சூலை 2015
<< | சூலை 2015 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
MMXXIV |
சூலை 2015 (July 2015, ஜூலை 2015), 2015 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- சூலை 9 - கலிக்கம்ப நாயனார் குருபூசை
நிகழ்வுகள்
[தொகு]- சூலை 5:
- சிரியாவின் அல்-ராக்கா நகர் மீது அமெரிக்க விமானக்கள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்தனர். (ஏஎஃப்பி)
- கிரேக்கத்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியம், அனைத்துலக நாணய நிதியம், ஐரோப்பிய நடுவண் வங்கி ஆகியவற்றின் கடன் பிணையை பெறும் நிபந்தனைகளை நிராகரித்து பெரும்பான்மையான மக்கள் (61.3%) வாக்களித்தனர். (ஸ்கை), (கார்டியன்) (ராய்ட்டர்சு)
- கடந்தவாரம் எசுபேசுஎக்சு விபத்துக்குள்ளானதை அடுத்து உருசியாவின் விண்கலம் ஒன்று பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு சரக்குகளை எடுத்துச் சென்றது. (சீஎனென்)
- கனடாவின் வான்கூவர் நகரில் இடம்பெற்ற 2015 பீஃபா பெண்கள் உலககோப்பை இறுதி ஆட்டத்தில் அமெரிக்க அணி சப்பானை 5-2 என்ற கணக்கில் வென்றது. (பிபிசி)
- சூலை 4:
- யெமனின் ஹூத்தி போராளிகள் சவூதியின் ஜிசான், நாஜ்ரன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். பெருமளவு சவூதிப் படையினர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)
- குர்திய மக்கள் பாதுகாப்புப் படையினர் இசுலாமிய தேசக் கட்டுப்பாட்டிலுள்ள ராக்கா நகர் நோக்கி முன்னேறினர். (அல்ஜசீரா)
- பல்மைரா நகரில் இசுலாமிய தேசப் போராளிகள் 25 சிரியப் படையினரை மரணதண்டனைக்குட்படுத்திக் கொன்றனர். (அல்-அராபியா)
- துனீசியாவில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. (விஓஏ)
- சூலை 3:
- சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தில் 6.5 நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 4 பேர் உயிரிழந்தனர், 48 பேர் காயமடைந்தனர். (பிபிசி)
- அதிமீயொலிவேகத்துடன் மாக் 5 உடன் பயணிக்கக்கூடிய ஆயுதம் ஒன்றை 2023 ஆம் ஆண்டுக்குள் தயாரிக்கவிருப்பதாக ஐக்கிய அமெரிக்க வான்படையின் மூத்த அறிவியலாளர் மைக்கா என்ட்ஸ்லி தெரிவித்தார். (சீஎனென்)
- சூரிய ஆற்றலுடன் கூடிய சோலார் இம்பல்சு-2 வானூர்தி சப்பானில் இருந்து சென்று அவாயில் தரையிறங்கியது. (பிபிசி)
- சூலை 2:
- எகிப்திய வான்படையினர் சினாய் தீபகற்பம் மீது தாக்குதல் நடத்தில் 23 இசுலாமிய தேச-தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதிகளைக் கொன்றனர். (ராய்ட்டர்சு)
- மாலியின் வடக்கே இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஆறு ஐநா படையினர் கொல்லப்பட்டனர். (ஏபி)
- பிலிப்பீன்சில் 173 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர். 50 பேர் வரையில் காப்பாற்றப்பட்டனர். (பிபிசி)
- சூலை 1:
- சினாய் பகுதியில் எகிப்திய இராணுவத்தினர் மீது போராளிகள் நடத்திய தாக்குதலில் 30 படையினர் கொல்லப்பட்டனர். (எல்-அக்ரம்)
- பன்னாட்டு நாணய நிதியத்துக்கு செலுத்த வேண்டிய கடன்தொகையை கிரேக்கம் செலுத்தத் தவறிய நிலையில் அந்நாட்டுக்கான நிதியுதவிகள் தடைப்பட்டன. (பைனான்சியல் டைம்சு)
- இந்தோனேசியாவின் மேடான் நகரில் நேற்று இடம்பெற்ற விமான விபத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்தது. (கார்டியன்)
- இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2015: முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச தாம் போட்டியிடப் போவதாக அறிவித்தார். (பிபிசி)
- பால் வழியின் வி404 சிக்னி என்ற விண்மீனில் உள்ள கருந்துளை 26 ஆண்டுகளின் பின்னர் விழித்தெழுந்து காம்மா கதிர்களை வீச ஆரம்பித்தது. (எம்எஸ்என்)
இறப்புகள்
[தொகு]- சூலை 1 - செசில், தென்னாப்பிரிக்க சிங்கம் (பி. 2002)
- சூலை 5 - நாம்பு ஓச்சிரோ, அமெரிக்க இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1921)
- சூலை 8 - பில் ஃபூர்ட், இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர் (பி. 1924)
- சூலை 10 - ஒமார் சரீப், எகிப்திய நடிகர் (பி. 1932)
- சூலை 11 - பூ. செந்தூர் பாண்டியன், தமிழக அரசியல்வாதி, அமைச்சர் (பி. 1951)
- சூலை 14 - எம். எஸ். விஸ்வநாதன், இசையமைப்பாளர் (பி. 1928)
- சூலை 17 - இழூல்சு பியான்கி, பிரெஞ்சு தானுந்துப் பந்தய ஓட்டுநர் (பி. 1989)
- சூலை 25 - சீலன் கதிர்காமர், இலங்கை வரலாற்றாளர், எழுத்தாளர், இடதுசாரி அரசியல்வாதி (பி. 1934)
- சூலை 28 - கிளைவ் ரைஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட வீரர் (பி. 1949)
- சூலை 28 - சுனிதி சாலமன், இந்திய மருத்துவர்
- சூலை 30 - யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி, 1993 மும்பை குண்டுவெடிப்புகளில் பங்கு கொண்டவர் (பி. 1962)
- சூலை 31 - சசிபெருமாள், காந்தியவாதி
2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்