முழுநீறு பூசிய முனிவர்
Appearance
முழுநீறு பூசிய முனிவர் என்போர் திருத்தொண்டர் தொகையில் குறிப்பிடப்படும் சைவ அடியார்கள் ஆவார்கள்.[1] இவர்களை தொகை அடியார்கள் எனும் பிரிவின் கீழ் சைவர்கள் குறிப்பிடுகிறார்கள். சிவச் சின்னங்களில் ஒன்றான திருநீறு அணிந்திருக்கும் அடியவர்களையும் சிவபெருமானாக சைவர்கள் எண்ணுகிறார்கள். உடல் முழுமைக்கும் திருநீறு அணைந்த முனிவர்களை திருத்தொண்டர் தொகையில் தொகை அடியார்களாக குறிப்பிட்டுள்ளார்கள்.
திருநீறு
[தொகு]நீறு, பஷ்பம், கற்பம், அநுகற்பம், உபகற்பம் போன்ற பெயர்களால் திருநீறு அழைக்கப்படுகிறது.
குரு பூசை
[தொகு]முழுநீறு பூசிய முனிவர்களுக்கு பங்குனி மாதத்தின் இறுதி நாளை குரு பூசை நாளாக சைவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆதாரங்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 11.06. முழுநீறு பூசிய முனிவர் புராணம் - நக்கீரன்