வீரை வெளியன் தித்தனார்
வீரை வளியன் தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகநானூறு 188 எண் கொண்ட ஒரே ஓரு பாடல் மட்டும் இவரால் பாடப்பட்டதாகச் சங்கத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளது.
வீரை, ஊர்
[தொகு]வீரை எனபது ஊரின் பெயர். வீரை என்னும் சொல் வாழைமரத்தைக் குறிக்கும். 1 2[தொடர்பிழந்த இணைப்பு] எனவே வீரை வாழைமரம் மிகுதியாக இருந்த ஊர் எனலாம். வீரகனூர் என இக்காலத்தில் வழங்கப்படும் ஊரின் சங்ககாலப் பெயர் வீரை என்பர். 3 திருப்பைஞ்ஞீலி என்னும் ஊரின் கோயில் வாழை மரத்தைக் காவல் ம்மரமாகக் (தலவிருச்சமாகக்) கொண்டது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். சொல் மரபை எண்ணிப் பார்க்கும்போது வீரகனூரே பரணிடப்பட்டது 2017-02-20 at the வந்தவழி இயந்திரம் புலவர் வாழ்ந்த ஊர் எனலாம்.
புலவர் பெயர்
[தொகு]புலவர் பெயர் தித்தனார். இவரது தந்தையின் பெயர் வெளியன்.
தந்தை வீரை வெளியனாரும் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.
பாடல் சொல்லும் செய்தி
[தொகு]தலைவன் தலைவியை அடைவதற்காக இரவில் வந்திருக்கிறான். தோழி பகலில் தினைப்புனம் காக்கும் இடத்துக்கு வந்தால் நல்லது என்கிறாள்.
மழை
[தொகு]போர்முரசு போல இடித்ததாம். போர்வாள் போல மின்னிற்றாம்.
தழலை, தட்டை
[தொகு]தினைப்புனம் காக்க உதவும் கருவிகள் இவை. வளைத்து நிமிர்த்தினால் ஒலி எழும்பும் கருவி தழலை. தட்டினால் ஒலி எழும்பும் கருவி தட்டை.
குறியிடம்
[தொகு]தழலும் தட்டையும் கொண்டு ஒலி எழுப்பிக் குறமகள் காக்கும் தினைப்புனத்திலும், மழையே! நீ பெய்வாயா? என்று மழையைக் கேட்பவள் போலத் தலைவியை அடையத் தலைவனுக்குக் குறியிடம் சொல்கிறாள் தோழி.