யூரி ககாரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
யூரி ககாரின்
Yuri Gagarin
Юрий Гагарин
யூரி ககாரின்
விண்வெளி வீரர்
தேசியம் உருசியர்
பிறப்பு மார்ச்சு 9, 1934(1934-03-09)
குளூசினோ,  சோவியத் ஒன்றியம்
இறப்பு மார்ச்சு 27, 1968(1968-03-27) (அகவை 34)
கிர்சாக்,  சோவியத் ஒன்றியம்
வேறு தொழில் விமானி
படிநிலை பல்கோவ்னிக், சோவியத் வான்படை
விண்பயண நேரம் 1 மணி, 48 நிமி
தெரிவு வான்படை குழு 1
பயணங்கள் வஸ்தோக் 1
பயண
சின்னம்
Vostok1patch.png

யூரி அலெக்சியேவிச் ககாரின் (Yuri Alekseyevich Gagarin, உருசிய மொழி: Ю́рий Алексе́евич Гага́рин; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) உருசிய விண்வெளி வீரர் ஆவார். விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று சோவியத் ஒன்றியத்தின் வசுத்தோக்-1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

யூரி ககாரின் உருசியாவின் சிமோலியென்சுக் மாகாணத்தில் கிசாத்ஸ்க் நகரில் (1968 இல் இந்நகரின் பெயர் ககாரின் என மாற்றப்பட்டது) குளூசினோ என்ற ஊரில் பிறந்தார்.[1] பெற்றோர் ஒரு கூட்டுப் பண்ணை ஒன்றில் பணியாற்றியவர்கள்.[2] யூரி சரத்தோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார்.[3] 1955 இல் ஒரென்பூர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார்.[3] அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார்.[4] அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.[5]

சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணைவு[தொகு]

1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி.[2] இவர்களுக்கு அங்கு உடலியல் ரீதியிலும் உளவியல் ரீதியிலும் மிகவும் கடுமையான பயிற்சி கொடுக்கப்பட்டது. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின், கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.[6]

விண்வெளிப் பயணம்[தொகு]

ககாரின் 1961 ஏப்ரல் 12 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார்.[7] விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார்.[7] அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப்படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Hanbury-Tenison, Robin, தொகுப்பாசிரியர் (2010). The Great Explorers. London: Thames & Hudson. p. 270. ISBN 978-0-500-25169-0. 
  2. 2.0 2.1 Tito, Dennis (13 November 2006). "Yuri Gagarin". Time Europe via Time.com. Archived from the original on 26 March 2008. https://web.archive.org/web/20080326180036/http://www.time.com/time/europe/hero2006/gagarin.html. 
  3. 3.0 3.1 Rodgers, Paul (3 April 2011). "Yuri Gagarin: The man who fell to Earth". The Independent. Archived from the original on 4 April 2011. https://web.archive.org/web/20110404093839/http://www.independent.co.uk/news/science/yuri-gagarin-the-man-who-fell-to-earth-2257505.html. 
  4. Rosenberg, Jennifer. "Yuri Gagarin: The First Man in Space". About.com. பார்த்த நாள் 26 March 2013.
  5. "Юрий Алексеевич Гагарин" (ru). Astronaut.ru (11 July 2007). பார்த்த நாள் 30 March 2008.
  6. Siddiqi 2000, p. 262.
  7. 7.0 7.1 Siddiqi 2000, p. 275.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரி_ககாரின்&oldid=2231136" இருந்து மீள்விக்கப்பட்டது