மார்ச் 2014
<< | மார்ச் 2014 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | 31 | |||||
MMXXIV |
மார்ச் 2014 (March 2014) , 2014 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதமாகும். இம்மாதம் ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி பங்குனி மாதம் மார்ச் 15, சனிக்கிழமை தொடங்கி, ஏப்ரல் 13 ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது.இசுலாமிய நாட்காட்டியின் படி கிஞ்சுரா 1435 ஆம் ஆண்டின் "ஜமா அத்துல் அவ்வல்" மாதம் மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மார்ச் 30 ஞாயிறு அன்று முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- மார்ச் 1 - கோச் செங்கட் சோழ நாயனார் குருபூசை
- மார்ச் 4 - சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பிறப்பு
- மார்ச் 20 - காரைக்காலம்மையார் குருபூசை
- மார்ச் 28 - தண்டியடிகள் நாயனார் குருபூசை
- மார்ச் 31 - தெலுங்கு வருடப்பிறப்பு
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- மார்ச் 29:
- இலங்கையின் தெற்கு, மற்றும் மேற்கு மாகாண சபைகளுக்கு தேர்தல் இடம்பெற்றது. (தினகரன்)
- இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கும் 58 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (தினகரன்)
- மார்ச் 28:
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிருத்வி-2 அணு ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. (புதியதலைமுறை)
- இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார். (டெய்லிமிரர்)
- உக்ரைனுக்கு வழங்கப்படும் எரிவாயுவின் விலையை 80% இனால் அதிகரிப்பதாக உருசியா அறிவித்தது. (ராய்ட்டர்சு)
- இந்திய வான்படையின் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் மத்தியப் பிரதேசம், குவாலியர் அருகே வீழ்ந்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். (என்டிரிவி)
- கொரியப் போரில் இறந்த 437 சீனப் படையினரின் உடல்களை சீனாவுக்கு அனுப்புவதற்கு தென் கொரியா முடிவு செய்தது. (யொன்காப்)
- மார்ச் 27:
- இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் ஜநா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உட்பட 12 நாடுகள் வாக்கெடுப்பிலிருந்து விலகியிருந்தன. (பிபிசி)
- ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கருதப்படும் போர்க்குற்றங்களை விசாரணை செய்ய பன்னாட்டு விசாரணைக் குழுவை அமைக்க ஜநா மனித உரிமைகள் பேரவை அங்கீகரித்தது. (அல்ஜசீரா) (வாசிங்டன் போஸ்ட்) (பிபிசி)
- ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்து, இந்திய நடுவண் அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. (தமிழ்மிரர்)
- பன்னாட்டு நாணய நிதியத்திடம் இருந்து நிதியுதவி பெறும் பொருட்டு இயற்கை எரிவளியின் விலையை 50% இனால் அதிகரிக்க உக்ரைன் முடிவு செய்தது. (பிபிசி)
- கிரிமியாவை உருசியா இணைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தீர்மானம் இயற்றியது. (பிபிசி)
- பிலிப்பீன்சில் மோரோ இசுலாமிய விடுதலை முன்னணிப் போராளிக் குழுவுடன் அந்நாட்டு அரசு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. (அல்ஜசீரா)
- மார்ச் 26:
- வடகொரியா இரண்டு நடுத்தர ஏவுகணைகளை சோதித்தது. (அல்ஜசீரா)
- எசுத்தோனியாவின் பிரதமராக 34 வயது தாவி ரோய்வாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஈஆர்ஆர்)
- சூரியனுக்கு மிகத் தூரத்தில் பனிக்கட்டியாலான குறுங்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 25:
- ஐக்கிய அமெரிக்காவின் வாசிங்டனில் ஓசோ நகரில் மார்ச் 22 இல் இடம்பெற்ற மண்சரிவில் இறந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது. (வாசிங்டன் போஸ்ட்)
