உள்ளடக்கத்துக்குச் செல்

ஓதஞானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓதஞானி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்களாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை: குறுந்தொகை: 71 (பாலைத் திணை) மற்றும் குறுந்தொகை: 227 (நெய்தல் திணை).

குறுந்தொகை 71 (பாலை)

[தொகு]
  • அவன் நெஞ்சு பொருளை நாடுகிறது. அப்போது அவளைப்பற்றிய நினைவும் வருகிறது. அவன் சொல்கிறான்.
  • என் நெஞ்சின் நினைவு நோய்க்கு மருந்து உண்டு என்றால் அது அவள்தான். அன்றி வாழ்க்கைக்கு உதவும் வைப்புநிதி ஒன்று உண்டு என்றால் அதுவும் அவள்தான்.
  • அவள் மலைநாட்டுக் கானவன் மகள். சின்னவள். அவளது முலையில் சுணங்கு(சுருக்கம்) இப்போதுதான் அரும்பியுள்ளது. அத்துணை இளமையானது. தோள் பருத்துள்ளது. இடை மெலிந்துள்ளது. அவள்தான் மருந்து. அவள்தான் பொருள்.
  • அவளைப் பிரிந்து பொருள் தேடச் செல்லவேண்டாம், என்று தீர்மானிக்கிறான்.
பாடல்
[தொகு]

மருந்து எனின் மருந்தே, வைப்பு எனின் வைப்பே
அரும்பிய சுணங்கின் அம்பகட்டு இளமுலைப்
பெருந்தோள் நுணுகிய நுசும்பின்
கல்கெழு கானவர் நல்குறு மகளே.

குறுந்தொகை 227 (நெய்தல்)

[தொகு]
  • அவள் கடற்கரை ஓரத்திலுள்ள கானல் நிலத்தில் அவன் சென்ற தேரின் காலடியைப் பார்த்துச் சொல்கிறாள்.
  • கையிலுள்ள வளையல் வளைந்திருப்பது போல அவன் தேர்ச்சக்கரத்தின் கட்டு இரும்பு வளைந்திருக்கும். அந்தச் சக்கரம் துமித்ததால் வளயான நெய்தல் துண்டுபட்டுக் கூழையாகிக் கிடக்கிறது.
  • அவன் நம்மைப் பார்க்காமல் போய்விட்டானே!
பாடல்
[தொகு]

பூண் வளைந்து அன்ன பொலஞ்சூட்டு நேமி
வாள் முகம் துமிப்ப வள்ளிதழ் குறைந்த
கூழை நெய்தலும் உடைத்து இவண்
தேரோன் போகிய கான லானே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓதஞானி&oldid=4135090" இலிருந்து மீள்விக்கப்பட்டது