நேச நாயனார்
Jump to navigation
Jump to search
நேச நாயனார் | |
---|---|
பெயர்: | நேச நாயனார் |
குலம்: | சாலியர் |
பூசை நாள்: | பங்குனி ரோகிணி |
அவதாரத் தலம்: | காம்பீலி |
முக்தித் தலம்: | ஆரூர் [1] |
- “மன்னியசீர் மறைநாவன் நின்றவூர் பூசல்
- வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்” – திருத்தொண்டத்தொகை.
நேச நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2]. நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியர்களைக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்[3].
நுண்பொருள்[தொகு]
- சிவனடியார்களுக்கு உடை உதவுதல் சிறந்த சிவத்தொண்டு
நேசநாயனார் குருபூசை நாள்: பங்குனி உரோகிணி.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
- ↑ 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (01 மார்ச் 2011). நேச நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1966.
- ↑ மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39.
உசாத்துணைகள்[தொகு]
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்