- தாய்லாந்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கு ஒன்றில் வீழ்ந்ததில் 30 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- 2012 ஆம் ஆண்டில் ஏழு மில்லியன் மக்களின் இறப்பிற்கு வளி மாசடைதல் காரணமாக இருந்தது என உலக சுகாதார அமைப்பு கணித்துள்ளது. (டெலிகிராப்)
- மார்ச் 24:
- லண்டனின் இன்மர்சாட் செய்மதி நிறுவனம் கொடுத்த தகவல்களின் படி மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டதாகவும், இதில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை என்று மலேசிய பிரதமர் நஜீப் துன் ரசாக் அதிகாரபூர்வமாக அறிவித்தார். (சீஎனென்)
- உருசியாவின் கிரிமியா மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சோச்சி நகரில் இடம்பெறவிருந்த ஜி8 நாடுகளின் 40வது உச்சி மாநாடு அங்கு இடம்பெறமாட்டாதென ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் அறிவித்துள்ளார். (பிபிசி)
- இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையில் சிறப்பு இராணுவக் குழுவினர் சுற்றி வளைத்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் அமைப்பை மீள ஒருங்கிணைத்து கட்டியெழுப்பும் நோக்கில் வடக்கில் தலைமறைவாகியுள்ள கோபி என்பவரின் முக்கிய சகா மாணிக்கம் குவான் என்பவர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (தமிழ்வின்), (தினகரன்)
- யெமன் நாட்டில் இராணுவ சாவடி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- கிரிமியாவில் இருந்து உக்ரைனியப் படையினரை வெளியேறுமாறு உக்ரைனிய இடைக்கால அரசுத்தலைவர் அலெக்சாந்தர் துர்ச்சீனொவ் உத்தரவிட்டார். " (பிபிசி)
- 239 பேருடன் காணமல் போன மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 இன் சிதைவுகள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்டதாக சீன வான் படையினர் கூறியுள்ளனர். (கூரியர் மெயில்)
- காவல்துறையினரைத் தாக்கியமை போன்ற பல குற்றச்சாட்டுகளுக்காக எகிப்தின் முன்னாள் தலைவர் முகம்மது முர்சியின் ஆதரவாளர்கள் 528 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- மார்ச் 23:
- துருக்கியின் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த சிரிய இராணுவ விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. தமது வான்பரப்பிலேயே இவ்விமானம் சுடப்பட்டதாக சிரியா தெரிவித்துள்ளது. (ஏபி)
- கென்யாவில் கிறித்தவக் கோவில் ஞாயிறு ஆராதனையில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டன, பலர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- கினியில் எபோலா தீநுண்ம நோய் பரவியதில் 59 பேர் உயிரிழந்தனர். (ஏஏபி)
- மார்ச் 22:
- இலங்கையில் விடுதலைப் புலிகள் மீண்டும் அணிசேர முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி, வன்னி, யாழ்ப்பாணம் பகுதிகளில் இராணுவத்தினர் சுற்றிவளைத்துத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். (பிபிசி)
- உருசியப் படையினர் கிரிமியாவின் மேற்குப் பகுதியில் நோவோபெதோரிக்கா என்ற உக்ரைனிய வான்தளததைக் கைப்பற்றினர். (பிபிசி)
- ஆஸ்திரேலியாயின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சிறிய-ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் உயிரிழந்தனர். (த கார்டியன்)
- அதிகாரபூர்வமற்ற இணைய வாக்கெடுப்பு ஒன்றில் இத்தாலியின் வெனிட்டோ பிராந்தியம் இத்தாலியில் இருந்து தனியே பிரிந்து செல்வதற்கு ஆதரவான வாக்குகள் வழங்கப்பட்டன. (டெய்லிமெயில்)
- மார்ச் 21:
- கிரிமியாவை உருசியாவுடன் இணைப்பதற்கான முடிவுக்கு உருசிய மேலவை ஒப்புதல் அளித்தது. (ஏபி)
- கிரிமியாவை உருசியாவுடன் இணைப்பதற்கான முடிவுக்கு விளாதிமிர் பூட்டின் கையெழுத்திட்டார். (ராய்ட்டர்சு)
- உருசியாவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. (ஏஎஃப்பி)
- 239 பேருடன் மறைந்த மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 இனைக் கண்டுபிடிக்க தெற்கு இந்தியப் பெருங்கடலில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற தேடுதல்களில் எவ்விதத் தடயமும் கிடைக்கவில்லை. (பிபிசி)
