாக உள்ளது. [9] |
கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ கல்லாடனார் பாடியதாக உள்ள இந்தப் பாடல் பெருந்தேவனார் பாடியதாகவும் உள்ளது.
- ↑ வில்லோர் தூணியில் அம்பு வைத்திருப்பர் என்கிறார்
- ↑ கூகைக்கு எலி - பற்றிக் குறிப்பிடுகிறார்.
- ↑ யானை யா மரத்தைத் தின்னும் என்கிறார்
- ↑ “மாபாரதம் தமிழ்ப்படுத்தும்” எனச் சின்னமனூர்ச் செப்பேடு குறிப்பிடும் புலவர்
- ↑ இவர் தமிழ்ப்படுத்திய மாபாரதம் இன்று இல்லை
- ↑ எட்டுத்தொகை தொகுக்கப்பட்ட காலம்
- ↑ மூன்றாம் நந்திவர்மனின் தெள்ளாற்றுப் போரைக் குறிப்பிடுகிறார்
- ↑ திருவள்ளுவ மாலை ஒரு போலிநூல்.