ஏப்ரல் 2011
<< | ஏப்ரல் 2011 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
MMXXIV |
ஏப்ரல் 2011 (April 2011), ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ஏப்ரல் 14 வியாழக்கிழமை தொடங்கி, 2011 மே 14 சனிக்கிழமை முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- ஏப்ரல் 4 - தெலுங்கு வருடப்பிறப்பு
- ஏப்ரல் 7 - உலக சுகாதார நாள்
- ஏப்ரல் 8 - நேச நாயனார் குருபூசை
- ஏப்ரல் 10 - கணநாத நாயனார் குருபூசை
- ஏப்ரல் 12 - ராம நவமி
- ஏப்ரல் 12 - முனையடுவார் நாயனார் குருபூசை
- ஏப்ரல் 14 - சித்திரை ஆண்டுப் பிறப்பு
- ஏப்ரல் 17 - சித்திரா பௌர்ணமி
- ஏப்ரல் 24 - உயிர்த்த ஞாயிறு
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- ஏப்ரல் 13:
- எகிப்தின் முன்னாள் அதிபர் ஒசுனி முபாரக், மற்றும் அவரது இரு மகன்களையும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 15 நாள் காவலில் வைக்க எகிப்திய அரசு உத்தரவிட்டுள்ளது. (பிபிசி)
- ஏப்ரல் 12:
- இலங்கையின் இறுதிக்கட்டப்போர் தொடர்பாக ஐநா நியமித்த மூன்றுபேர் நிபுணர் குழுவின் அறிக்கை ஐநா செயலர் பான் கி மூனிடம் கையளிக்கப்பட்டது.
- ஏப்ரல் 11:
- ஐவரி கோஸ்டின் முன்னாள் அரசுத்தலைவர் லோரண்ட் பாக்போ கைது செய்யப்பட்டதை அடுத்து அலசான் வட்டாராவுடனான நீண்ட நாள் சர்ச்சை முடிவுக்கு வந்தது.
- முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடியபடி முகத்திரை அணிந்து செல்வதற்கு பிரான்சில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பெலருஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் சுரங்கத் தொடருந்து நிலையம் ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டு நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
- ஏப்ரல் 10:
- இத்தாலியில் உள்ள அசிசியின் புனித பிரான்சிசுவின் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லறை மீளப் புனரமைக்கப்பட்டுப் பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 9:
- இந்தியாவில் ஊழலுக்கு எதிராக சட்டங்களைப் பலப்படுத்தக் கோரி 5 நாட்களாக உண்ணாநோன்பிருந்து வந்த அண்ணா அசாரே நடுவண் அரசு அவரது கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்றதை அடுத்து தமது போராட்டத்தைக் கைவிட்டார்.
- ஏப்ரல் 7:
- யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற ஏப்ரல் 12 ஆம் நாளை மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாளாக ஆண்டுதோறும் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானிக்கப்பட்டது.
- ஏப்ரல் 6:
- பிரபல வீணைக் கலைஞர் கல்பகம் சுவாமிநாதன், தென்னிந்தியத் திரைப்பட நடிகை சுஜாதா ஆகியோர் சென்னையில் காலமானார்கள்.
- ஏப்ரல் 2:
- வட அயர்லாந்தில் காவல்துறை அதிகாரி ஒருவரின் வாகனத்திற்குக் கீழே பொருத்தப்பட்ட குண்டு ஒன்று வெடித்ததில் அவர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்.
- 2011 துடுப்பட்ட உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 6 இலக்குகள் வித்தியாசத்தில் வென்று உலகக்கிண்ணத்தை இரண்டாவது தடவையாகத் தனதாக்கிக் கொண்டது.
- ஏப்ரல் 1:
- புளோரிடாவில் குர்ஆன் புனித நூல் எரிக்கப்பதை அடுத்து ஆப்கானித்தானில் இ்டம்பெற்ற வன்முறைகளில் 8 [[ஐநா] பணியாளர்கள் உட்படக் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)
- ஐவரி கோஸ்ட்டில் உலக நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அலசானி ஓட்டாராவுக்கு விசுவாசமான படைகள் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலக மறுக்கும் லோரெண்ட் குபாக்போவின் படைகள் மீது பெரும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்