- இலங்கையின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் 10 மாணவர்கள் காயமடைந்தனர். (பிபிசி)
- மார்ச் 20:
- கிரிமியாவை இணைக்க உருசியா முடிவெடுத்ததை அடுத்து அந்நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தடைகளை அறிவிக்கும் என செருமனியின் தலைவர் அங்கெலா மேர்க்கெல் அறிவித்தார். (பிபிசி)
- உருசியா மீது அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா மேலும் தடைகளை அறிவித்தார். (ராய்ட்டர்சு)
- மும்பையில் புறநகர் தொடருந்து ஒன்றின் 5 பெட்டிகள் தடம்புரண்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். 9 பேர் காயமடைந்தனர் (தினமணி)
- இரு வாரங்களுக்கு முன் காணாமல் போன மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 இன் உடைந்த இரு பாகங்கள் என நம்பப்படும் பொருட்களை தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் தமது செய்மதிகள் கண்டுபிடித்துள்ளதாக ஆத்திரேலியப் பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார். (ஸ்கை நியூஸ்), (ராய்ட்டர்சு)
- மார்ச் 19:
- கிரிமியாவின் செவஸ்தபோல் நகரில் உருசிய ஆதரவாளர்கள் அங்குள்ள உக்ரைனியக் கடற்படைத் தளத்தைக் கைப்பற்றி உருசியக் கொடியைப் பறக்க விட்டனர். (பிபிசி)
- இலங்கையில் பயங்கரவாதத் தடுப்பு சட்டங்களின் கீழ் இரு நாட்களுக்கு முன் கைதான அருட்தந்தை பிரவீன் மகேசன், ருக்கி பெர்னாண்டோ ஆகிய இரு மனித உரிமை ஆர்வலர்கள் விடுவிக்கப்பட்டனர். (பிபிசி)
- இலங்கை, முல்லைத்தீவு, மூங்கிலாறுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் பெப்ரவரி 27 இல் மீட்கப்பட்ட 9 எலும்புக்கூடுகளும் பூநகரியைச் சேர்ந்த 3 குடும்பங்களின் உறுப்பினர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. (தமிழ்வின்)
- இந்திய எல்லைப் பகுதியில் மீண்டும் அத்துமீறி ஊடுருவ சீனப் படையினர் எடுத்த முயற்சியை இந்தியப் படையினர் தடுத்து நிறுத்தினர். (தினகரன்)
- இசுரேலிய விமானப்படை சிரிய இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியதில் ஒரு சிரிய இராணுவ வீரர் கொல்லப்பட்டார். 7 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- மார்ச் 18:
- ஆப்கானித்தான், மாய்மானா நகரில் இடம்பெற்ற ரிக்சா தற்கொலைத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். (எல்லே டைம்சு)
- கிரிமியக் குடியரசை உருசியாவுடன் இணைக்கும் உடன்பாடு உருசிய, கிரிமிய நாடாளுமன்றங்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்டது. (வாசிங்டன் போஸ்ட்)
- திரான்சுனிஸ்திரியா உருசியக் குடியரசில் இணைய விண்ணப்பித்தது. (பிபிசி)
- கிரிமியாவின் தலைநகரில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் உக்ரைனிய இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். (ராய்ட்டர்சு)
- சனிக் கோளின் டைட்டான் துணைக்கோளில் திரவ அலைகள் காணப்படுவதை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளன. வெளி உலகில் திரவ அலை கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும். (பிபிசி)
- மார்ச் 17:
- ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறையின் தகவலின் படி லாஸ் ஏஞ்சலசில் 4.4 அளவு நிலநடுக்கம் பதிவானது. (பிபிசி)
- கிரிமியக் குடியரசு அறிவிக்கப்பட்டது. (ஏபி)
- சிலியில் 6.7 ஆற்றல் மிக்க நிலநடுக்கம் ஏற்பட்டது. (சிஎன்என்)
- கிரிமியா உக்ரைனில் இருந்து விலக மக்கள் பெருமளவு வாக்களித்ததை அடுத்து உருசியாவுடன் இணைய கிரிமிய நாடாளுமன்றம் தீர்மானம் இயற்றியது. (விக்கிசெய்தி), " (பிபிசி)
- மார்ச் 16:
- ஈராக்கில் இடம்பெற்ற தொடர் கார் குண்டுவெடிப்புகளில் 19 பேர் கொல்லப்பட்டனர். (மாலைமலர்)
- கிரிமியா உக்ரைனில் இருந்து வெளியேறி, மீண்டும் உருசியாவுடன் இணைய வேண்டுமா எனக் கோரி கிரிமியாவில் பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. (பிபிசி)
