செப்டம்பர் 2015
<< | செப்டம்பர் 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | |||
MMXXIV |
செப்டம்பர் 2015 (September 2015), 2015 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமாகும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- செப்டம்பர் 22 - கேதாரகௌரி விரதம் ஆரம்பம்
- செப்டம்பர் 23 - ஏனாதிநாத நாயனார் குருபூசை
- செப்டம்பர் 26 - நரசிங்க முனையரைய நாயனார் குருபூசை
- செப்டம்பர் 30 - உருத்திர பசுபதி நாயனார் குருபூசை
நிகழ்வுகள்
[தொகு]- செப்டம்பர் 29:
- 2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து: 1000ற்கும் மேற்பட்டோர் இறந்ததாகக் கூறப்படும் தகவல்களை சவூதி அதிகாரிகள் மறுத்தனர். (பிபிசி)
- ஆப்கானித்தானில் குண்டூசு நகரை தாலிபான்களிடம் இருந்து மீளக் கைப்பற்றும் முயற்சியில் ஆப்கானியப் படையினர் இறங்கினர். அமெரிக்க வான்படை தாலிபான்கள் மீது தாக்குதல்களை நடத்தின. (சீஎனென்), (நியூசு ஹப்) (வாசிங்டன் போஸ்ட்)
- புர்க்கினா பாசோ இராணுவத்தினர் இராணுவப் புரட்சி நடத்திய சனாதிபதி பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களின் தலைமையகத்தைக் கைப்பற்றினர். தமது படையினரை சரணடையுமாறு சனாதிபதி பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் கேட்டுக் கொண்டார். (நியூயோர்க் டைம்சு) (பிபிசி)
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு தலைநகர் பாங்கியின் கரபா சிறையில் இருந்து அனைத்து 500 கைதிகளும் தப்பி ஓடினர். (ராய்ய்டர்சு)
- பசிபிக் பெருங்கடலில் சொலமன் தீவுகளுக்கு அருகே சிவப்பு, பச்சை நிறங்களில் உயிருயுடனொளிரும் மிக அருகிய அழுங்காமைகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். (லைவ் சயன்சு) (சீஎனென்)
- செப்டம்பர் 27:
- யெமன் செங்கடல் எல்லைப் பகுதியில் சவூதி உலங்குவானூர்திகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். (யூரோநியூசு)
- மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தலைநகர் பாங்கியில் கிறித்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 21 பேர் உயிரிழந்தனர், 100 பேர் காயமடைந்தனர். (டெலிகிராப்)
- செப்டம்பர் 26:
- சர்ச்சைக்குரிய நகோர்னோ-கரபாக் பகுதியில் அசர்பைசானியர்களின் தாக்குதலில் குறைந்தது நான்கு ஆர்மீனியப் படையினர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு),(பொக்சு நியூஸ்)
- 2015 பசிபிக் சூறாவளிப் பருவகாலம்: அவாய்த் தீவுகளின் கடற்பகுதியில் நியாலா சூறாவளி தோன்றியது.(அக்கியுவெதர்)
- இலண்டனில் பள்ளிவாசல் ஒன்று தீப்பற்றி பெரும் சேதமடைந்தது. (பிபிசி)
- 2015 ஹஜ் கூட்ட நெரிசல் விபத்து: இறந்தோரின் எண்ணிக்கை 769 ஆக அதிகரித்தது, 934 பேர் காயமடைந்தனர். (ஐடிவி)
- உருசியாவும் எசுத்தோனியாவும் இரண்டு ஒற்றர்களை தமக்குள்ளே பரிமாறிக் கொண்டனர். (பிபிசி)
- செப்டம்பர் 25:
- இலங்கையின் மலையகத்தில் இறம்பொடையில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். (தினகரன்),(தி ஐலண்டு)
- சீனா 2017 ஆம் ஆண்டில் கரிமச் சந்தையை நிறுவும் பொருட்டு மாசு வெளிப்பாடு தடுப்பு வணிகக் கொள்கையை அறிமுகப்படுத்தியது. (கார்டியன்)
- உக்ரைன் உருசியாவின் ஏரோபுளொட் வானூர்திகள் தமது வான்பரப்பில் பறப்பதற்குத் தடை விதித்தது. (உக்ரைன் டுடே)
- இந்தோனேசியாவின் மேற்கு பப்புவா மாகாணத்தில் கடற்பரப்பில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 39 பேர் காயமடைந்தனர்.(நியூயோர்க் டெய்லி நியூஸ்)
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி: குரோவாசியா செர்பியாவுடனா எல்லையை மீண்டும் திறந்தது. (ராய்ட்டர்சு)
