அக்டோபர் 2009
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அக்டோபர் 2009, 2009 ஆம் ஆண்டின் பத்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஐப்பசி மாதம் அக்டோபர் 17, சனிக்கிழமை தொடங்கி நவம்பர் 16 திங்கட்கிழமை முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- அக்டோபர் 17 - புரட்டாசிச் சனி (கடைசி)
- அக்டோபர் 17 - தீபாவளி
- அக்டோபர் 19 - கந்தசஷ்டி ஆரம்பம்
- அக்டோபர் 24 - கந்தசஷ்டி முடிவு
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- அக்டோபர் 31:
- ஜப்பான், மற்றும் இந்தோனேசியாவில் முறையே 5.6, 6.3 நிலநடுக்கம் பதிவாகியது.
- அக்டோபர் 30:
- உலக வெப்பநிலை மாற்றம் குறித்த ஐநா மாநாட்டில் ஒரே குரலாக ஒலிக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சம்மதித்துள்ளனர். (சிஎனென்)
- இணையத்தில் இலத்தீன் எழுத்துகளைக் கொண்டிராத பிற மொழி எழுத்துகளைக் கொண்டும் இணையதள முகவரிகள் அமைக்க ஐகேன் (ICANN) நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. (பிபிசி)
- ஒந்துராசில் பதவியிறக்கப்பட்ட மனுவேல் செலாயாவை மீண்டும் ஜனாதிபதியாக்க அந்நாட்டின் தற்காலிக அரசு முடிவு செய்துள்ளது. (டைம்ஸ் ஒஃப் இந்தியா)
- ராஜஸ்தான் எண்ணெய்க் கிடங்கில் தீ: 5 பேர் இறப்பு
- அக்டோபர் 29:
- ஐக்கிய அமெரிக்கா பொருளாதாரத் தேக்கநிலையில் இருந்து மீண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (அல்ஜசீரா)
- கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் தமிழ் இளைஞன் அடித்துக் கொலை
- அக்டோபர் 28:
- காபூலில் பன்னாட்டு விருந்தினர் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 6 ஐநா ஊழியர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். (நியூயோர்க் டைம்ஸ்)
- ஏரிஸ் I-X விண்கப்பலை நாசா வெற்றிகரமாகச் சோதித்தது
- பாகிஸ்தான் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 80 பேர் கொல்லப்பட்டனர்
- வேளாண்மையில் நானோ தொழில்நுட்பத்தைப் புகுத்தும் முயற்சியில் வெற்றி
- அக்டோபர் 27:
- சென்ற ஆண்டு திபெத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது கைது செய்யப்பட்ட 2 திபெத்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சீனா அறிவித்தது. (த இந்து)
- ஊடகவியலாளர் யசீகரனும் அவரது மனைவியும் விடுதலை
- அக்டோபர் 26:
- துனீசியாவின் அதிபர் சினி அபிடீன் பென் அலி 5வது தடவையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (பிபிசி)
- ஆந்திரப் பிரதேசத்தில் இலவச கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற 10 பேர் தமது பார்வையை இழந்தனர். (பிபிசி)
- மலேசியாவில் தொங்கு பாலம் விழுந்து 3 தமிழ் மாணவிகள் இறப்பு
- கொலோன் நகரில் 8வது தமிழ் இணைய மாநாடு
- ஆப்பிரிக்க யானை இனம் 15 ஆண்டுகளுக்குள் அழியும் அபாயம்
- அக்டோபர் 25
- அக்டோபர் 24:
- தெற்கு வரிசிஸ்தானில் கொட்காய் என்ற பிரதேசத்தை தாம் தலிபான்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது. (பிபிசி)
- இந்தோனேசியாவின் கிழக்குக் கரையில் 7.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (ஏபி)
- எகிப்தில் இரு தொடருந்துகள் மோதியதில் 25 பேர் கொல்லப்பட்டனர்
- கொலம்பிய உதைபந்தாட்ட அணியினர் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர்
- அக்டோபர் 23:
- அக்டோபர் 22:
- மைக்ரோசாப்ட் நிறுவனம் வின்டோஸ் 7 இயக்குதளத்தை வெளியிட்டது. (சீநெட்)
- 6 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி கோருகிறது எத்தியோப்பியா
- இலங்கையில் மோதல் காலத்தில் போர்க்குற்றங்கள்: அமெரிக்கா அறிக்கை
