உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ் தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ் தேவி Yal Devi යාල් දේවී
இலங்கையின் வடக்கு தொடருந்துப் பாதை
கண்ணோட்டம்
வகைநகரங்களுக்கிடையான தொடருந்து சேவை
நிகழ்வு இயலிடம்இலங்கை
முதல் சேவைஏப்ரல் 23, 1956[1]
கடைசி சேவைஇன்று
நடத்துனர்(கள்)இலங்கை புகையிரதம்
முந்தைய நடத்துனர்(கள்)இலங்கை அரசு புகையிரதம்
வழி
தொடக்கம்கோட்டை (கொழும்பு)
முடிவுகாங்கேசன்துறை (இடைநிறுத்தம்); தற்காலிகமாக யாழ்ப்பாணம் வரை
சேவைகளின் காலஅளவுதினமும்
தொடருந்தின் இலக்கம்4001 (கொழும்பு கோட்டை-யாழ்ப்பாணம்)
4002 (யாழ்ப்பாணம்-கொழும்பு கோட்டை)[2]
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை66
வழிகாட்டுக் குறிப்புப் படம்
காங்கேசன்துறை
மாவிட்டபுரம்
தெல்லிப்பழை
மல்லாகம்
சுன்னாகம்
இணுவில்
கோண்டாவில்
கொக்குவில்
யாழ்ப்பாணம்
புங்கங்குளம்
உப்பாறுக் கடற்காயல்
நாவற்குழி
தச்சன்தோப்பு
சாவகச்சேரி
சங்கத்தானை
மீசாலை
கொடிகாமம்
மிருசுவில்
எழுதுமட்டுவாள்
பளை
ஆனையிறவு
சுண்டிக்குளம் கடல் நீரேரி
பரந்தன்
கிளிநொச்சி
முறிகண்டிக் கோவில்
முறிகண்டி
மாங்குளம்
புளியங்குளம்
ஓமந்தை
தாண்டிக்குளம்
வவுனியா
ஈரப்பெரியகுளம்
புணாவை
மன்னார் தொடருந்துப் பாதை தலைமன்னாருக்கு
மதவாச்சி சந்தி
மதவாச்சி
மெதகமை
பரசங்கவேவா
சாலியபுரம்
மிகிந்தளை
கிளைத் தடம் மிகிந்தளைக்கு
மிகிந்தளை சந்தி
அனுராதபுரம்
அனுராதபுரம் புதிய நகர்
அருவி ஆறு
சிராவஸ்திபுரம்
தலாவை
தம்புத்தேகமை
சேனரத்கமை
கல்கமுவை
அம்பான்பொலை
இரந்தெனிகமை
மாகோ
மாகோ சந்தி
திம்பிரியாகெதர
நாகொல்லாகமை
இரியாலை
கணேவத்தை
தெதரு ஆறு
வெல்லாவை
முத்தெட்டுகலை
குருணாகல்
நையிலியா
பொத்துகெர
தளவெத்தகெதர
கிரம்பே
பதுளைக்கு
பொல்காவலை சந்தி
கொழும்பு கோட்டைக்கு

யாழ் தேவி (Yal Devi) கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் தொடருந்து சேவையாகும்.

இச்சேவை 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது. இது இராகமை, பொல்காவலை, மாகோ சந்தி, அனுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து செல்கின்றது. காலை 5.45 இற்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி, பிற்பகல் 1.15 இற்கு கொழும்பை வந்தடைந்தது. இதேபோல காலை 5.45 இற்கு கொழும்பில் இருந்து புறப்பட்ட யாழ்தேவி பிற்பகல் 1.15 இற்கு காங்கேசன்துறையை சென்றடைந்தது.

தற்போது இச்சேவை யாழ்ப்பாணம் வரை இடம்பெறுகின்றது. 1990 சூன் 12 ஆம் நாள் திகதி யாழ்தேவி தொடருந்து முறிகண்டியில் வைத்து கண்ணிவெடிக்கு இலக்காகியது. இதனை அடுத்து காங்கேசன்துறை வரையான சேவை நிறுத்தப்பட்டது. எனினும் மதவாச்சி வரை இச்சேவை இடம் பெற்றது. பின்னர் அது வவுனியா வரை நீடிக்கப்பட்டது.

2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கைப் படைத்துறை அறிவித்ததை அடுத்து இச்சேவையை மீண்டும் யாழ்ப்பாணம் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இலங்கை அரசு அறிவித்தது. வடக்கு தொடருந்துப் பாதையை கடனுதவியின் அடிப்படையில் அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியாவின் ரயில்வே அமைச்சின் கீழுள்ள இர்க்கொன் நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்தது.

இதன் முதற்கட்டமாக யாழ்தேவி புகையிரதம் தாண்டிக்குளத்தை சென்றடைந்தது. இதனையடுத்து யாழ்தேவி 2011 மே 27 அன்று ஓமந்தையை சென்றடைந்தது.

பின்னர் கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது.[3] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கிமீ நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[4] 2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை சென்றது.[5]

2014ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் நாளன்று இதன் சேவை அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் பளை முதல் யாழ்ப்பாணம் வரை தொடங்கி வைக்கப்பட்டது.[6] யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை வரையிலான 18 கிமீ தூரப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Island". Rampala regime in the local Railway History. 2010-07-19 இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303194137/http://www.island.lk/2008/07/23/features5.html. 
  2. ""Sri Lanka Railways Timetable"". Archived from the original on 2012-03-31. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.
  3. 23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார்[தொடர்பிழந்த இணைப்பு], தினகரன், செப்டம்பர் 14, 2013
  4. "கிளிநொச்சி - பளை ரயில் சேவை நேற்று சுபவேளையில் ஆரம்பம்". தினகரன் (இலங்கை). 5 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "யாழ்தேவி ஜுனில் யாழ்.செல்லும்: குமார் வெல்கம". தமிழ்மிரர். 5 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "யாழ்ப்பாணம்–கொழும்பு இடையே நிறுத்தப்பட்டு இருந்த 'யாழ் தேவி' ரெயில் சேவை மீண்டும் தொடக்கம் அதிபர் ராஜபக்சே தொடங்கி வைத்தார்". பிபிசி தமிழ். 14 அக்டோபர் 2014. Archived from the original on 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 14 அக்டோபர் 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்_தேவி&oldid=3569247" இலிருந்து மீள்விக்கப்பட்டது