டிசம்பர் 2008
<< | டிசம்பர் 2008 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMVIII |
டிசம்பர் 2008, 2008 ஆம் ஆண்டின் பன்னிரண்டாவது (கடைசி) மாதமாகும். இம்மாதம் ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு புதன்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மார்கழி மாதம் டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை தொடங்கி ஜனவரி 13 செவ்வாய்க்கிழமையில் முடிவடைகிறது.
சிறப்பு நாட்கள்
[தொகு]- டிசம்பர் 6 - குரு பெயர்ச்சி
- டிசம்பர் 9 - பக்ரீத், ஹஜ்ஜுப் பெருநாள்
- டிசம்பர் 11 - திருக்கார்த்திகை
- டிசம்பர் 11 - பாரதியார் பிறந்த நாள்
- டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்
- டிசம்பர் 27 - அனுமன் ஜெயந்தி
- டிசம்பர் 30 - ஹிஜிரி ஆண்டு பிறப்பு
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- டிசம்பர் 30:
- ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியக் காங்கிரஸ் கட்சி தேசிய மாநாட்டுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க முடிவு செய்தது. (பிபிசி)
- ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி வங்காளதேச நாடாளுமன்றத் தேர்தல்களில் மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. (ரெடிஃப்)
- டிசம்பர் 29: அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகிலுள்ள வங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மூழ்கியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. 100 பேர் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டனர். (பிபிசி)
- டிசம்பர் 28: இஸ்ரேல் காசாக் கரையில் தொடர்ந்து குண்டுகளை வீசியது. முன்னூறுக்கும் அதிகமானோர் மொத்தமாகக் கொல்லப்பட்டனர். (ஏபிசி)
- டிசம்பர் 27:
- காசா பகுதியில் இஸ்ரேல் குண்டுகளை வீசியதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 225 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். (பிபிசி)
- காசாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை ஒன்று இஸ்ரவேலின் தென்பகுதியில் வீழ்ந்து வெடித்ததில் ஒரு இஸ்ரேலியர் கொல்லப்பட்டு ஆறு பேர் சிறு காயங்களுக்குள்ளாயினர். (வைநெட்)
- டிசம்பர் 26: பாகிஸ்தான் 5 முதல் 20 ஆயிரம் கூடுதலான படைவீரர்களை இந்திய எல்லைப்பகுதிக்கு அனுப்பியது. (வாஷிங்டன் போஸ்ட்)
- டிசம்பர் 23: கினியின் அதிபர் லன்சானா கொண்டே இறந்ததை அடுத்து அங்கு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. (பிபிசி)
- டிசம்பர் 22: மெக்சிக்கோவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 9 இராணுவத்தினரின் உடல்களை காவற்துறையினர் கண்டெடுத்தனர். (சீஎனென்)
- டிசம்பர் 21:
- அமைதிக்கான நோபல் பரிசை வென்ற சிரின் எபாடியின் மனித உரிமைகள் அலுவலகத்தை ஈரானியக் காவற்துறையினர் மூடினர். (ராய்ட்டர்ஸ்)
- அமெரிக்காவில் டென்வர் நகர விமான நிலையத்தில் விமனம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 38 பேர் காயமடைந்தனர். (பூளூம்பேர்க்)
- டிசம்பர் 20: சூயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக் கடலில் போடப்பட்டுள்ள கடலுக்கடியிலான கேபிள்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இணைய சேவை கடும் பாதிப்பைச் சந்திதது. (ராய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 18: ருவாண்டாவில் 1994 இல் இடம்பெற்ற இனப்படுகொலையில் ஒரு லட்சம் மக்களைக் கொலை செய்தமையில் முக்கிய பங்கு வகித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட அந்நாட்டு முன்னாள் பாதுகாப்பு அதிகாரி தியோனெஸ்ட் பகோசோராவுக்கு பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. (ராய்ட்டர்ஸ்)
- டிசம்பர் 16: இலங்கையின் தென்பகுதியில் வாதுவை என்ற இடத்தில் மூன்று பேருந்துகள் மோதிக்கொண்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். ப23 பேர் காயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- டிசம்பர் 15: தாய்லாந்தின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் அபிசித் வெயிச்சச்சிவா தெரிவு செய்யப்பட்டார். (பிபிசி)
- டிசம்பர் 14: பிலிப்பீன்ஸில் பயணிகள் படகொன்று மூழ்கியதில் அதில் பயணம் செய்த 28 பேர் பலியானதுடன் 22 பேர் காணாமல் போயினர். (ஏஎஃப்பி)
- டிசம்பர் 10:
- கால்வாய் தீவுகளில் ஒன்றான சார்க்கில் முதற் தடவையாக மக்களாட்சி முறையிலமைந்த தேர்தல்கள் இடம்பெற்றன. (பிபிசி)
- எச்டி 189733 பி என்ற கோளில் நீராவி, காபனீரொட்சைட்டு இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. (நேச்சர்)
- டிசம்பர் 9:
- இலினொய் செனட்டர் பதவியை விற்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலினொய் மாநில ஆளுநர் ரொட் பிளாகோயேவிச் கைது செய்யப்பட்டார். (மார்க்கெட் வோட்ச்)
- காங்கோ மக்களாட்சிக் குடியரசு அரசுக்கும் போராளிகளுக்கும் இடையில் பேச்சுக்கள் ஐநாவின் மத்தியத்தில் கென்யாவில் ஆரம்பமாயின. (சீஎனென்)
- டிசம்பர் 6: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் காவல்துறையினருக்கும் ஆயுததாரிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். (வாஷிங்டன் போஸ்ட்)
- டிசம்பர் 5:
- எதிர்வரும் இந்திய மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. (யாஹூ!)
