உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய தேசிய காங்கிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இந்தியக் காங்கிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய தேசிய காங்கிரசு
Indian National Congress
சுருக்கக்குறிINC
தலைவர்மல்லிகார்ச்சுன் கர்கெ[1][2]
நிறுவனர்
பொதுச் செயலாளர்
நாடாளுமன்ற குழுத்தலைவர்சோனியா காந்தி[5]
மக்களவைத் தலைவர்இராகுல் காந்தி
(மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்)
மாநிலங்களவைத் தலைவர்மல்லிகார்ச்சுன் கர்கெ
(மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்)
தொடக்கம்28 திசம்பர் 1885
தலைமையகம்இந்திரா பவன், 9-ஏ, கொட்லா மார்க், புதுதில்லி-110001[6]
மாணவர் அமைப்புதேசிய மாணவர் ஒன்றியம், இந்தியா
இளைஞர் அமைப்புஇந்திய இளைஞர் காங்கிரசு
பெண்கள் அமைப்புஅகில இந்திய மகளிர் காங்கிரசு
தொழிலாளர் அமைப்புஇந்திய தேசிய தொழிற்சங்கக் காங்கிரசு
விவசாயிகள் அமைப்புகிசான், கேத் மசுதூர் காங்கிரசு[7]
உறுப்பினர்26 மில். (2022)[8][9]
கொள்கை
அரசியல் நிலைப்பாடுமையவாதம்[18] முதல் மைய இடதுசாரி[21] வரை
பன்னாட்டு சார்புமுற்போக்கு கூட்டணி[22]
பன்னாட்டு சோசலிசுட்டு[26]
நிறங்கள்               குங்குமப்பூ, வெள்ளை, பச்சை (அதிகாரபூர்வம்; இந்திய தேசிய நிறங்கள்)
     வான நீலம்
இ.தே.ஆ நிலைதேசியக் கட்சி[27]
கூட்டணி
முன்னாள்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
  • 100 / 543
  • (540 உறுப்பினர்கள், 3 வெற்று)[a][28]
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
  • 29 / 245
  • (242 உறுப்பினர்கள், 3 வெற்று)[29][30]
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநில சட்டமன்ற மேலவைகள்)
  • 58 / 426
  • (394 உறுப்பினர்கள், 32 வெற்று)
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மாநிலச் சட்டப் பேரவைகள்)
  • 664 / 4,131
  • (4119 உறுப்பினர்கள், 12 வெற்று)
  • (see complete list)
தேர்தல் சின்னம்

உயர்த்தப்பட்ட கை
கட்சிக்கொடி
இணையதளம்
www.inc.in இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
இந்தியா அரசியல்

இந்திய தேசிய காங்கிரசு (Indian National Congress; சுருக்கமாக இதேகா பொதுவாக காங்கிரசு கட்சி இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். 1885–இல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் ஒரு சமரச இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டு பின்னாளில் இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் ஒரு போராட்ட இயக்கமாக செயல்பட்டு இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று கொடுத்த போராட்ட இயக்கமாக இருந்தது. அதன் பிறகு மகாத்மா காந்தி அவர்கள் இவ்வியக்கத்தை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு நியாயமாக கலைத்துவிடலாம் என்று கூறிய போதும் கூட காங்கிரஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜவஹர்லால் நேரு தலையீட்டால் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு பல தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்ற போதிலும் சுதந்திர இந்தியாவில் 1947க்கு பிறகு 54 வருடமும் 7 பிரதமர்களையும் ஆள வைத்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் 58 வருடங்களும் 4 பிரதமர்களை ஆள வைத்து இந்தியாவை அதிக காலம் ஆண்ட ஒரே பெருமைக்குரிய அரசியல் கட்சியாக காங்கிரஸ் கட்சி திகழ்ந்து வருகிறது. மேலும் இக்கட்சியின் அமைப்புகளில் 15 மில்லியன் இந்திய மக்களும் ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் 70 மில்லியன் மக்களும் பங்கெடுத்தனர். 1947-இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர் நாட்டின் அதிகாரம் மிகுந்த அரசியல் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதன்மை உறுப்பினராகவும் இக்கட்சி விளங்குகிறது.

வரலாறு

[தொகு]

இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியின் வரலாற்றை விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என இரு காலப் பகுதிகளாகப் பிரிக்கலாம்.