- உருசியாவின் சோச்சி நகரில் 2014 மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன. (CBC) (பிபிசி)
- மார்ச் 15:
- இலங்கையின் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் காலியில் இருந்து மாத்தறை வரையான இரண்டாம் பகுதி திறக்கப்பட்டது. (ஹிரு நியூஸ்
- யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையே வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற துடுப்பாட்டப் போட்டியின் போது ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒரு முன்னாள் மாணவர் உயிரிழந்தார். (சண்டே டைம்சு)
- இந்த தலைமுறைக்கான சிறந்த வீரர் விருதை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பெற்றார். (மாலைமலர்)
- ஒரு வாரத்தின் முன்னர் 239 பேருடன் காணாமல் போன மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 கடத்தப்பட்டு, மேலும் ஏழு மணி நேரம் வேறு திசையில் பறந்துள்ளதாக மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.(பிபிசி)
- மார்ச் 14:
- இலங்கையின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஐநா மனித உரிமைப் பேரவையில் இரண்டு உரைகளை நிகழ்த்தினார். (தமிழ்நெட்), (தமிழ்நெட்)
- மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 விமானத்தைத் தேடும் பணிகள் இந்தியப் பெருங்கடலிலும் ஆரம்பிக்கப்பட்டன. (விக்கிசெய்தி), (பிபிசி)
- இலங்கைக் கடற்பரப்பிற்குள் இரு வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுதலை செய்தது. (தமிழ்மிரர்)
- கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற அதிவேக தொடருந்து மருதானைக்கு அருகில் தடம் புரண்டது. எவரும் காயமடையவில்லை. (தமிழ்மிரர்)
- இந்தியாவின் மும்பை நகரில் 7-மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். (தி இந்து)
- 1994 ருவாண்டா இனப்படுகொலைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக ருவாண்டாவின் முன்னாள் இராணுவத் தலைவர் பாஸ்கல் சிம்பிகாங்குவா என்பவருக்கு பிரான்சிய நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. (பிபிசி)
- மார்ச் 13:
- காசாவில் இருந்து இசுரேலுக்கு குறைந்தது 40 ஏவூர்திகள் ஏவப்பட்டன. இவற்றுக்கு பாலத்தீன இசுலாமிய ஜிகாத் இயக்கம் உரிமை கோரியுள்ளது. (ஜே-போஸ்ட்)
- மார்ச் 8 இல் காணாமல் போன மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 ராடார்களில் இருந்து மறைந்த பின்னரும் பல மணி நேரம் பறந்துள்ளதாக அமெரிக்க ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. (அல்ஜசீரா)
- சப்பானின் கியூஷூவிற்கு அருகில் 6.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (சிகாகோ ட்றிபியூன்)
- இலங்கையின் கிளிநொச்சியில் விபூசிகா (13) என்ற சிறுமியும் அவரது தாயாரும் இராணுவத்தால் கடத்தப்பட்டு வவுனியா காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். காணாமல் போனோர் தொடர்பிலான பல போராட்டங்களில் இச்சிறுமி கலந்து கொண்டிருந்தார். (தமிழ்வின்), (சேனல்4)
- மார்ச் 12:
- மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370: 239 பேருடன் தொலைந்த விமானத்தைத் தேடும் பணிகள் ஆறாவது நாளாகத் தொடர்ந்தது. (பிபிசி)
- நியூயார்க் நகரில் அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- மாக்னா கார்ட்டாவுக்கு நிகரான உலகளாவிய வலை அமைப்பை நிறுவ சேர் டிம் பேர்னேர்ஸ்-லீ கோரிக்கை விடுத்தார். (பிபிசி)
- இந்திய காஷ்மீரில் பனி பெய்து ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் பலி (மாலை மலர்)
- சுவீடன் வானொலி வெளிநாட்டுச் செய்தியாளர் நில்ஸ் ஓனர் ஆப்கானித்தான், காபூல் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டார். (வாசிங்டன் போஸ்ட்)
- இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தில் மாவோயிசத் தீவிரவாதிகளின் தாக்குதலில் 16 காவல்துறையினர் உயிரிழந்தனர். (விக்கிசெய்தி), (டைம்)
