கிளிநொச்சி தொடருந்து நிலையம்
கிளிநொச்சி Kilinochchi | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இலங்கை தொடருந்து நிலையம் | |||||||||||
![]() | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | கிளிநொச்சி இலங்கை | ||||||||||
உரிமம் | இலங்கை ரெயில்வே | ||||||||||
தடங்கள் | வடக்குப் பாதை | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலை | இயங்குகிறது | ||||||||||
வரலாறு | |||||||||||
மறுநிர்மாணம் | 14 செப்டம்பர் 2013 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
கிளிநொச்சி தொடருந்து நிலையம் (Kilinochchi railway station, கிளிநொச்சி புகையிரத நிலையம்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து 1990 ஆம் ஆண்டு யூலை முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது.[1] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கி.மீ. நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[2]
2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை பயணிக்கின்றன.[3]
சேவைகள்
[தொகு]2013 செப்டம்பர் 14 முதல் நாள்தோறும் கொழும்பில் இருந்து கிளிநொச்சி வரை யாழ்தேவி, நகரிடை விரைவு வண்டி (இன்டர்சிட்டி), மற்றும் இரவுத் தபால் வண்டி ஆகிய பயணிகள் சேவைகள் இடம்பெறுகின்றன.[4]
- தினமும் காலை 5.45க்கு கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் யாழ்தேவி பகல் 12.35 மணிக்கு கிளிநொச்சியை சென்றடைகின்றது.
- தினமும் காலை 6.00 மணிக்கு யாழ்தேவி கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு பகல் 1.00 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைகின்றது.
- தினமும் காலை 6.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் நகரிடை விரைவு வண்டி காலை 11.50 க்கு கிளிநொச்சியை சென்றடையும். இதே வண்டி பிற்பகல் 2.10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு இரவு 7.15 க்கு கொழும்பு கோட்டையை வந்தடைகின்றது.
- இரவு 8.15 க்கு புறப்படும் தபால் பயணிகள் வண்டி அதிகாலை 4.10 க்கு கிளிநொச்சியை சென்றடைகின்றது. இரவு 8.30 க்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும் தபால் வண்டி அதிகாலை 4.35 க்கு கொழும்பு கோட்டையை வந்தடைகின்றது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், செப்டம்பர் 14, 2013
- ↑ "கிளிநொச்சி - பளை ரயில் சேவை நேற்று சுபவேளையில் ஆரம்பம்". தினகரன் (இலங்கை). 5 மார்ச் 2014. Retrieved 5 மார்ச் 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "யாழ்தேவி ஜுனில் யாழ்.செல்லும்: குமார் வெல்கம". தமிழ்மிரர். 5 மார்ச் 2014. Retrieved 5 மார்ச் 2014.
- ↑ 4.0 4.1 கொழும்பு, கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில் சேவைகள் பரணிடப்பட்டது 2013-09-17 at the வந்தவழி இயந்திரம், தினகரன், செப்டம்பர் 13, 2013