விடுதலைக்கு முன்பான காலப் பகுதி

[தொகு]

1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சி தொடக்க காலத்தில் இந்தியாவில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை. அப்போது இதன் குறிக்கோள் கல்வி கற்ற இந்தியர்களுக்கு அரசில் பெரும் பங்கு வாங்கி தருவது தான்.ravi ram, karthi, lilee, சுரேந்திரநாத் பானர்ஜி மற்றும் வில்லியம் வெட்டர்பர்ன் ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் தலைவராக, பம்பாயில் 1885 திசம்பரில் நடந்த கூட்டத்தில் subash தேர்ந்தெடுக்கப்பட்டார். இதில் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். முதல் கூட்டம் புனேயில் நடப்பதாக இருந்தது, ஆனால் பிளேக் என்னும் கொள்ளை நோய் புனேயில் இருந்ததால் அக்கூட்டம் பம்பாய்க்கு மாற்றப்பட்டது.

இதன் இரண்டாம் கூட்டம் 1886 திசம்பர் 27-ல் நடைபெற்றது. இதில் 436 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் தலைவராக தாதாபாய் நௌரோஜி அறிவிக்கப்பட்டார். இவரின் முயற்சியால் "Indian National Congress" என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் சுரேந்திரநாத் பானர்ஜியின் "Indian National Union" காங்கிரசுடன் இனைக்கப்பட்டது.

முன்றாவது மாநாடு சென்னையில் 1887 திசம்பர் 27-ல் நடைபெற்றது.

பிரித்தானிய அரசின் எதிர்ப்பு காரணமாக காங்கிரசின் கொள்கையில் மாற்றம் கண்டது, இக்கட்சி விடுதலைப்போரில் தீவிரம் காட்ட தொடங்கியது. 1907 -ல் காங்கிரசில் தீவிரபோக்குடையோர், மிதபோக்குள்ளோர் என 2 குழுக்கள் உருவாகின. தீவிரபோக்குடையோர் பால கங்காதர திலகர் தலைமையிலும், மிதபோக்குடையோர் கோபால கிருஷ்ண கோகலே தலைமையிலும் இயங்கினர். பாலகங்காதர திலகரின் செல்வாக்கால் காங்கிரசு இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த பெரும் இயக்கமாக உருவாகியது. இலட்சக்கணக்கான மக்களை ஆங்கிலேயருக்கு எதிராக திரட்டியது.

இந்திய விடுதலைப்போரில் முதன்மையான இடம்பிடித்த பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, லாலா லஜபத் ராய், பிபின் சந்திர பால், முகமது அலி ஜின்னா, தாதாபாய் நௌரோஜி, வ. உ. சிதம்பரம் பிள்ளை போன்ற தலைவர்களை காங்கிரசு கட்சி உருவாக்கியது. காங்கிரசின் வரலாற்றை பட்டாபி சித்தராமையா எழுதி உள்ளார். இவர் காங்கிரசின் தோற்றம் ஒரு மர்மமாகவே உள்ளது என்று கூறிப்பிட்டுள்ளார். உமேசு சந்திர பானர்ஜி காங்கிரசின் தோற்றம் பற்றி "The Saftey Wall Theory"-யில் கூறினார். இதன் படி ஆங்கிலேயர்கள் தமது ஆட்சியை பாதுகாத்து கொள்வதற்காக "ஆலன் ஆக்ட வின் ஹியூம் உதவியுடன் காங்கிரசை உருவாக்கினர் என்று கூறுகிறார்.

காந்தியின் கால பகுதி

[தொகு]

காந்தி 1915 ல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார். தென்னாப்பிரிக்காவில் வெள்ளையருக்கு எதிராக அறவழிப்போர் நடத்தியதால் காந்தியின் புகழ் இந்தியாவிலும் பரவியிருந்தது. தாயகம் திரும்பியதும் தன்னை இந்திய விடுதலைப்போரில் ஈடுபடுத்திக்கொண்டார். அறவழிப்பாதையை ஆதரித்தாலும் முதலாம் உலகப்போரில் ஆங்கிலேயர்களை ஆதரித்தார். காங்கிரசு இயக்கம் அன்னி பெசன்ட் அவர்களின் தன்னாட்சி இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தது. இந்து முசுலிம் ஒற்றுமை வேண்டி காலிபத் இயக்கத்தை ஆதரித்தார். திரும்பர் 1917ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மாநாட்டில் இந்திய காங்கிரசின் தலைவராக காந்தி ஓராண்டிற்குத் தெரிவானார்.

