காவட்டனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

காவட்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் அவரது பாடல்கள் 2 இடம்பெற்றுள்ளன. அவை அகநானூறு 376, புறநானூறு 359 எண் கொண்ட பாடல்கள்.

அகநானூறு 376 பாடல் தரும் செய்தி[தொகு]

நாட்டில் நடனம்[தொகு]

மகளிர் சூடிக்கொள்ளும் வகையில் வேங்கை பூத்தது. அதன் தாதுகள் உதிர்ந்தன. மயில் தோகை விரித்து ஆடியது. வருடை மான் தன் ஆண்துணையோடு கொம்புகளை மாட்டிச் சேர்த்து ஆடியது.

இந்த ஆட்டம் ஆடுகளத்தில் வயிரியர் ஆடுவது போல் இருந்தது.

பிரிவில் தலைவியை வருத்துவன[தொகு]

  • கருத்து மாறுபட்டு அன்னை அயரா நோக்கமொடு கண்காணித்தல்
  • வடந்தைக் காற்று வீசல்
  • பனிக் காலத்தில் ஞாயிறு குடகடலில் மாலையில் குளித்தல்

இப்படிப்பட்ட துன்பத்தை எப்படிப் பொறுத்துக்கொண்டிருக்கிறாய் என்று தோழி கேட்கத் தலைவி விடைகூறும் பாங்கில் இப் பாடல் அமைந்துள்ளது.

பிரிவில் தலைவிக்கு ஆறுதல் தருவன[தொகு]

தலைவன் நாட்டில் பலாப்பழத்தைக் கையில் வைத்துக்கொண்டு கடுவனும் மந்தியும் விளையாடுவது. (இதனைப் பார்க்கும்போது தனைவன் தன்னை நினைத்துகொண்டு வந்து மணந்துகொள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.)

புறநானூறு 359 பாடல் தரும் செய்தி[தொகு]

அந்துவன் கீரன்[தொகு]

சேர மன்னன் அந்துவன் கீரனுக்கு இப்புலவர் கூறும் அறிவுரைகள் இப் பாடலில் உள்ளன.

  • துறை - பெருங்காஞ்சி

நிலையாமை பற்றிக் கூறுவது பெருங்காஞ்சி.

'காடு முன்னினரே நாடு கொண்டோரும்'

பலநாடுகளை வென்ற வேந்தரும் சுடுகாடு சென்றுவிட்டனர். எனவே புகழைத் தேடு என்கிறார் புலவர்.

அறிவுரை[தொகு]

  • 'வசையும் நிற்கும், இசையும் நிற்கும், அதனால், வசை நீக்கி இசை வேண்டு'
  • 'நசை வேண்டாது நன்று மொழி'
  • களிறு, மா, தேர் இரவலர்களுக்குக் குறைவின்றி வழங்கு
"http://ta.wikipedia.org/w/index.php?title=காவட்டனார்&oldid=627837" இருந்து மீள்விக்கப்பட்டது