கொட்டம்பலவனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொட்டம்பலவாணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணை 95 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அம்பலத்தில் மேளம் கொட்டி வாழ்ந்தவர் ஆதலால் இவர் கொட்டு அம்பல வாணர் எனப்பட்டார்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

காதலன் தன் காதலியைத் தன்னால் மறக்க இயலாது என்று தன்னுடன் இருக்கும் பாங்கனிட்ம் சொல்கிறான்.

அவள் குன்றத்து வாழ்பவள்.
அந்தக் குன்றத்தில் மந்தி நன் குட்டியை வைத்துக்கொண்டு மூங்கிலை வளைத்து விசித்தெழுந்து பாறைமேல் தாவும். அதைப் பார்த்துச் சிறுவர்கள் கை கொட்டித் தாளம் போடுவர்.
அந்தத் தாவுதல் கழைக் கூத்தாடும் பெண் ஆடுவதுபோல் இருக்கும்.
அங்கே மிளை என்னும் காவல்காட்டின் நடுவில் இருக்கும் சிற்றூரில் வாழ்பவள் அவள்.
அந்தக் கொடிச்சியின் கூந்தல் மணக்கும்.
அவ்வூர் நம் கையில் இருப்பதுபோல் அண்மையில்தான் உள்ளது.
அவளை என் மனத்திலிருந்து கைவிடகுடியாது - என்கிறான் தலைவன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டம்பலவனார்&oldid=685351" இலிருந்து மீள்விக்கப்பட்டது