விடுதலைக்கு பிந்தைய காலப் பகுதி

[தொகு]

இந்திரா காந்தி காலப் பகுதி

[தொகு]

சின்னம்

[தொகு]
  • பூட்டிய இரட்டை மாடுகள் இதன் சின்னமாக 1969 பிளவுக்கு முன் வரை இருந்தது. பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்திரா பிரிவுக்கு இரட்டை மாடு சின்னத்தை ஒதுக்கியது.
  • இதை எதிர்த்து ஸ்தாபன காங்கிரசு (சிண்டிகேட் என இதை அழைப்பார்கள்) பிரிவு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இச்சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் இருக்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டது.[31][32]
  • இந்திரா தலைமையிலான காங்கிரசுக்கு பசுவும் கன்றும் சின்னமும் ஸ்தாபன காங்கிரசுக்கு ராட்டை சுற்றும் பெண் சின்னமும் கிடைத்தன. நெருக்கடி நிலைக்கு பின் நடந்த தேர்தலில் இந்திரா காங்கிரசு பெரும் தோல்வி கண்டதையடுத்து.
  • ஆளும் எதிர்க்கட்சியான ஜனதா கட்சி 1979ல் இரண்டாக பிளவுபட்டது. இதில் ஜனதா கட்சி பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் செயல்பட்டது.
  • ராஜ் நாராயணன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி சார்பாக சரண் சிங் பிரதமராக பதவி வகித்தார். அதற்கு இந்திரா தலைமையிலான பிரிவை 70 நாடாளுமன்ற உறுப்பினர்களும், சரண் சிங் தலைமையிலான பிரிவை 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தார்கள். பிரதமர் சரண் சிங் தலைமையிலான குழுவுக்கு பசுவும் கன்றும் சின்னம் கிடைத்தது.
  • பின்பு சரண் சிங் அளித்து வந்த ஆதரவை காங்கிரஸ் கட்சி விலக்கிக் கொண்டதால். இது பின்பு சரண் சிங் தலைமையில் ஜனதா கட்சி (எஸ்) என அழைக்கப்பட்டது.
  • பின்பு இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுக்கு கை சின்னம் ஒதுக்கப்பட்டது.
  • இந்த கை சின்னம் ஆனது காங்கிரஸ் கட்சியின் பிரதான தேர்தல் சின்னமாக மாறியது. அதன் பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பிற மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றுள்ளது.[33]

கொள்கை மாற்றம்

[தொகு]

மாநில அரசுகளில் காங்கிரஸ்

[தொகு]
இந்தியாவில் தற்போது ஆளும் கட்சிகள்
  பாஜக
  பாஜக கூட்டணி
  இதேகா
  இதேகா கூட்டணி
  பிற மாநில கட்சிகள்

