மனுவேல் செலாயா
மனுவேல் செலாயா Manuel Zelaya | |
---|---|
ஹொண்டுராஸ் நாட்டுத் தலைவர் | |
பதவியில் 27 ஜனவரி 2006 – 28 ஜூன் 2009 | |
துணை அதிபர் | எல்வின் ஏர்னெஸ்டோ சாந்தோஸ் அரீஸ்டிரெஸ் மெஜியா |
முன்னையவர் | ரிக்கார்டோ மாதுரோ |
பின்னவர் | ரொபேர்ட்டோ மிச்செலெட்டி(பதில்)[1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 செப்டம்பர் 1952 ஹொண்டுராஸ் |
அரசியல் கட்சி | லிபரல் கட்சி |
துணைவர் | சியோமாரா காஸ்ட்ரோ |
ஒசே மனுவேல் செலாயா ரொசாலெஸ் (José Manuel "Mel" Zelaya Rosales, பிறப்பு: செப்டம்பர் 20, 1952) ஹொண்டுராசின் அரசியல்வாதியும், 2006 ஆம் ஆண்டில் அதன் அரசுத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவரும் ஆவார். தான் தொடர்ந்து பதவி வகிக்கும் வகையில் அரசியலமைப்பில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த செலாயா இதற்காக பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமையால் நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது[2]. இதனையடுத்து நாட்டின் இராணுவத் தலைமையால் இவர் 2009, ஜூன் 28 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கொஸ்டா ரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டார். ஆனாலும் சர்வதேச சமூகம் இவரையே இன்னமும் நாட்டின் அதிகாரபூர்வ அரசுத் தலைவராக அங்கீகரித்துள்ளது[3][4].
2005, நவம்பர் 27 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் செலாயா வெற்றி பெற்று 2006, ஜனவரி 27 இல் ஹொண்டுராசின் அரசுத் தலைவராகப் பதவியேற்றார். இவர் லிபரல் கட்சியில் இருந்து தெரிவான 5வது ஜனாதிபதி ஆவார்.