விற்றூற்று மூதெயினனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விற்றூற்று மூதெயினனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்களாகச் சங்கநூல் தொகுப்பில் 4 பாடல்கள் உள்ளன.

விற்றூற்று என்னும் ஊரில் வாழ்ந்த மற்றொரு புலவர் விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்.

மூதெயினனார் படல்கள் தரும் செய்தி

அகநானூறு 37[தொகு]

பொருள் தேடச் சென்ற இடத்திலேயே தங்காமல் திரும்பிவுடுவார் என்றாலும், அவர் சென்னிருக்கும் இடத்தைப்பற்றி எண்ணும்போது உள்ளம் வருந்துகிறது என்கிறாள் தலைவி. தோழியும் அதனை வழிமொழிகிறாள்.

இரவெல்லாம் உழவர் களத்தில் நெல் அடித்த சுனைப் புழுதியும், விடிலில் அவர்கள் பிணையல் அடித்த வைக்கோல் துகள் புழுதியும் நீர்நிலைகளில் படிந்திருக்கும். அதன் சூசிகளை விலக்கிவிட்டு, மாவிலையைக் குடை போல் வளைத்து நீரை மொண்டு, யானை நீர் பருகுவது போல நீர் பருக வேண்டும். பாலில் வெந்த கொள்ளும், பயரும் உண்ணவேண்டும். பகலெல்லாம் சுற்றித் திரிந்தபின் இரவில் மருதமரத்து அடியில் எருதுகளோடு சேர்ந்து உறங்கவேண்டும். என் துணையைத் துறந்த அவருக்குத் துணை, பொருள் தேடும் இடத்தில் இப்படித்தான் இருக்கும்.

அகநானூறு 136[தொகு]

தலைவியின் ஊடலைத் தணிக்க முடியாதபோது தலைவன் தன் திருமணநாள் நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறான்.

வதுவை (திருமணச் சடங்கு)[தொகு]

ஆட்டுக்கறிப் புழுக்கு(பிரியாணி) விருந்தளிக்கப்பட்டது. புரையோர்(உயர்ந்தோர்) புள்-சகுனம் பார்த்தனர். நிறைமதி நாள். மதியம் சகடமீன் கூட்டத்தில் இருந்தது. (உரோகினி நட்சத்திரக் கூட்டத்தில் இருந்தது). திருமணப்பந்தல் போடப்பட்டது. கடவுளை வணங்கினர். மணமுழவும், பணைப்பறையும் முழங்கின. மகளிர் வதுவை மண்ணினர்.

இழையணி சிறப்பு[தொகு]

மணமகளுக்குத் தூய உடை உடுத்தினர். கிழங்கொடு பிடுங்கிய பூத்த அறுகம்புல்லையும், வாகைப் பூவையும் வெள்ளை நூலில் கட்டி அவளுக்கு அணிவித்திருந்தனர். தண்ணீர் தெளித்த மணல் பந்தலில் அவளுக்கு 'இழை'(தாலி) அணிவிக்கப்பட்டது.

தலைநாள் இரவு[தொகு]

அன்று இரவு அவளது பெற்றோர் அவளை எனக்குத் தந்தனர். அவள் முறுங்காக் கலிங்கம் (கசங்காத புத்தாடை) போர்த்திக்கொண்டிருந்தாள். 'உன் வியர்வை நீங்கக் காற்று நுழையட்டும்ய என்று சொல்லிக்கொண்டு கணவன் மனைவியின் ஆடையை ஆர்வத்தோடு நீக்கினான். அவள் உறையிலிருந்து எடுத்த வாள் போலத் தகதகவென்று இருந்தாள். தன் உடலை மறைத்துக்கொள்ள முயன்று முடியாமல் தன் கூந்தலால் தன் உடலை மறைத்துக்கொண்டு கணவனை வணங்கினாள்.

அகநானூறு 288[தொகு]

சந்தனம் பூசிய மார்பில் வேங்கைப்பூ மாலை சூடிக்கொண்டு தலைவன் தலைவிடம் வருகிறான். மலையடுக்கத்தின் உச்சியில் இருந்த மாங்காடு என்னும் ஊரில் குட்டியை வயிற்றில் வைத்துக்கொண்டிருந்த மந்தியின் பசியைப் போக்குவதற்காகக் குட்டியின் தந்தை கடுவன் பலாப்பழத்தைப் பிய்ப்பது போலத் தந்தை தன் வழுக்கைத் தலையைப் பிந்த்துக்கொண்டு மகளைக் காப்பிட்டு வைத்திருக்கிறான். எனவே பகலில் தலைவியை அடைய வரவேண்டாம் என்று தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள்.

குறுந்தொகை 372[தொகு]

  • திணை - குறிஞ்சி

காத்திருக்கும் தலைவனுக்குக் கேட்குமாறு தோழி மலைவிக்குச் சொல்கிறாள்.

தமிழ்நாட்டில நிகழ்ந்த இயறகைச் சீற்றங்கள் இப் பாடலில் தெரிவிக்கப்படுகின்றன.

கடுவளி (சூராவளி) (பேய்க்காற்று)

கடுவளி பனைமரத்து மடல்களைக் குருத்தோடு அடித்துச் சென்று போட்ட குப்பை மலை உச்சியில் காய்ந்துகொண்டிருக்கும்.

ஆழித்தலை வீசிய அயிர்சேற்று அருவி (மணல்மழை)

ஆழி என்பது கடல். கடலோரப் பகுதயில் மணல்காற்று வீசும். அது அருவியில் நீர் கொட்டுவது போல மணலைக் கொட்டும்.

(இல்லாததும், பொல்லாததும் சொல்பவர்களை இக்காலத்தில் புழுதியை வாரிக் கொட்டுகின்றனர் என்பர். அதுபோல இப்புலவழும் அலர் தூற்றப்படுவதைக் குறிப்பிடுகின்றார்) தலைவி வாழும் வீடு பதுக்கையாம். அது கூழை பெய் எக்கரில் உள்ளதாம். அந்தப் பதுக்கையில் வாழும் மன்னைப்பற்றி மணல்மாரி போல் அலர் தூற்றுகிறார்களாம். - இப்படித் தலைவி குறிப்பிடுகிறாள்.