காங்கிரஸ் கூட்டணியில் ஆளும் மாநிலங்கள்

[தொகு]
  • மேலும் ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சி அம்மாநில கட்சிகளுடன் கூட்டணியில் ஆட்சி செய்துவருகிறது. மேலும் இதில் தற்போது தமிழ்நாட்டில் புதிய கட்சியான தமிழ் திரையுலகின் மாபெரும் நடிகருமான விஜய் அவர்களது தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ் கட்சி பங்கேற்றுள்ளது.
  • தற்போது ஜம்மு காஷ்மீரில் 10 வருட காலம் மாநில சட்டமன்றத் தேர்தல் நடத்தபடாமல் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தொடர் வெற்றி பெற்று இந்தியாவை ஆளும் பாஜகவின் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களது ஆர்எஸ்எஸ்சின் உயிர்நாடி கொள்கையான ஜம்மு காஷ்மீர் தனி மாநில சிறப்பு உரிமை அந்தஸ்து 370 நீக்கப்பட்டு நடந்த முதல் மாநில தேர்தலான 2024 ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சிகாங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியே வெற்றி பெற்றது.
  • மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மொத்தமுள்ள 114 சட்டமன்றத் தொகுதியில் 90 தொகுதிகளிலே தேர்தல் நடத்தப்பட்டு அதில் பெரும்பான்மைக்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றிய போதிலும் மீதமுள்ள 24 சட்டமன்றத் தொகுதியானது பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருப்பதால் தற்போது அங்கு தேர்தல் நடத்தாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • அதைத் தொடர்ந்து ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி செய்து வந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் கடந்த ஆட்சி காலத்தில் செய்த சொத்து குவிப்பு ஊழல் வழக்கின் விசாரணையில் சிறை சென்று மீண்டும் வந்து முதல்வரான பிறகும் எதிர்க்கட்சி பாஜகவினரால் பல அவதூறுகள் கூறப்பட்ட போதிலும் அதையும் கடந்து தற்போது அம்மாநில மக்கள் ஹேமந்த் சோரனை 2024 சட்டமன்றத் தேர்தலில் தொடர் வெற்றி பெற செய்து மீண்டும் முதல்வராக்கி அவரது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாகாங்கிரஸ் கட்சி கூட்டணி சார்பில் தொடர் ஆட்சி அமைக்க செய்துள்ளனர்.
  • இதில் தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியின் கடந்த கால நண்பரும் தமிழ் திரையுலகின் மாபெரும் முன்னணி நடிகருமான விஜய் அவர்கள் தொடங்கிய தவெக கட்சியில் இந்தியாவில் அதுவரை மாநில அரசியலில் அதிகாரத்தில் பங்கு என்ற கூட்டாட்சி முறையை பெரிய அளவில் எந்த மாநில கட்சியின் தலைவர்களும் செயல்படுத்த தயங்கிய போது அதை முதல் முறையாக கொண்டு வருவதே எனது அரசியல் கொள்கை என்று விஜய் அவர்கள் கூறிய போது அந்த அரசியல் நிலைப்பாட்டை இந்தியாவில் முதல் முதலாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வரவேற்று வழிமொழிந்து பாராட்டியதே தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மட்டுமே ஆகும்.
  • அதன் பிறகு விஜய் அவர்கள் அறிவித்த கூட்டாட்சி முறையை ஏற்று கொண்டு அடுத்து தமிழ்நாட்டில் நடக்கவிருந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெககாங்கிரஸ் கட்சி கூட்டணி அமைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது ஆதரவு முன்னணி தலைவர்கள் ஆர்வம் காட்டிய போதிலும் அதை தமிழகத்தில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்திருந்த திமுக கூட்டணியில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருவமான மு. க. ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் கட்சியை தனது அதிகார வரம்பிற்குள் பல முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் மூலம் திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகவும், தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க முடியாமல் தோற்ற போனதுமாக இருந்தாலும்.
  • அதன் பின் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் வெற்றி பெற்ற புதிய கட்சியான நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைக்க தனிபெரும் கட்சியாக வெற்றி பெற்ற போதிலும் தனிபெரும்பான்மை பெறாமல் போனதால் அக்கட்சியுடன் கூட்டணி ஆதரவு கொடுத்துவிட்டு பாஜக மதவாத கட்சியுடன் மட்டும் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் காலம் வரை எந்தவித கூட்டணி முயற்சியும் ஏற்படுத்த கூடாது என்ற ஒற்றை அன்பு நிபந்தனையை மட்டும் முதல்வர் விஜய் இடம் ஒப்பந்தம் செய்துவிட்டு விஜய் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களில் 2 பேருக்கு அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றனர்.
  • மேலும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 59 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
  • அதே போல் முதல்வர் விஜய் தவெககாங்கிரஸ் கட்சி கூட்டணியிலயே இனி வரவிருக்கும் தமிழக உள்ளாட்சி மாமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகிய தேர்தல்களில் கூட்டணியில் தொடருவோம் என்று காங்கிரஸ் தலைமை அதிகார பூர்வமாக அறிவித்தது.
  • மேலும் இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி தற்போது பல மாநிலங்களில் ஆளும் கட்சியான பாஜகவிற்கும், பிற மாநில கட்சிகளுக்கும் பலமான எதிர்க்கட்சியாக செயல்பட்டுவருகிறது.
  • இந்திய விடுதலை பெற்றது முதல் காங்கிரஸ் கட்சி இதுவரை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பெருபான்மையாக ஆட்சி புரிந்துள்ளது.
  • ஆனால் பின்னாளில் காங்கிரஸ் கட்சியில் பிரதமர் ஜவஹர்லால் நேரு மரணத்திற்கு பிறகு வந்த அவரது மகளும், பிரதமருமான இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி காலத்தில் காங்கிரஸ் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் சறுக்கலை கண்டது.
  • குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இறுதி ஆட்சி காலத்தில் நடந்த கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மற்றும் இந்திய அரசியலில் அதுவரை இல்லாத நாட்டின் பொருளாதார குறைப்பாடுகள் மற்றும் கூட்டணி ஆட்சி முறையால் பல நல்ல திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு செயல்படுத்த முடியாமல் அந்த ஆட்சி காலத்தில் போனதால் இன்று தற்போது பல மாநிலங்களிலும் இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சி பலமான பின்னடைவும், தேர்தல்களில் தொடர் தோல்வியும் அடைந்து வருகிறது.