- செப்டம்பர் 24:
- சவூதி அரேபியாவின் மெக்கா நகருக்கு அருகே மினா எனுமிடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்தனர்; 863 பேர் காயமடைந்தனர். (தி இந்து)
- செப்டம்பர் 22:
- புர்க்கினா பாசோவில் இராணுவப் புரட்சி நடத்தியவர்கள் அரசுத்தலைவரையும், பிரதமரையும் விடுவித்தனர். இராணுவம் தலைநகர் வாகடூகுக்குள் நுழைந்தது. (டிடபிள்யூ)
- திருத்தந்தை பிரான்சிசு அமெரிக்காவுக்குத் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டார். (கார்டியன்)
- ஏப்பி பர்த்டே டூ யூ பாடலுக்கான பதிப்புரிமையை வார்னர்/சேப்பல் மியூசிக் நிறுவனம் கொண்டிருக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (என்பிசி)
- செப்டம்பர் 21
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி: "புலம்பெயர்வோரால் ஐரோப்பிய எல்லைகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன" என அங்கேரி பிரதமர் தெரிவித்தார். புலம்பெயர்வோரைக் கட்டுப்படுத்த இரப்பர் குண்டுகள், கண்ணீர் புகை குண்டுகள் ஆகியவற்றை இராணுவம் பயன்படுத்துவதை அனுமதிக்கும் புதிய சட்டத்திற்கு அங்கேரி நாடாளுமன்றம் அனுமதியளித்தது. (பிபிசி)
- சிரிய உள்நாட்டுப் போர்: உருசியா ஆளில்லாத வானூர்திகளை சிரியாமீது பறக்க விட்டதாக அமெரிக்கா கூறியது. (ராய்ட்டர்சு)
- யெமன் தலைநகர் சனா மீது சவூதிக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- செப்டம்பர் 20:
- யெமனிய ஊத்திப் போராளிகள் மூன்று அமெரிக்க, இரண்டு சவூதி, ஒரு பிரித்தானியப் பணயக் கைதிகளை விடுவித்தனர். (பிபிசி)
- நைஜீரியாவின் மைதுகிரி நகரில் போகோ அராம் தாக்குதல்களில் 80 பேர் கொல்லப்பட்டனர், 150 பேர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)
- கேம் ஆஃப் துரோன்சு சிறந்த நாடகத் தொடருக்கான எம்மி விருதைப் பெற்றது. (ஏபிசி)
- கியூபாவில் திருத்தந்தை பிரான்சிசு முன்னாள் கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்து உரையாடினார். (ஏபிசி), (யூஎஸ்ஏ டுடே)
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி: அங்கேரி ஊடாக 11,000 ஏதிலிகள் ஆஸ்திரியா வந்தடைந்தனர். (சிபிஎஸ்)
- கிரீசில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தீவிர இடதுசாரிக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ('கார்டியன்)
- நேபாளத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அந்நாடு மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது.(ராய்ட்டர்சு)
- செப்டம்பர் 19:
- சிரிய உள்நாட்டுப் போர்: அபு அல்-துகூர் வான்தளத்தைக் கைப்பற்றியதை அடுத்து இசுலாமியப் போராளிகள் 56 சிரிய இராணுவத்தினரைக் கொன்றனர். (டெலிகிராப்)
- துருக்கி போர் விமானங்கள் குர்திசுத்தான் தொழிலாளர் கட்சியின் வட ஈராக்கியத் தளங்களில் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- திருத்தந்தை பிரான்சிசின் பயணங்கள்: திருத்தந்தை பிரான்சிசு கியூபா, மற்றும் ஐக்கிய அமெரிக்காவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார். (வத்திக்கான்), (USCCB), (நியூயார்க் டைம்சு)
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி:
- ஒரே நாளில் 12,000 முதல் 13,000 பேர் வரையிலான ஏதிலிகள் ஆசுதிரியாவிற்குள் நுழைந்தனர். "ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை அண்டை நாடுகள் கடைப்பிடிக்கவில்லை" என ஆசுதிரியா குற்றஞ்சாட்டியது. குரோவாசியாவிலிருந்து சுலோவேனியா வழியாக ஏதிலிகள் வந்துசேருதல் குறித்தும் தனது கவலையை ஆசுதிரியா தெரிவித்தது.(பிபிசி)