- அக்டோபர் 21:
- மார்ஷல் தீவுகளின் அதிபர் லிட்டோக்வா டோமிங் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் தோற்கடிக்கப்பட்டு பதவி இழந்தார். (ஏஎஃப்பி)
- வட இந்தியாவில் இரு தொடருந்துகள் மோதியதில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
- இசுரேலுக்காக உளவு பார்த்த அமெரிக்க விஞ்ஞானி கைது
- சோமாலியா விமான நிலையம் மீது போராளிகள் எறிகணைத் தாக்குதல்
- அக்டோபர் 20:
- பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் நகரில் பல்கலைக்கழகம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுக் தாக்குதலில் 4 மாணவர்கள் கொல்லப்பட்டனர். (ஏபி)
- உச்ச நீதிமன்றத்தில் அம்பானி சகோதரர்கள் விவகாரம்
- அக்டோபர் 19:
- இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிவந்த கப்பலில் நன்கு அறியப்பட்ட மனித கடத்தல்காரர் ஒருவர் இந்தோனேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா அறிவித்தது. (தி ஆஸ்திரேலியன்)
- ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் மாதம் நடந்த வாக்கெடுப்பில், முழுவெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகளை பெற அதிபர் ஹமீத் கர்சாய் தவறிவிட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. (ஏபி)
- சூரியக் குடும்பத்துக்கு வெளியே 32 புதிய கோள்கள் கண்டறியப்பட்டன
- அக்டோபர் 18:
- வடமேற்கு பாகிஸ்தானின் தெற்கு வரிசிஸ்தானில் இடம்பெற்று வரும் போரில் 60 தாலிபான்க கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. (த கார்டியன்)
- பிரேசிலில் இடம்பெற்ற 2009 பார்முலா 1 அதிவேகக் கார்ப்பந்தயப் போட்டியில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஜென்சன் பட்டன் முதலிடத்தைப் பெற்றார். (பிபிசி)
- சூடானில் கடத்தப்பட்ட இரு பன்னாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் விடுதலை
- சுவாங்கிராயின் எதிர்ப்பை சிம்பாப்வே அதிபர் நிராகரித்தார்
- ஈரானில் இடம்பெற்ற தாக்குதலில் காவல் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர்
- அக்டோபர் 17:
- பாகிஸ்தானின் 30,000 இராணுவத்தினர் தெற்கு வரிசிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான போரை ஆரம்பித்தனர். (பிபிசி)
- ஆந்திரா-தமிழ்நாடு எல்லைக்கிராமத்தில் தீபாவளி அன்று பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 32 பேர் கொல்லப்பட்டனர். (இந்துஸ்தான் டைம்ஸ்)
- மாலைதீவில் கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம்
- வர்த்தக மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக தமிழர் ஒருவர் நியூயார்க்கில் கைது
- கினியின் இராணுவ ஆட்சியாளர்களால் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் கொடுமைகளைக் கண்டித்து அதன் மீது ஆயுதத்தடையை விதிப்பதற்கு மேற்கு ஆபிரிக்க பிராந்திய அமைப்பு முடிவு
- அக்டோபர் 16:
- 2005 இல் தீவிரவாதச் செயல்களைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட 5 முஸ்லிம் இளைஞர்கள் சிட்னி நீதிமன்றம் ஒன்றினால் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். (சிட்னி மோர்னிங் ஹெரால்ட்)
- தாவர விதை வங்கி தனது 10 வீத இலக்கை எட்டியது
- அருணாச்சலப் பிரதேசத்திற்கு சீனா உரிமை கோரியதற்கு இந்தியா அதிருப்தி
- அக்டோபர் 15:
- பாகிஸ்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 37 பேர் கொல்லப்பட்டனர். (இண்டியன் எக்ஸ்பிரஸ்)
- 2010 உலகக்கிண்ண கால்பந்து: அர்ஜென்டீனா, சுவிட்சர்லாந்து அணிகள் தகுதி
- இந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம்
