பாவைக் கொட்டிலார்
Appearance
பாவைக்கொட்டிலார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
அகநானூறு 336 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் இவரால் பாடப்பட்டதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது.
இவரது பாடல் செய்தி
[தொகு]பரத்தையரில் நயப்புப் பரத்தை, இற்பரத்தை என்னும் பிரிவு உண்டு. நயப்புப் பரத்தையானவள் இப்பாடலில் இற்பரத்தை முன் வஞ்சினம் கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.
துறை கேழ் ஊரன்
[தொகு]- பெண் நீர்நாய் அகன்ற சேம்பு இலையின் கீழ் பறழ் குட்டி போட்டிருந்தது. குட்டிகளுக்கு உணவாக ஆண் நீர்நாய் வளை மீனோடு போராடிக்கொண்டிருந்தது.
நுண் செயல் அங் குடம்
[தொகு]- நுண்ணிய வேலைப்பாடமைந்த அழகிய குடத்துடன் சென்ற மகளிர் நீர் முகந்த பின் நீர்நாயும் வாளைமீனும் போராடியதைப் பார்த்துவிட்டனர். அவற்றின் போராட்டத்துக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை.
குரவை
[தொகு]- எனவே, தங்கள் நிறைகுடத்தை இறக்கிக் காஞ்சிமரத்தடியில் வைத்துவிட்டுக் குரவை ஆடினர். வேடிக்கைப் பார்த்துக்கொண்டே ஆடினர்.
துணங்கை
[தொகு]- நீராட்டு விழாவின்போது ஆணும் பெண்ணும் சேர்ந்து துணங்கை ஆடுவர்.
நெருஞ்சி போல
[தொகு]- நயப்புப் பரத்தை வஞ்சினம் கூறுகிறாள். சுட்டெரிக்கும் சூரியனையே பார்த்துக்கொண்டிருக்கும் நெருஞ்சிப் பூ போல அவனை என்னையே பார்த்துக்கொண்டிருக்கச் செய்வேன் என்கிறாள் நயப்புப்பரத்தை.
பாகனும் கொல்களிறும்
[தொகு]- பாகன் அங்குசத்தால் குத்தும்போது சினம் கொண்டாலும் யானை பாகனுக்கு அடங்கி நடப்பது போல அவனை எனக்கு அடங்கி நடக்கும்படி செய்வேன் என்கிறாள் நயப்புப்பரத்தை.
ஆரியர் படை
[தொகு]என்னைச் சுற்றிச் சுற்றி அவன் வரும்படி செய்யாவிட்டால், ஆரியர் படை உடைந்தது போல என் தோள்வளை உடைந்து விழட்டும் என்று வஞ்சினம் கூறுகிறாள்.
வல்லம் என்னும் ஊருக்குப் புறத்தே இருந்த காவற்காட்டில் ஆரியர்படை தாக்கியது. சோழர் படையானது, வேல், வில் அம்பு, தோல் ஆகிய போர்க்கருவிகளுடன் எதிர்கொண்டது. சோழர்க்கு எதிர்நிற்க முடியாமல் ஆரியர் படை உடைந்தது.