- நியூசிலாந்தின் காலனித்துவக்கால தேசியக் கொடியை மாற்றுவதற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. (கார்டியன்)
- அத்திலாந்திக் அடிமை வணிகக் காலத்தில் இடம்பெற்ற சேதங்களுக்கு நட்டஈடு கோரி 14 கரிபியன் நாடுகள் ஐக்கிய இராச்சியம், பிரான்சு, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளன. (டைம்)
- வடகொரியா தேர்தலில் 99.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது (சேனல் நியூஸ் ஆசியா)
- இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 42 பேரை 4வது முறையாக யாழ் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டனர். (தினமணி)
- மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் அதனோடு மீட்கப்பட்ட பொருட்களை ஆய்வுக்குட்படுத்துவதற்கு மன்னார் மாவட்ட நீதிமன்றம் அனுமதியளித்தது. (4 தமிழ் மீடியா)
- மார்ச் 11:
- கேரளாவின் 22வது ஆளுநராக சீலா தீக்சித் பொறுப்பேற்றார். (தி இந்து)
- இலங்கைக் காவல்துறையினர் பணிக்குச் செல்லும் போது கைத்துப்பாக்கியைக் கொண்டு செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. (தினகரன்)
- மார்ச் 10:
- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண வடக்கு கடல்பகுதிகளில் 6.9 ரிக்டர் அளவில் ஆற்றல் வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. (மெயில் ஆன்லைன்)
- கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் இருக்கும் இலங்கையின் வட மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். (தமிழ்வின்)
- 2014 உலகக் கோப்பை போட்டிக்கான கால்பந்து மைதானம் அமசோனியா அரங்கம் பிரேசிலில் உள்ள மானஸ் நகரில் திறக்கப்பட்டது. (புதிய தலைமுறை)
- பன்னாட்டு இருபது20 துடுப்பாட்ட அணிகள் தர வரிசையில் இலங்கை அணி 129 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது. (ஐசிசி)
- இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 29 பேருக்குமான விளக்கமறியல் 3வது முறையாக நீடிக்கப்பட்டுள்ளது. (அததெரண)
- இலங்கை இராணுவத்தின் புதிய போர்க்குற்ற ஆதார ஆவண காணொளியொன்றினை சனல் - 4 வெளியிட்டுள்ளது.(சேனல்-4)
- ஐநா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை மீதான பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணைக்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரன் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். (டெய்லிமிரர்)
- சிரியாவில் 2013 டிசம்பரில் கடத்தப்பட்ட 16 கிறித்தவ கன்னியாஸ்திரிகள் விடுவிக்கப்பட்டனர். (பிபிசி)
- மார்ச் 9:
- ஐ.சி.சி ஒருநாள் போட்டிக்கான சிறந்த துடுப்பாட்டக்காரர்களுக்கான தரவரிசையில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்(தெ டைம்ஸ் ஒப் இந்திய)
- மாலைதீவில் தேர்தல் ஆணையாளர்கள் நால்வருக்கு "உத்தரவுகளைக் கடைப்பிடிக்காததால்" ஆறு மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. (பிபிசி)
- யெமனில் ஆப்பிரிக்கக் குடியேற்றக்காரர்கள் பயணம் செய்த படகு கவிழ்ந்ததில் 42 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)
- ஈராக்கின் ஹில்லா நகரில் காவல் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். (விஓஏ)
- சப்பான் ஏர்லைன்சின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று எண்ணெய் அமுக்கம் குறைந்ததை அடுத்து ஹவாய், ஹொனலுலுவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. (சிபிஎஸ்)
- இலங்கையில் மும்மொழி கொள்கையை அமுலாக்கும் வேலைத்திட்டத்துக்காக ஜப்பான் அரசாங்கம் 100 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது ( ஹிரு நியூஸ் )
- உலக அளவில் நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் பங்கு பெறுவது தொடர்பான 189 நாடுகள் அடங்கிய பட்டியலில் 111வது இடத்தில் இந்தியா உள்ளது. (தினத் தந்தி)
- ஆப்கானித்தான் துணை அதிபர் முகமது காசிம் ஃபாகிம் காலமானார். (நியூ யோர்க் டைம்ஸ்)
- மார்ச் 8:
- கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கி 239 பேருடன் புறப்பட்ட மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370, தாய்லாந்து வளைகுடா வான்பரப்பில் காணாமல் போனது. (பிபிசி)
- இலங்கையில் 11 கிமீ நீள கொட்டாவை – கடுவெலை அதிவேக நெடுஞ்சாலை திறந்து வைக்கப்பட்டது. (தினகரன்)
- ஆசியக் கிண்ணம் 2014: இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாக்கித்தான் அணியை 5 இலக்குகளால் வென்று ஆசியக் கிண்ணத்தை ஐந்தாவது தடவையாகப் பெற்றுக் கொண்டது. (டெய்லிமிரர்)
- மார்ச் 7:
- இந்தியாவின் மும்பை நகரில் இந்தியக் கடற்படைக் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் கடற்படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர். (பிபிசி)
- பாக்கித்தானிய நடிகை சனா கான், கராச்சியிலிருந்து ஐதராபாத் சென்றுகொண்டு இருந்தபோது ஐதராபாத் அருகே நடந்த கார் விபத்தில் இறந்தார். (த டைம்ஸ் ஒப் இந்தியா)
- மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மீதான ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டில் இருந்து அவரை விடுவித்திருந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பை அந்நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்து தீர்ப்பளித்து, 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. (பிபிசி)
- கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் ஜேர்மைன் கட்டாங்கா ஒரு போர்க் குற்றவாளி என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. (பிபிசி)
- மார்பகப் புற்றுநோய் பீடித்தவர்களுக்கு உயிர்ச்சத்து டி நோயைத் தணிக்க உதவும் என கலிபோர்னியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (சயன்சு ரெக்கோர்டர்)
- முசுலிம் சகோதரத்துவம், அல் காயிதா அமைப்புகளை பயங்கரவாத இயக்கங்கள் என சவூதி அரேபியா அறிவித்தது. (வாசிங்டன் போஸ்ட்)
- பிரபல பாடகர் பிராண்டன் ஹோவர்டு மைக்கேல் ஜாக்சனின் உயிரியல் வாரிசு என டிஎன்ஏ பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. (தினத்தந்தி)
- மார்ச் 6:
- அணுப் பிளவு உபகரணமொன்றை தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய உலகிலேயே மிகவும் வயது குறைந்தவர் என்ற பெயரை பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவனான ஜெமி எட்வார்ட் வீரகேசரி
- உலகிலேயே வயதான பெண்ணான ஜப்பானின் மிசாவ் ஒகாவா தனது 116வது பிறந்த நாளைக் கொண்டாடினார். (ஜப்பான் டுடே)
- ஆப்கானிஸ்தானின் லோகார் பிரதேசத்தில் நேட்டோப்படை விமான வீச்சில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானர்.(தினத்தந்தி)
- இலங்கையின் போர்க்குற்றம் குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவிபிள்ளை அறிக்கைக்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் (மாலை மலர் )
- இலங்கை ராணுவ வீரர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் பயிற்சி அளிக்க ஆலோசனை நடத்தப்பட்டது தின மலர்
- உக்ரைனின் தெற்கேயுள்ள கிரிமியா தன்னாட்சிக் குடியரசின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமியாவை உருசியாவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்தனர். மார்ச் 16 இல் பொது வாக்கெடுப்பு நடைபெறும் என நாடாளுமன்றம் அறிவித்தது. (பிபிசி)
- பனாமாவை அமெரிக்காவின் கையாள் எனக் குற்றம் சாட்டி அந்நாட்டுடனான தூதரக உறவை வெனிசுவேலா முறித்துக் கொண்டது. (சிஎன்என்)
- முஅம்மர் அல் கதாஃபியின் மகன் சாதி அல்-கதாஃபியை நைஜர் நாடு லிபியாவுக்கு நாடு கடத்தியது. (பிபிசி)
- ஐக்கிய அமெரிக்காவில் எச்.ஐ.வி நோயுடன் பிறந்த இரண்டாவது குழந்தை ஆய்வாளர்களின் முயற்சியில் குணமடைந்தது. (நியூயொர்க் டைம்சு)
- மார்ச் 5:
- ஐநா மனித உரிமைப் பேரவையில் இலங்கையில் போர்க்குற்றங்கள் பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, மொண்டெனேகுரோ, மக்கெடோனியா, மொறீசியசு ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த வரைவை அமெரிக்கா, உறுப்பு நாடுகளிடம் சமர்ப்பித்தது. (தமிழ்மிரர்)
