நாயன்மார் பட்டியல்
Appearance
(அறுபத்து மூன்று நாயன்மார்கள் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நாயன்மார் என்போர் பெரிய புராணத்தில் குறிப்படப்படுகின்ற 63 சிவனடியார்கள் ஆவார். இவர்களின் வரலாற்றினை பெரிய புராணத்தில் சேக்கிழார் தொகுத்துள்ளார். இவர்களை அறுபத்து மூவர் என்றும் அழைப்பர்.
எண் | பெயர் | குலம் | நாடு | பூசை நாள் | நின்ற நெறி |
---|---|---|---|---|---|
1 | அதிபத்தர் | பரதவர் | சோழ நாடு | ஆவணி ஆயில்யம் | |
2 | அப்பூதியடிகள் | அந்தணர் | சோழ நாடு | தை சதயம் | |
3 | அமர்நீதி நாயனார் | வணிகர் | சோழ நாடு | ஆனி பூரம் | |
4 | அரிவட்டாயர் | வேளாளர் | சோழ நாடு | தை திருவாதிரை | |
5 | ஆனாய நாயனார் | இடையர் | மழநாடு | கார்த்திகை ஹஸ்தம் | |
6 | இசைஞானியார் | ஆதி சைவர் | நடு நாடு | சித்திரை சித்திரை | |
7 | இடங்கழி நாயனார் | வேளிர்[1] | கோனாடு | ஐப்பசி கார்த்திகை | |
8 | இயற்பகை நாயனார் | வணிகர் | சோழ நாடு | மார்கழி உத்திரம் | |
9 | இளையான்குடிமாறார் | வேளாளர் | சோழ நாடு | ஆவணி மகம் | |
10 | உருத்திர பசுபதி நாயனார் | அந்தணர் | சோழ நாடு | புரட்டாசி அசுவினி | |
11 | எறிபத்த நாயனார் | மரபறியார் | சோழ நாடு | மாசி ஹஸ்தம் | |
12 | ஏயர்கோன் கலிகாமர் | வேளாளர் | சோழ நாடு | ஆனி ரேவதி | |
13 | ஏனாதி நாதர் | சான்றார் | சோழ நாடு | புரட்டாசி உத்திராடம் | |
14 | ஐயடிகள் காடவர்கோன் | குறுநில மன்னர் | தொண்டை நாடு | ஐப்பசி மூலம் | |
15 | கணநாதர் | அந்தணர் | சோழ நாடு | பங்குனி திருவாதிரை | |
16 | கணம்புல்லர் | செங்குந்தர் [2][3] | சோழ நாடு | கார்த்திகை கார்த்திகை | |
17 | கண்ணப்பர் | வேடர் | தொண்டை நாடு | தை மிருகசீருஷம் | |
18 | கலிய நாயனார் | செக்கார் | தொண்டை நாடு | ஆடி கேட்டை | |
19 | கழறிற்றறிவார் | அரசன் | மலை நாடு | ஆடி சுவாதி | |
20 | கழற்சிங்கர் | குறுநில மன்னர் | தொண்டை நாடு | வைகாசி பரணி | |
21 | காரி நாயனார் | மரபறியார் | சோழ நாடு | மாசி பூராடம் | |
22 | காரைக்கால் அம்மையார் | வணிகர் | சோழ நாடு | பங்குனி சுவாதி | |
23 | குங்கிலியகலையனார் | அந்தணர் | சோழ நாடு | ஆவணி மூலம் | |
24 | குலச்சிறையார் | மரபறியார் | பாண்டிய நாடு | ஆவணி அனுஷம் | |
25 | கூற்றுவர் | களப்பாளர் | பாண்டிய நாடு | ஆடி திருவாதிரை | |
26 | கலிக்கம்ப நாயனார் | வணிகர் | நடு நாடு | தை ரேவதி | |
27 | கோச்செங்கட் சோழன் | அரசன் | சோழ நாடு | மாசி சதயம் | |
28 | கோட்புலி நாயனார் | வேளாளர் | சோழ நாடு | ஆடி கேட்டை | |
29 | சடைய நாயனார் | ஆதி சைவர் | நடு நாடு | மார்கழி திருவாதிரை | |
30 | சண்டேசுவர நாயனார் | அந்தணர் | சோழ நாடு | தை உத்திரம் | |
31 | சக்தி நாயனார் | வேளாளர் | சோழ நாடு | ஐப்பசி பூரம் | |
32 | சாக்கியர் | வேளாளர் | சோழ நாடு | மார்கழி பூராடம் | |
33 | சிறப்புலி நாயனார் | அந்தணர் | சோழ நாடு | கார்த்திகை பூராடம் | |
