வாடாப் பிரமந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாடாப் பிரமந்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 331 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் இவர் பாடியதாகச் சங்கநூல் கொகுப்பில் காணப்படுகிறது.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

தலைவன் பொருள் தேடச் செல்லவிருப்பதைத் தலைவி தெரிந்துகொண்டு வாடியிருக்கிறாள். தோழி தலைவியைத் தேற்றுகிறாள்:

மாந்தளிர் போன்ற உன் மேனியைப் பசக்கும்படி விட்டுவிட்டுச் செல்ல அவருக்கு என்ன அந்தப் பொருள் சிறந்ததா? இல்லை. எனவே பிரியமாட்டார். நீர் இல்லாமல் மூங்கிலே வாடிப்போயிருகிறதாம். அங்கு வம்பலரைக் கொன்று சாய்க்கும் யானைகள் இருக்குமாம். அங்குள்ள மறவர் கூட்டமாகச் சேர்ந்து அம்பு எய்தாலும் அது பொருட்படுத்தாதாம். இந்த வழியிலா செல்வார்? செல்லமாட்டார், என்கிறாள் தோழி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாடாப்_பிரமந்தன்&oldid=2718226" இருந்து மீள்விக்கப்பட்டது