- இந்தியப் பொதுத் தேர்தல், 2014 ஏப்ரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. (தி இந்து)
- ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 பேரை விடுவிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத்தடையை மார்ச் 26ம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. (தமிழ்வின்)
- ஆசிட் பாதிப்பாளர்களுக்காக போராடும் இந்தியாவின் டெல்லியை சேர்ந்த இளம் பெண் லட்சுமிக்கு சர்வதேச வீரப்பெண் விருது(என் டி டி வி )
- 1850களிலிருந்து 1950கள் வரை எடுக்கப்பட்ட இந்தியப் பெண்களின் புகைப்படக் கண்காட்சி ஒன்று டில்லியில் நடைபெறுகிறது (பி பி சி தமிழ் )
- இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அதனை இலங்கை உணர்ந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றும் தென்னாபிரிக்கா ஐநா மனித உரிமைப் பேரவையில் வலியுறுத்தியுள்ளது. (டெய்லி மிரர்)
- கேரள மாநில கவர்னராக முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். (தினகரன்)
- மார்ச் 4:
- இலங்கையில் யாழ்தேவி தொடருந்து சேவை கிளிநொச்சியில் இருந்து பளை வரை நீடிக்கப்பட்டது. (தமிழ்மிரர்)
- ஹமாஸ் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்றும் அவ்வியக்கம் எகிப்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக எகிப்திய நீதிமன்றம் அறிவித்தது. (DW) (பிசினெஸ் டைம்சு)
- மார்ச் 3:
- பாக்கித்தான் தலைநகர் இசுலாமாபாதில் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் சிறுவர்கள் துப்பாக்கிகளால் சுட்டதில் 11 பேர் கொல்லப்பட்டனர், 22 பேர் காயமடைந்தனர். (அசோசியேட்டட் பிரஸ்)
- ஃபோர்ப்ஸ் இதழின் உலகப் பணக்காரகளின் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் முதலாமிடத்தைப் பிடித்தார். (பிபிசி)
- ஆஸ்கர் பிஸ்டோரியஸ் மீதான வழக்கு பிரிட்டோரியாவில் ஆரம்பமானது. (நியூயோர்க் டெய்லி நியூஸ்)
- மார்ச் 2:
- நைஜீரியாவில் இடம்பெற்ற பல குண்டுத் தாக்குதலில் 100 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். (வான்கார்டு)
- அகாதமி விருது வழங்கும் வைபவம் ஹாலிவுடில் டொல்பி அரங்கில் இடம்பெற்றது. (எல்லே டைம்சு)
- தாய்லாந்தில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது. (எஸ்பிஎஸ்)
- மார்ச் 1:
- கிரிமியாவை உருசியப் படைகள் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. உக்ரைனில் இராணுவத் தலையீட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் உருசியாவின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. (ருசியா டுடே), (சிஎன்என்) (பிபிசி), (ஏபி)
- கிரிமியாவின் நடைமுறைப்படியான பிரதமர் செர்கே ஆக்சியோனொவ் தமது பகுதியின் படைத்துறையைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக அறிவித்தார். மேலும் உதவி கோரி உருசிய அரசுத்தலைவர் பூட்டினுக்கு செய்தி அனுப்பியுள்ளார். (ஏபி)
- ஆப்கானித்தானில் இளம்பிள்ளவாதத் தடுப்பு மருந்தேற்றல் குழு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- பாக்கித்தான் தாலிபான்கள் ஒரு மாத போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். (ராய்ட்டர்சு)
- ஆப்கானித்தான் போரில் ஆத்திரேலியாவின் பங்களிப்பு இன்றுடன் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது. (ஏபிசி)
- கொழும்பில் மார்ச் 1, 2 இல் நடத்தப்படவிருந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்டது. (தமிழ்வின்)
இறப்புகள்
[தொகு]- மார்ச் 7 - பாலாஜி, திரைப்பட, சின்னத்திரை நகைச்சுவை நடிகர்
- மார்ச் 20 - குஷ்வந்த் சிங், இந்திய எழுத்தாளர் (பி. 1915)
- மார்ச் 25 - தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (பி. 1925)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்