பதுமனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதுமனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 6 எண் கொண்ட பாடல்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

நட்டநடு நிசியில் எந்த அரவமும் இல்லை. எல்லாரும் நிம்மதியாக உறங்குகின்றனர். நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கிறேன்.

திருமண நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதால், தலைவி துடிக்கிறாள். தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

பாடல்[தொகு]

நள் என்றன்றே யாமம் சொல் அவிந்து
இனிது அடங்கினரே மாக்கள், முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓஒர் யான் மன்ற துஞ்சாதோனே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதுமனார்&oldid=2718118" இலிருந்து மீள்விக்கப்பட்டது