உள்ளடக்கத்துக்குச் செல்

செருத்துணை நாயனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செருத்துணை நாயனார்
பெயர்:செருத்துணை நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:ஆவணி பூசம்
அவதாரத் தலம்:கீழ்த்தஞ்சை
முக்தித் தலம்:ஆரூர்

செருத்துணை நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1]. சோழ நாட்டின் பகுதியாகிய மருகனாட்டில் உள்ள தஞ்சாவூரிலே வேளாண்குடி முதல்வராய்த் தோன்றியவர் செருத்துணையார். சிவபிரான் திருவடியில் மெய்யன்புடையவர்[2]. இவர் திருவாரூர் சென்று இறைவரது திருக்கோயில் திருமுன்றனில் விளங்கும் பணிகளைக் காலந்தோறும் இறைவரை வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டுவரும் ஒரு நாள் பல்லவ அரசர் கழற்சிங்கரது பட்டத்து உரிமைத்தேவி அங்கு பூமண்டபத்தின் பக்கம் விழுந்த புதுப்பூவை எடுத்து மோந்ததனைக் கண்டார். அவ் அபராதத்திற்காக வேகத்துடன் சென்று கருவி கொண்டு அவளது மூக்கினை அரிந்தார். இவ்வாறு திருத்தொண்டு உலகில் விளங்கச் செய்து சிவனடி சேர்ந்து இன்பமுற்றார்.

நுண்பொருள்[தொகு]

  1. பூசைனைக்குரிய பொருள் புனிதமானது.
  2. அதனைக் கடப்பதும் மோப்பதும் ஆகிய கருமங்களால் எச்சிப்படுத்துவது சிவநிந்தை.
  3. இத்தகைய சிவநிந்தை செய்வோர் எத்தகையோராயினும் தக்க முறையில் தண்டிக்கப்படுதற்குரியர்.

செருத்துணை நாயனார் குருபூசைநாள்: ஆவணிபூசம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 63 நாயன்மார்கள், ed. (07 பிப்ரவரி 2011). செருத்துணை நாயன்மார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  2. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருத்துணை_நாயனார்&oldid=3500912" இலிருந்து மீள்விக்கப்பட்டது