சிறப்புலி நாயனார்
Jump to navigation
Jump to search
சிறப்புலி நாயனார் | |
---|---|
பெயர்: | சிறப்புலி நாயனார் |
குலம்: | அந்தணர் |
பூசை நாள்: | கார்த்திகை பூராடம் |
அவதாரத் தலம்: | ஆக்கூர் |
முக்தித் தலம்: | ஆக்கூர் |
- “சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை
சிறப்புலி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1]. பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார். சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். இவர் திருவைந்தெழுத்தொதிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார்[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (01 மார்ச் 2011). சிறப்புலி நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1956.
- ↑ மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39.
உசாத்துணைகள்[தொகு]
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்