34 | சிறுதொண்டர் | மாமாத்திரர் | சோழ நாடு | சித்திரை பரணி | |
35 | சுந்தரமூர்த்தி நாயனார் | ஆதி சைவர் | நடு நாடு | ஆடிச் சுவாதி | |
36 | செருத்துணை நாயனார் | வேளாளர் | சோழ நாடு | ஆவணி பூசம் | |
37 | சோமசிமாறர் | அந்தணர் | சோழ நாடு | வைகாசி ஆயிலியம் | |
38 | தண்டியடிகள் | சோழ நாடு | பங்குனி சதயம் | ||
39 | திருக்குறிப்புத் தொண்டர் | ஏகாலியர் | தொண்டை நாடு | சித்திரை சுவாதி | |
40 | திருஞானசம்பந்தமூர்த்தி | அந்தணர் | சோழ நாடு | வைகாசி மூலம் | |
41 | திருநாவுக்கரசர் | வேளாளர் | நடு நாடு | சித்திரை சதயம் | |
42 | திருநாளை போவார் | புலையர் | சோழ நாடு | புரட்டாசி ரோகிணி | |
43 | திருநீலகண்டர் | குயவர் | சோழ நாடு | தை விசாகம் | |
44 | திருநீலகண்ட யாழ்ப்பாணர் | பாணர் | நடு நாடு | வைகாசி மூலம் | |
45 | திருநீலநக்க நாயனார் | அந்தணர் | சோழ நாடு | வைகாசி மூலம் | |
46 | திருமூலர் | இடையர் | வடநாடு | ஐப்பசி அசுவினி | |
47 | நமிநந்தியடிகள் | அந்தணர் | சோழ நாடு | வைகாசி பூசம் | |
48 | நரசிங்க முனையர் | முனையர் | நடுநாடு | புரட்டாசி சதயம் | |
49 | நின்றசீர் நெடுமாறன் | அரசர் | பாண்டிய நாடு | ஐப்பசி பரணி | |
50 | நேச நாயனார் | சாலியர் | குடகு | பங்குனி ரோகிணி | |
51 | புகழ்சோழன் | மரபறியார்-அரசன் | சோழ நாடு | ஆடி கார்த்திகை | |
52 | புகழ்த்துணை நாயனார் | ஆதி சைவர் | சோழ நாடு | ஆவணி ஆயிலியம் | |
53 | பூசலார் | அந்தணர் | தொண்டை நாடு | ஐப்பசி அனுஷம் | |
54 | பெருமிழலைக் குறும்பர் | குறும்பர் | சோழ நாடு | ஆடி சித்திரை | |
55 | மங்கையர்க்கரசியார் | மரபறியார்-அரசர் | பாண்டிய நாடு | சித்திரை ரோகிணி | |
56 | மானக்கஞ்சாற நாயனார் | வேளாளர் | சோழ நாடு | மார்கழி சுவாதி | |
57 | முருக நாயனார் | அந்தணர் | சோழ நாடு | வைகாசி மூலம் | |
58 | முனையடுவார் நாயனார் | வேளாளர் | சோழ நாடு | பங்குனி பூசம் | |
59 | மூர்க்க நாயனார் | வேளாளர் | சோழ நாடு | கார்த்திகை மூலம் | |
60 | மூர்த்தி நாயனார் | வணிகர் | பாண்டிய நாடு | ஆடி கார்த்திகை | |
61 | மெய்ப்பொருள் நாயனார் | குறுநில மன்னர் | நடுநாடு | கார்த்திகை உத்திரம் | |
62 | வாயிலார் நாயனார் | வேளாளர் | தொண்டை நாடு | மார்கழி ரேவதி | |
63 | விறன்மிண்ட நாயனார் | வேளாளர் | மலை நாடு | சித்திரை திருவாதிரை |
உசாத்துணை நூல்கள்
[தொகு]- துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
- துர்க்காதாஸ் எஸ்.கே.ஸ்வாமி, "அறுபத்து மூவர் கதைகள்", பிரேமா பிரசுரம்
- ↑ சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திருத்தொண்டத் தொகை-கடல் சூழ்ந்த சருக்கம்-இடங்கழி நாயனார் புராணம் பாடல் எண்:3
- ↑ புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:85
- ↑ காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:26
- ↑ புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:86
- ↑ காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:27