காங்கிரஸ் கட்சி தற்போது நேரடியாகவும் & கூட்டணியிலும் ஆளும் மாநிலங்கள் பட்டியல்

[தொகு]

காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆளும் மாநிலங்கள்

[தொகு]
வரிசை எண் மாநிலம்/ஒன்றியப் பிரதேசம் முதலமைச்சர் கட்சி / கூட்டணி கட்சி பதவியேற்ற நாள் சட்டமன்ற பலம் / காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் தேர்தல் காலம்
1இமாச்சலப் பிரதேசம்சுக்விந்தர் சிங் சுகு (இதேகா)இதேகா (40)11 டிசம்பர் 202240/6811 டிசம்பர் 2027
2கர்நாடகம்டி. கே. சிவகுமார் (இதேகா)இதேகா (135)20 மே 2023137/22413 மே 2028
3தெலுங்கானா அனுமுலா ரேவந்த் ரெட்டி (இதேகா)இதேகா (64) சிபிஐ (1)7 டிசம்பர் 202375/1193 டிசம்பர் 2028
4கேரளாசதீசன் (இதேகா)இதேகா (63) இயூமுலீ (22)18 மே 202663/1401 ஏப்ரல் 2031

காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் ஆளும் மாநிலங்கள்

[தொகு]
வரிசை எண் மாநிலங்கள் மாநில முதலமைச்சர்கள் கூட்டணி கட்சிகள் பதவியேற்ற நாள் சட்டமன்ற பலம் / காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் தேர்தல் காலம்
1ஜம்மு காஷ்மீர்உமர் அப்துல்லாஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி16 அக்டோபர் 2024இம்மாநிலத்தில் மொத்தம் 114 சட்டமன்றத் தொகுதிகளில் மீதமுள்ள 24 தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்ரமிப்பில் இருப்பதால் அத்தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படாமல் தற்போது (காங் 6)/90அக்டோபர் 2029
2ஜார்கண்ட்ஹேமந்த் சோரன்ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாநவம்பர் 2024(காங் 16)/81நவம்பர் 2029
3தமிழ்நாடுஜோசப் விஜய்தமிழக வெற்றி கழகம்10 மே 2026தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றது (காங் 5)/2341 ஏப்ரல் 2031

காங்கிரசின் பிரதான எதிர்க்கட்சிகள்

[தொகு]
வரிசை எண்ஆளும் கட்சிபிரதான எதிர்க்கட்சிகள்வருடங்கள்
1காங்கிரஸ் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி(1947–1971) (24–வருடம்)
2இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(1964–1996) (32–வருடம்)
3நிறுவன காங்கிரஸ்(1969–1977) (8–வருடம்)
4ஜனதா கட்சி(1977–1988) (11–வருடம்)
5ஜனதா தளம்(1988–1996) (8–வருடம்)
6பாரதிய ஜனதா கட்சி(1996–இன்று வரை)

காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதமர்கள்

[தொகு]
இந்தியாவில் 54 வருடங்களாக அதிக காலம் ஆண்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக 7 பிரதமர்களை வழங்கியுள்ளது.
வரிசை எண் பிரதமர் பிரதமர்களின் உருவப்படங்கள் ஆட்சிக்காலம் ஆட்சி நிலவரம் ஆண்டுகள்
1ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 முடிய 1947 சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக தேர்வு 1951, 1957, 1962 நாடாளுமன்ற தேர்தலை சேர்த்து நான்கு முறையும் பெரும்பான்மையான அரசு17–வருடம்
2குல்சாரிலால் நந்தா 1965 மே மற்றும் ஜீன், மீண்டும் ஜனவரி 11, 1966 முதல் ஜனவரி 24, 1966 முடிய இடைக்கால பிரதமராக இரண்டு முறை பெரும்பான்மையான அரசு26–நாட்கள்
3லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 முதல் ஜனவரி 11, 1966 முடிய இடைக்கால பிரதமர் பெரும்பான்மையான அரசு2–வருடம்
4இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 முடிய மீண்டும் ஜனவரி 14, 1980 – அக்டோபர் 31, 1984 1966 நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று 1967, 1971, 1980 மூன்று நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான அரசு15–வருடம்
5ராஜீவ் காந்தி அக்டோபர் 31, 1984 முதல் டிசம்பர் 2, 1989 முடிய 1984 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மையான அரசு5–வருடம்
6பி. வி. நரசிம்ம ராவ் ஜீன் 21 1991 முதல் மே 16 1996 முடிய 1991 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பான்மை பெறாததால் மற்ற மாநில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி அரசு5–வருடம்
7மன்மோகன் சிங் 22 மே 2004 முதல் 25 மே 2014 முடிய 2004, 2009 இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் இருமுறையும் ஆட்சி அமைக்க அறுதிபெரும்பான்மை பெறாததால் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) தலைமையில் முதல் ஆட்சி காலத்தில் இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகள் ஆதரவிலும் இரண்டாவது ஆட்சி காலத்தில் பிற மாநில கட்சிகளின் ஆதரவில் கூட்டணி அரசு10–வருடம்

காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவில் பிரதமர்கள்

[தொகு]
காங்கிரஸ் கட்சி சார்பில் 7 பிரதமர்கள் 54 வருடமும் அதன் பிறகு காங்கிரஸ் கூட்டணி ஆதரவில் 3 கட்சிகளை சார்ந்த 4 பிரதமர்களும் வெவ்வேறு காலகட்டத்தில் தலா 1 வருடத்திற்கு மொத்தமாக 4 வருடம் ஆண்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆதரவுடன் சேர்த்து 58 வருடங்கள் இந்தியாவை ஆண்டுள்ளது.
வரிசை எண் ஆதரவு காங்கிரஸ் கட்சி ஆதரவு தலைவர்கள் தலைவர்களின் உருவப்படங்கள் கூட்டணி ஆதரவில் ஆண்ட கட்சிகள் கூட்டணி நிலைப்பாடு பிரதமர்கள் பிரதமர்களின் உருவப்படங்கள் ஆண்டுகள்
1காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி மதச்சார்பற்ற ஜனதா கட்சிகாங்கிரஸ் கட்சி+சிபிஐ+பிற மாநில கட்சிகள்சரண் சிங் (1979–1980) 1–வருடம்
2இராஜீவ் காந்தி சமாஜ்வாடி ஜனதா கட்சிகாங்கிரஸ் கட்சி+பாஜக+பிற மாநில கட்சிகள்சந்திரசேகர் (1990–1991) 1–வருடம்
3சீதாராம் கேசரி/சோனியா காந்தி புகைப்படம் கிடைக்க பெறவில்லைஜனதா தளம்(ஐக்கிய முன்னணி) தலைமையிலான காங்கிரஸ் கட்சி+சிபிஐ+சிபிஎம்+பிற மாநில கட்சிகள்தேவ கவுடா (1996–1997) 1–வருடம்
4ஐ. கே. குஜ்ரால் (1997–1998) 1–வருடம்

(மேலும் இந்த பட்டியலில் உள்ள 4 பிரதமர்களும் மக்களால் நேரடியாக தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படாமல் காங்கிரஸ், பாஜக, சிபிஐ, சிபிஎம் என இரண்டு இடதுசாரி கட்சிகள் மற்றும் பிற மாநில கட்சிகளின் ஆதரவு நிலைபாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் ஆவர்)

