வேடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வேடர்கள் என்போர் சாதாரண மக்களின் வாழ்வியல் தன்மைகளில் இருந்து வேறுபட்டவர்களாக அல்லது சாதாரண மனித வாழ்க்கைக்கு இன்னும் தம்மை தயார்படுத்திக்கொள்ளாதவர்களாக வேட்டையாடி புசிக்கும் வழக்கை பழக்கமாகக் கொண்டு காடுகளின் வசிப்பவர்களை குறிக்கும் பெயராகும். அதாவது வேட்டையாடி காடுகளில் வசிப்போர் வேடர்கள் ஆவர்.

மனிதவர்க்கம் படிப்படியான வளர்ச்சி நிலையை அடையும் முன்னர், உலகில் உள்ள அனைத்து மக்களுமே ஒரு காலகட்டத்தில் வேடர்களாக இருந்து வளர்ச்சி நிலையை அடைந்தவர்கள் என்றே கருதப்படுகிறது. காடுகளின் வேட்டையாடி புசிக்கத்தொடங்கிய மனிதன், முதல் படிநிலையாக ஆற்றுக் கரைகளின் குடிகள் அமைத்து விவசாயம் செய்யவும், குடிகள் அமைத்து வாழவும், செல்லப்பிராணிகளை வளர்க்கவும் பழகினர் என்றும், அதன் பின்னரே கிராமங்களாகத் தோற்றம் பெற்று, கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்து, நகரங்களும் நாடுகளும் தோற்றம் பெற்றன என மனிதனின் படிநிலை வரலாறு காட்டுகிறது.

இலங்கை வேடர்கள்[தொகு]

இவ்வாறு காடுகளில் வேட்டையாடி வாழும் வேடர்கள் இலங்கையிலும் வசிக்கின்றனர். அவர்களை இலங்கை வேடர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

உலகில் வேடர்கள்[தொகு]

ஆனால் இந்த வளர்ச்சி நிலையை இன்னமும் அடையாமல் அல்லது இன்றைய மனித வளர்ச்சி வாழ்க்கைக்கு தம்மை தயாராக்கிக்கொள்ளாமல் அல்லது தெரியாமல் தற்போதும் காடுகளில் வேட்டையாடி புசித்தலை வாழ்க்கையாகக் கொண்டு வாழும் வேடர்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் வசிக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேடர்&oldid=2761397" இருந்து மீள்விக்கப்பட்டது