- கோடையில் பனி இல்லாத ஆர்க்டிக் உருவாகலாம்
- அக்டோபர் 14:
- உலகளாவிய வலை முகவரியில் தேவையற்ற "//" குறியீடுகளை சேர்த்ததற்காக டிம் பேர்னேர்ஸ்-லீ மன்னிப்புக் கேட்டார். (பிபிசி)
- இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரத்தை அறிமுகப்படுத்த அனுமதி
- அக்டோபர் 13:
- ருமேனியாவில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றில் அந்நாட்டு அரசு தோல்வியடைந்தது. (ஏஎப்ஃபி)
- அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் போது இந்தோனேசியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 260 இலங்கைத் தமிழர் தாம் கப்பலை வெடிக்கவைக்கப் போவதாக அச்சுறுத்தியுள்ளனர். (தி ஆஸ்திரேலியன்)
- டா வின்சி வரைந்த ஓவியம் ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டது
- அக்டோபர் 12:
- பாகிஸ்தானில் சங்கிலா மாவட்டத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 41 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- சீனாவில் சீன்சியாங்கில் ஜூலை மாதத்தில் இடம்பெற்ற கலவரங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. (பிபிசி)
- இந்தியா பிரித்வி II என்ற இரண்டு நடுத்தர ஏவுகணைகளை ஒரிசாவில் இருந்து வெற்றிகரமாக ஏவியது. (பிபிசி)
- தாவர உணவை மட்டும் உண்ணும் சிலந்தி
- தீவிரவாதிகளுடன் தொடர்பு: பிரெஞ்சு அணு ஆய்வாளர் பாரிசில் கைது
- 2009 பொருளியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது
- சீனாவில் ஜூலை கலவரத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரண தண்டனை
- அக்டோபர் 11:
- கம்போடியாவில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர். (அல்ஜசீரா)
- ஐரிய தேசிய விடுதலை இராணுவம் (INLA) வட அயர்லாந்தில் வன்முறைகளை நிறுத்துவதாக அறிவித்தது. (ஏபிசி)
- இந்திய நாடாளுமன்றக் குழு வவுனியா சென்று இடம்பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டது. (தமிழ்வின்)
- மூலவுயிர்க்கலங்களைப் பயன்படுத்தி தாடை எலும்பு உருவாக்கம்
- ஆத்திரேலியாவினுள் நுழைய முயன்ற இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது
- அக்டோபர் 10:
- திமுகவைச் சேர்ந்த டி. ஆர். பாலு தலைமையிலான இந்திய நாடாளுமன்ற குழு ஒன்று 5-நாள் பயணமாக இலங்கை வந்தது. முதல் நாள் யாழ்ப்பாணம் சென்றது. (தமிழ்வின்)
- லிஸ்பன் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக போலந்து கையெழுத்திட்டது. (பிபிசி)
- நைஜீரியாவில் எண்ணெய்த் தாங்கி ஒன்று வெடித்ததில் 70 பேர் கொல்லப்பட்டனர். (சின்குவா)
- பாகிஸ்தான் இராணுவத் தலைமையகத்தை முற்றுகையிட்ட தலிபான்கள் 22 இராணுவத்தினரைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர். (பிபிசி)
- அக்டோபர் 9:
- 2009 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது. (நியூயோர்க் டைம்ஸ்)
- பிலிப்பைன்சில் வெள்ளம் காரணமாக 181 பேர் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஆஃப் இண்டியா)
- நாசா தனது ஆளில்லா விண்கலங்கள் இரண்டை நிலவில் மோதவிட்டது
- எயிட்டியில் ஐநா வானூர்தி வீழ்ந்து நொறுங்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
- பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
- அக்டோபர் 8:
- ஜப்பானை "மெலோர்" சூறாவளி தாக்கியதில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். (அல்ஜசீரா)
- மகாத்மா காந்தி வாழ்ந்த தென்னாப்பிரிக்க வீட்டை பிரெஞ்சு நிறுவனம் வாங்கியது.
- 2009 இலக்கியத்துக்கான நோபல் பரிசு செருமானிய எழுத்தாளருக்குக் கிடைத்தது.
