சுனிதி சாலமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சுனிதி சாலமன் (Suniti Solomon) (1938 அல்லது 1939 – 28 சூலை 2015) என்பவர் ஒரு மருத்துவராவார். இவர்தான் இந்தியாவின், தமிழகத்தின் சென்னையில் 1986 முதன் முதலில் எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதை கண்டறிந்தவர் ஆவார்.[1] இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் நுண்ணுயிரியல் பேராசிரியராக அப்போது இருந்தார்.

பணிகள்[தொகு]

இவர் எயிட்ஸ் நோயாளிகளுக்கான இந்தியாவின் முதல் தன்னார்வ ஆலோசனை மற்றும் சோதனை மையத்தை சென்னை மருத்துவக் கல்லூரியில் 1993இல் நிறுவினார். 1993இல் தன் வேலையை விட்டு விலகி எயிட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிக்கும் ஒயி.ஆர்.ஜி. கேர் தொண்டு நிறுவனத்தைத் தோற்றுவித்தார். எயிட்ஸ் நோயிக்கு எந்த மருத்துவமனையும் சிகிச்சை அளிக்க மறுத்த அந்தக் காலகட்டத்தில் குறைந்த வசதிகளுடன் சென்னை பாண்டி பசார் பகுதியில் கூடாரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கத் துவங்கினார்.

விருதுகள்[தொகு]

  • இவரது பணிகளை பாராட்டும் விதமாக 2009ஆம் ஆண்டு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் தேசிய பெண்கள் உயிரியல் அறிவியலாளர் விருதை வழங்கினர்.[2][3][4][5]
  • தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dr. Suniti Solomon, Pioneering Indian HIV/AIDS Researcher, Dies at 76". டைம். பார்த்த நாள் 29 July 2015.
  2. "Suniti Solomon, who woke India up to HIV threat, dies at 76". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (29 July 2015). பார்த்த நாள் 29 July 2015.
  3. "Dr Suniti Solomon, who pioneered HIV research and treatment in India, passes away". Arun Janardhanan. Indian Express (29 July 2015). பார்த்த நாள் 29 July 2015.
  4. "Dr Suniti Solomon, part of team who detected HIV, passes away". Rediff (28 July 2015). பார்த்த நாள் 29 July 2015.
  5. "Suniti Solomon, Doctor Who Awakened India To HIV, Passes Away". Huffington Post (28 July 2015). பார்த்த நாள் 29 July 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனிதி_சாலமன்&oldid=2726724" இருந்து மீள்விக்கப்பட்டது