குறிப்புகள்

[தொகு]
  1. Tally includes 2 Independent MPs who are members of INC.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mallikarjun Kharge wins Congress Presidential elections, set to become first non-Gandhi head of party in 24 years". The Economic Times. 3 June 2021. Retrieved 21 October 2022.
  2. Phukan, Sandeep (19 October 2022). "Mallikarjun Kharge wins Congress presidential election with over 7,800 votes". The Hindu. https://www.thehindu.com/news/national/congress-president-poll-mallikarjun-kharge-set-to-be-partys-new-chief-polls-over-7000-votes/article66030419.ece.
  3. "AICC Office bearers, General Secretaries". Indian National Congress. Retrieved 15 February 2025.
  4. "Smt Sonia Gandhi re-elected as chairperson of Congress parliamentary party". inc.in. 25 June 2024.
  5. "From 24 Akbar to 9 Kotla Road...how many Congress offices changed in 138 years?". ABP News. 22 December 2023. https://www.abplive.com/news/india/congress-new-office-9-kotla-road-24-akbar-road-named-as-indira-bhavan-2567047.
  6. "Kisan and Khet Mazdoor Congress sets 10-day deadline for Centre to concede demands". The Hindu. 16 June 2016. https://www.thehindu.com/news/national/karnataka/Kisan-and-Khet-Mazdoor-Congress-sets-10-day-deadline-for-Centre-to-concede-demands/article14427968.ece.
  7. "Southern states ahead in Congress membership drive, Telangana unit leads". 28 March 2022. https://theprint.in/india/southern-states-ahead-in-congress-membership-drive-telangana-unit-leads/892158/.
  8. "Congress' Digital Membership Drive Gains Focus With Boost in Participation, South Contributes Significantly". ABP News. 27 March 2022.
  9. Emiliano Bosio; Yusef Waghid, eds. (31 October 2022). Global Citizenship Education in the Global South: Educators' Perceptions and Practices. Brill. p. 270. ISBN 9789004521742.
  10. DeSouza, Peter Ronald (2006). India's Political Parties Readings in Indian Government and Politics series. Sage Publishing. p. 420. ISBN 978-9-352-80534-1.
  11. Rosow, Stephen J.; George, Jim (2014). Globalization and Democracy. Rowman & Littlefield. pp. 91–96. ISBN 978-1-442-21810-9.
  12. [10][11][12]
  13. Agrawal, S. P.; Aggarwal, J. C., eds. (1989). Nehru on Social Issues. New Delhi: Concept Publishing. ISBN 978-817022207-1.
  14. [14]
  15. 1 2 Soper, J. Christopher; Fetzer, Joel S. (2018). Religion and Nationalism in Global Perspective. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். pp. 200–210. ISBN 978-1-107-18943-0.
  16. Jean-Pierre Cabestan, Jacques deLisle, ed. (2013). Inside India Today (Routledge Revivals). Routledge. ISBN 978-1-135-04823-5. ... were either guarded in their criticism of the ruling party – the centrist Indian National Congress – or attacked it almost invariably from a rightist position. This was so for political and commercial reasons.
  17. [17]
  18. Kronstadt, K. Alan (2026-07-05). "India's Domestic Political Setting". congress.gov. ஐக்கிய அமெரிக்கப் பேரவை. Retrieved 29 May 2026. Indian National Congress is generally regarded as a populist, center-left party, although an INC-led government presided over significant economic liberalization in the early 1990s.
  19. Ruth, Michael (2025). "Indian National Congress (political party)". ebsco.com. EBSCO. Retrieved 29 May 2026. The Indian National Congress (INC) is one of the major political parties in India, characterized as a center-left entity that advocates for democratic socialist principles.
  20. [19][20]
  21. "Progressive Alliance Participants". Progressive Alliance. Archived from the original on 2 March 2015. Retrieved 20 March 2016.
  22. "Full Member Parties of Socialist International". Socialist International.
  23. Gabriel Sheffer (1993). Innovative Leaders in International Politics. SUNY Press. p. 202. ISBN 978-0-7914-1520-7. Retrieved 30 January 2013.
  24. "Meeting of the SI Council at the United Nations in Geneva". Socialist International.
  25. [23][24][25]
  26. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. Retrieved 9 May 2013.
  27. "List of Lok Sabha Members". Digital Sansad. National Informatics Centre. 19 April 2023. Retrieved 13 February 2025.
  28. "Party Position in the Rajya Sabha" (PDF). Rajya Sabha. Retrieved 14 July 2018.
  29. "List of Members". Digital Sansad. National Informatics Centre. 14 November 2022. Retrieved 13 February 2025.
  30. 320 Million Judges By G.G. Mirchandani பக்கம் 45
  31. President Shankar Dayal Sharma, the scholar and the statesman பக்கம் 80
  32. Indira: the life of Indira Nehru Gandhi - பக்கம் 425 [தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_தேசிய_காங்கிரசு&oldid=4561729" இலிருந்து மீள்விக்கப்பட்டது