- காபூலில் இந்தியத் தூதரகம் முன் தற்கொலைத் தாக்குதல்
- அக்டோபர் 7:
- அக்டோபர் 6:
- இலங்கை வந்துள்ள பிரித்தானிய அமைச்சர் மைக் ஃபோஸ்டர் வவுனியா நிவாரணக் கிராமங்கள், சரணடைந்தவர்களின் புனர்வாழ்வு முகாம்களுக்கு சென்று பார்த்தார். (தினகரன்)
- தென்னிந்திய மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம் ஆகியவற்றில் மழை, வெள்ளம் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்தது. (ஏஎஃப்பி)
- ருவாண்டாவில் 1993 இல் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த நிசெயிமானா என்ற முக்கிய நபர் உகாண்டாவில் கைது செய்யப்பட்டார். (பிபிசி)
- 2009 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு மூவருக்கு அறிவிப்பு
- ருவாண்டா படுகொலைகளுக்காகத் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் கைது
- அக்டோபர் 5:
- நிறப்புரிகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தமைக்காக ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த மூவருக்கு 2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. (ஏபி)
- பாங்கொக் சென்று கொண்டிருந்த பயணிகள் தொடருந்து கவிழ்ந்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)
- நைஜீரியாவில் பொது மன்னிப்பின் கீழ் போராளிகள் ஆயுதங்களுடன் சரணடைவு.
- 2009 மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
- கணித மேதை இசுரேல் கெல்ஃபாண்ட் காலமானார்.
- அக்டோபர் 4:
- கிரேக்கத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜார்ஜ் பாப்பண்ட்ரியூ தலைமையிலான எதிர்க்கட்சி வெற்றியீட்டியது. (நியூயோர்க் டைம்ஸ்)
- தருமபுரி அருகே ஆம்னி பேருந்தும் லாரியும் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்து, 15 பேர் காயமடைந்தனர். (லங்காசிறீ)
- பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக அணியிலிருந்து விலகிவிட்டதாக அறிவித்தது. (லங்காசிறீ)
- தாய்வானில் 6.3 நிலநடுக்கம் பதிவானது. (சனல் நியூஸ்)
- ஆப்பிரிக்கக் கண்டத்திற்கான இரண்டாவது சிறப்பு ஆயர் பேரவையை பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் கூட்டுத் திருப்பலி நிகழ்த்தி தொடங்கி வைத்தார். (பிபிசி)
- ஆப்கானிஸ்தானில் போராளிகளுடனான மோதலில் 8 அமெரிக்கப் படையினர் இறப்பு.
- கிரேக்கப் பொதுத்தேர்தலில் சோசலிசக் கட்சி பெரு வெற்றி
- அக்டோபர் 3:
- பிலிப்பைன்சில் சூறாவளி தாக்கியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். உடமைகளுக்கு பலத்த சேஎதம் ஏற்பட்டது. (ராய்ட்டர்ஸ்)
- சுமாத்திராவில் வார ஆரம்பத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 4,000 பேர் வரையில் நிலத்தில் புதையுண்டிருக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. (சிஎன்னென்)
- லிஸ்பன் உடன்படிக்கைக்கு அயர்லாந்து வாக்காளர்கள் ஆதரவு.
- அக்டோபர் 2:
- இலங்கையில் காலி, கல்வடுகொட பகுதியில் வீசிய கடும் காற்றுக் காரணமாக பஞ்சுமரம் ஒன்று வீழ்ந்ததன் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- இலங்கையின் வடமத்தியில் குருநாகலில் வான் ஒன்றில் குண்டு வெடித்ததில் பாடசாலை மாணவி ஒருவரும், வான் சாரதியும் உயிரிழந்து, 8 சிறுவர்கள் உட்பட்ட 13 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- புதுடில்லியில் இலங்கை தூதரகத்தின் மீது 15 பேர் கொண்ட குழு கற்களால் வீசி தாக்குதல் மேற்கொண்டது. (டெய்லிமிரர்)
- திசைநாயகத்துக்கு பீட்டர் மெக்லர் விருது வழங்கப்பட்டது.
- எத்தியோப்பியாவில் மிகப் பழமையான மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
- அக்டோபர் 1:
- ருமேனியாவின் கூட்டணி அரசு கவிழ்ந்தது. (அல்ஜசீரா)
- சுமாத்திராவில் இரண்டாவது நிலநடுக்கம் (6.8 அளவு) இடம்பெற்றது. முதல் நாள் நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 500 ஐத் தாண்டியது. (பிபிசி)
- சீனாவில் 60 ஆண்டு நிறைவு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. (பிபிசி)
- தமிழ்நாடு அரியலூரில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு
- பிரித்தானியாவில் உச்சநீதிமன்றம் நடைமுறைக்கு வருகிறது
- சுமாத்திரா நிலநடுக்கத்தில் இறந்தோர் எண்ணிக்கை 450 ஐத் தாண்டியது
இறப்புகள்
[தொகு]2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்