பெருந்தேவனார் (சங்கப்புலவர்)
Appearance
பெருந்தேவனார் சங்ககாலப் புலவர். இவரிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே சங்கப்பாடல் தொகுக்கப்பட்ட பிற்காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனாரைப் 'பாரதம் பாடிய பெருந்தேவனார்' எனக் குறிப்பிட்டனர்.[1]
சங்கநூல் தொகுப்பில் பெருந்தேவனார் பாடல்கள் மூன்று உள்ளன.[2]
பாடல் சொல்லும் செய்திகள்
[தொகு]பிரியின் புணருமா?
[தொகு]- இருவகை வினைகள். ஒன்று, முடைநாற்றம் அடிக்கும் இடத்தில், கோடை வெயிலில் தன் சிறகுகளும் கருகும்படி கழுகு இருக்கும் காட்டுவழியில் பொருள்செய்வினை. மற்றொன்று, மனைவியோடு வாழ்ந்துகொண்டே வாழும் மனைமுதல்வினை. நெஞ்சே! நினைத்துப்பார். எது இனிது? - தலைவன் நினைவுகள்.[3]
சிறுகட் பெருநிரை
[தொகு]- யானைக் கூட்டத்தின் பசியைப் போக்கக் களிறு யா மரத்தைக் குத்திக் கிழிப்பதை வழியில் பார்க்கும்போது, பொருள்தேடச் சென்ற நம் தலைவர் உன்னை எண்ணித் திரும்பிவிடுவார். கவலை வேண்டாம் என்று சொல்லித் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறார்.[4]
மை ஊன் புழுக்கல் (மட்டன் பிரியாணி) + எலிவறுவல்
[தொகு]- வளைவாய்க் கூகையே, இது கேள்! ஊர்மன்றத்துக் கடவுள் மரத்தில் இருந்துகொண்டு நான் அஞ்சும்படி உன் கடுங்குரலால் பயிற்றாதே! அவர் வரவை நள்ளிரவில் நான் நினைத்துக்கொண்டிருக்கும்போது குரல் எழுப்பாதே. குழறாமல் இருந்தால் மையூன் புழுக்கலும் எலிவறுவலும் உனக்குத் தருவேன். - தலைவி கூகையோடு பேசுகிறாள்.[5]
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ சங்ககாலப் புலவர் பெருந்தேவனார் என்பவரும் ஒருவர் அல்லர். குறுந்தொகை 255ஆம் பாடலைப் பாடியவர் 'கடுகு பெருந்தேவனார்' என்னும் பெயர்கொண்ட வேறொருவர் என்பது மு. அருணாசலம் அவர்கள் கருத்து (தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, பாகம்1, பக்கம் 3)
- ↑ அவை: அகநானூறு 51, நற்றிணை 83, குறுந்தொகை 255
- ↑ அகநானூறு 51
- ↑ குறுந்தொகை 255
- ↑ நற்றிணை 83