கருவூர்க் கலிங்கத்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருவூர்க் கலிங்கத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 183 (பாலைத் திணை)

கலிங்கம் என்னும் சொல் ஆடையைக் குறிக்கும். எனவே இவர் துணி வாணிகம் செய்தவர் எனக் கொள்ளலாம். இவரது இயற்பெயர் தெரியவில்லை.

பாடல் தரும் செய்தி[தொகு]

தலைமகன் கூறிச் சென்ற பருவம் வந்துவிட்டது. தலைவன் திரும்பவில்லை. வாக்குத் தவறமாட்டார் என்றாயே, அவர் வரவில்லையே என்று தலைவி தோழியைக் கேட்பதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

உவமை நலம்[தொகு]

யானைகள் கூட்டம் கூட்டமாக மேய்வது போல மழை மேகங்கள் வானத்தில் மேய்கின்றனவாம்.