- குரோவாசியாவில் இருந்து 1000 சிரிய ஏதிலிகளை ஏற்றி வந்த தொடருந்து ஒன்றை அங்கேரியப் படையினர் கைப்பற்றினர். (ஸ்கை நியூசு)
- சுலு சுல்தானகத்திற்கு பாத்தியதை இருப்பதாகக் கூறி 2013ல் சாபாவில் தாக்குதல் நடத்திய, அதன் சுல்தானகத்தின் தலைவர் என்று அறிவித்துக்கொண்ட இஸ்மாயில் கிராம் II காலமானார்.(நியூயார்க் டைம்ஸ்)
- செப்டம்பர் 18:
- பாக்கித்தான், பெசாவர் நகருக்கு வெளியே பாக்கித்தானின் தெகரிக்கு-இ-தாலிபான் போராளிகள் பள்ளிவாசல் ஒன்றில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு பாதுகாப்புப் படையினரும், 17 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். (எஸ்பிஎஸ்)
- 2015 இல்லாபெல் புவிநடுக்கம்: சிறிய ஆழிப்பேரலை சப்பானியக் கரையத் தாக்கியது. (ஏபி)
- வடக்கு இங்கிலாந்தில் கொணோறியா நோய் 15 பேருக்குத் தொற்றியதை அடுத்து ஐக்கிய இராச்சியத்தில் தேசிய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. (ஏஏபி)
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி: குரோவாசியா செர்பியாவுடனான தனது எட்டு எல்லைகளில் ஏழை மூடியது. (பிபிசி)
- செப்டம்பர் 17:
- அரபுக் கூட்டுப்படை விமானங்கள் யெமனின் தலைநகர் சனா மீது தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- 2015 இல்லாபெல் புவிநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. ஆழிப்பேரலை 4.5 மீட்டர்களுக்கு எழுந்தது. (சிபிஎசு),(கார்டியன்)
- தெற்கு சூடானில் எண்ணெய்த் தாங்கி ஒன்று வெடித்ததில் 180 பேர் கொல்லப்பட்டனர் (ஆர்டி)
- தில்லியில் டெங்குக் காய்ச்சல் நோயால் 14 பேர் உயிரிழந்தனர். (என்டிடிவி)
- ஐரோப்பியப் புலம்பெயர்வோர் நெருக்கடி: ஏழாயிரம் ஏதிலிகள் குரோவாசியா சென்றடைந்தனர். (WA டுடே)
- 120,000 ஏதிலிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குடியமர்த்த ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. (ஏபிசி)
- புர்க்கினா பாசோவின் தற்காலிக அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. (டெய்லி டெலிகிராப்), (பிபிசி)
- செப்டம்பர் 16:
- குர்திசுத்தான் தொழிலாளர் கட்சிப் போராளிகள் ஐந்து துருக்கியப் படைகளைத் தாக்கிக் கொன்றனர். (டெய்லி சாபா)
- 2015 இல்லாபெல் புவிநடுக்கம்: 8.3 அளவு நிலநடுக்கம் சிலிக்கு அருகே பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டதில் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குறைந்தது 5 பேர் உயிரிழந்தனர். (ஏபி),(சீஎனென்)
- 2024 கோடை ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு புடாபெஸ்ட், ஆம்பர்க், லாஸ் ஏஞ்சலஸ், பாரிஸ், உரோம் ஆகிய நகரங்கள் போட்டியிடுவதாக பன்னாட்டு ஒலிம்பிக் குழு அறிவித்தது. (சீஎனென்)
இறப்புகள்
[தொகு]- செப்டம்பர் 6 - உ. இராதாகிருஷ்ணன், ஈழத்து வயலின் கலைஞர் (பி. 1943)
- செப்டம்பர் 9 - கந்தையா குணரத்தினம், இயற்பியலாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் (பி. 1934)
- செப்டம்பர் 11 - ஜோசப் ராஜேந்திரன், ஈழத்து மெல்லிசைப் பாடகர்
- செப்டம்பர் 13 - பிரயன் குளோஸ், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் (பி. 1931)
- செப்டம்பர் 14 - கௌதம நீலாம்பரன், தமிழக எழுத்தாளர் (பி. 1948)
- செப்டம்பர் 14 - இந்திக குணவர்தனா, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1943)
- செப்டம்பர் 17 - ஜக்மோகன் டால்மியா, பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை முன்னாள் தலைவர் (பி. 1940)
- செப்டம்பர் 23 - தயானந்த சரசுவதி சுவாமிகள், அத்வைத வேதாந்த ஆசிரியர் (பி. 1930)
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்