போந்தைப் பசலையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போந்தைப் பசலையார் சங்ககாலப் புலவர். அகநானூறு 110 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

தலைவிக்கு நிகழந்ததைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நிறகும் இந்தப் பாடல் ஒரு நிகழ்வின் தொடர் போல அமைந்துள்ளது.

நிகழ்வு[தொகு]

புகார்த்தெய்வம்[தொகு]

நான் சொல்லப்போகும் செய்தி இவளைப் பெற்ற தாய்க்குத் தெரிந்தாலும் பரவாயில்லை. ஊருக்கே தெரியினும் பரவாயில்லை. வேறு வழி இல்லை. புகார்த்தெய்வத்தை நோக்கிச் சூளுரைத்து உண்மையைக் கூறுகிறேன்.

தொடலை ஆயம்[தொகு]

தோழிமார் கூடித் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தோம். பின் சிற்றில் இழைத்தோம். சிறுசோறு ஆக்கினோம். இப்படி விளையாடிய வருத்தம் தீரச் சிறிதே அமர்ந்திருந்தோம்.

தங்கின் மற்று எவனோ[தொகு]

அங்கு ஒருவன் வந்தான். பேச்சுக்கொடுத்தான். "தடமென் பணைத்தோள் மட நல்லீரே! பொழுதும் போய்விட்டது. களைப்பாகவும் இருக்கிறது. மெல்லிலை பரப்பில் விருந்து உண்டபின் அமைதியாக இருக்கும் உம் சிறுகுடியில் தங்கினால் என்ன? என்று வினவினான். அவனைப் பார்த்ததும் இவள் தலைவணங்கி நின்றாள். நான் சொன்னேன், 'இவை நிமக்கு உரிய செயல்கள் அல்ல'.

கொடி நுடங்கு நாவாய் காணாமோ[தொகு]

அவள் சேசலானாள். கொடி அசையும் வணிக நாவாயைக் காட்டினாள். மீன் வல்சிதான் எங்கள் உணவு என்றாள். இவளது ஆயத்தார் பலரும் அவ்விடத்தில் நிற்காமல் சென்றுவிட்டனர். அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள். 'நன்னுதால்! நானும் போகட்டுமா' என்றாள். அதன் பொருள் நான் போகவேண்டும் என்பது எனக்குப் புரிந்துவிட்டது. நானும் விலகினேன்.

அவன்[தொகு]

அப்போது அவன் தேரின் கொடிஞ்சியைப் பற்றிக்கொண்டு நின்றது என் கண்ணை விட்டு அகலவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போந்தைப்_பசலையார்&oldid=2718154" இருந்து மீள்விக்கப்பட்டது