- முன்னாள் அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் ஓ. ஜே. சிம்சன் கடத்தல், மற்றும் கொள்ளை தொடர்பாக குற்றம் நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். (ஏஎஃப்பி)
- பாகிஸ்தான், பெஷாவரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- டிசம்பர் 4: 1978 இல் படுகொலை செய்யப்பட்ட ஆப்கானிஸ்தானின் முதலாவது அதிபர் முகமது தாவூத் கானின் உடல் கண்டெடுக்கபட்டது. (பிபிசி)
- டிசம்பர் 2:
- சிம்பாப்வேயில் வாந்திபேதி நோய் காரணமாக ஆகஸ்ட் 2008 முதல் 425 பேர் இறந்தனர். (டெலிகிராப்)
- தாய்லாந்தின் ஆளும் மக்கள் சக்தி கட்சியையும் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மேலும் இரு கட்சிகளையும் அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தடை செய்துள்ளது. இதனையடுத்து பிரதமர் சொம்ச்சாய் வொங்சவாட் தனது பதவியைத் துறந்தார். (பிபிசி)
- டிசம்பர் 1: ஐக்கிய அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா தனது வெளியுறவு அமைச்சராக ஹிலரி கிளிண்டனைத் தேர்ந்தெடுத்தார். (ராய்ட்டர்ஸ்)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- டிசம்பர் 28:
- கொழும்பின் புறநகர்ப் பகுதியான வத்தளையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 படையினர் உட்பட 19 பேர் காயமடைந்தனர். (சண்டேட்டைம்ஸ்)
- மட்டக்களப்பு, செங்கலடியில் அதிரடிப் படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டு மூவர் படுகாயமடைந்தனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 27:
- முல்லைத்தீவை நோக்கிய இலங்கைப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கையின் போது 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்ததாகவும் 17 உடலங்களும் படையப் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். இறந்த போர்வீரர்களில் ஒருவர் 17 வயதுடையவர். (தமிழ்நெட்)
- வன்னியின் வட்டக்கச்சியில் இலங்கை வானூர்திகள் குண்டுகளை வீசியதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் 10 பேர் காயமடைந்தனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 23: பன்னாட்டுச் செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் யாழ்ப்பாணம், நல்லூரில் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். (தமிழ்நெட்)
- டிசம்பர் 22: கிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டதாகவும் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் புலிகள் அறிவித்தனர். (பிபிசி)
- டிசம்பர் 21:
- கிளாலியில் இடம்பெற்ற சமரில் தாம் ஒரு இலங்கைப் படை வீரரை உயிருடன் பிடித்திருப்பதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- முல்லைத்தீவு மாவட்டத்தின் நெடுங்கேணிப் பகுதியைத் தாம் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் அறிவித்தது. (டெய்லி மிரர்)
- டிசம்பர் 20:
- கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் படையினரின் 2கிமீ முன்னரண் பகுதியைத் தாம் மீட்டுள்ளதாகவும் இத்தாக்குதலில் 60 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 15 உடலங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (புதினம்)
- வடபோர்முனையில் கொல்லப்பட்ட படையினரின் 25 உடலங்களைத் தாம் படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது. (புதினம்)
- இலங்கை இராணுவத்தின் ஏவுகணைகள் வட்டக்கச்சியில் வீழ்ந்து வெடித்ததில் இரு பொது மக்கள் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 19: முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மக்கள் குடியிருப்பு மீது வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆறு சிறுவர்கள் உட்பட 11 பொதுமக்கள் படுகாயமடைந்தனர். (புதினம்)
- டிசம்பர் 16:
- கிளிநொச்சி நோக்கிய நான்கு முனைகளிலான படையினரின் முன்நகர்வின் போது 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு 250-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். (புதினம்)
- முல்லைத்தீவின் அம்பகாமம் என்ற ஊரைத் தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (புதினம்)
- டிசம்பர் 14: அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறில் அதிரடிப்படையினரின் அணி மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டனர். (புதினம்)
- டிசம்பர் 13: கிளிநொச்சி, வட்டக்கச்சியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஐந்து மாத பச்சிளம் குழந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தையின் தாய் படுகாயமடைந்தார். கனகபுரம் பகுதியில் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- டிசம்பர் 1:
- கிளிநொச்சி மாவட்டம், கொக்காவில் பகுதியை தாம் கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்)
- முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இராணுவ ஆழ ஊடுருவும் படையணியின் கட்டளை அதிகாரி கொல்லப்பட்டார். (சங்கதி)
- வன்னி, வட்டக்கச்சியில் இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் ஆறு வயது பாடசாலை மாணவி கொல்லப்பட்டார். (தமிழ்நெட்)
இறப்புகள்
[தொகு]2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்