ஓமந்தை தொடருந்து நிலையம்
ஓமந்தை Omanthai | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| இலங்கை தொடருந்து நிலையம் | |||||||||||
| பொது தகவல்கள் | |||||||||||
| அமைவிடம் | ஓமந்தை இலங்கை | ||||||||||
| ஆள்கூறுகள் | 8°52′13.80″N 80°30′03.50″E / 8.8705000°N 80.5009722°E | ||||||||||
| உரிமம் | இலங்கை ரெயில்வே | ||||||||||
| தடங்கள் | வடக்குப் பாதை | ||||||||||
| மற்ற தகவல்கள் | |||||||||||
| நிலை | இயங்குகிறது | ||||||||||
| வரலாறு | |||||||||||
| மறுநிர்மாணம் | 27 மே 2011 | ||||||||||
| மின்சாரமயம் | இல்லை | ||||||||||
| சேவைகள் | |||||||||||
| |||||||||||
ஓமந்தை தொடருந்து நிலையம் (Omanthai railway station, ஓமந்தை புகையிரத நிலையம்) இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் ஓமந்தை நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கின்றது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகின்றது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து 1990 ஆம் ஆண்டு முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து இந்நிலையம் புனரமைக்கப்பட்டு 2011 மே 27 முதல் மீண்டும் சேவையாற்றுகின்றது.[1] அன்றில் இருந்து யாழ்தேவி சேவை கொழும்பில் இருந்து ஓமந்தை வரை சேவையாற்றி வந்தது. 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து கிளிநொச்சி வரை ஓமந்தையூடாக யாழ்தேவி பயணம் மேற்கொண்டது.[2] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கி.மீ. நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[3]
சேவைகள்
[தொகு]2013 செப்டம்பர் 14 முதல் நாள்தோறும் கொழும்பில் இருந்து ஓமந்தையூடாக கிளிநொச்சி வரை யாழ்தேவி, நகரிடை விரைவு வண்டி (இன்டர்சிட்டி), மற்றும் இரவுத் தபால் வண்டி ஆகிய பயணிகள் சேவைகள் இடம்பெறுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ali, Rifthy (27 May 2011). "Thandikulam to Omanthai railway operational". Daily Mirror. http://www.dailymirror.lk/news/11617--thandikulam-to-omanthai-railway-operational.html. பார்த்த நாள்: 10 August 2013.
- ↑ 23 வருடங்களின் பின் கிளிநொச்சி செல்லும் யாழ்தேவியில் ஜனாதிபதி இன்று பயணிப்பார் பரணிடப்பட்டது 2025-01-27 at the வந்தவழி இயந்திரம், தினகரன், செப்டம்பர் 14, 2013
- ↑ "கிளிநொச்சி - பளை ரயில் சேவை நேற்று சுபவேளையில் ஆரம்பம்". தினகரன் (இலங்கை). 5 மார்ச் 2014. Archived from the original on 2025-01-27. Retrieved 5 மார்ச் 2014.
- ↑ கொழும்பு, கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில் சேவைகள் பரணிடப்பட்டது 2013-09-17 at the வந்தவழி இயந்திரம், தினகரன், செப்டம்பர் 13, 2013