செசில் (அரிமா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செசில்
Cecil the lion at Hwange National Park (4516560206).jpg
வாங்கே தேசியப் பூங்காவில் செசில் (2010).
இனம்சிங்கம்
பால்ஆண்
பிறப்புஅண். 2002
இறப்பு1 சூலை 2015(2015-07-01) (அகவை 13)
வாங்கே மாவட்டம், சிம்பாப்வே
Named afterசெசில் ரோடுசு

செசில் (Cecil), 13 வயது நிறைந்த தென்மேற்கு ஆப்பிரிக்க அரிமா (Panthera leo bleyenberghi) ஆகும். இது சிம்பாப்வேயின் வாங்கே தேசியப் பூங்காவில் வாழ்ந்து வந்தது. இப்பூங்காவின் வருகையாளர்களைப் பெரிதும் கவர்ந்திருந்த செசில், ஆக்சுப்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு பரந்த ஆய்வின் பகுதியாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது.[1]

அமெரிக்காவைச் சேர்ந்த வால்டர் பால்மர் என்னும் பொழுதுபோக்கு வேட்டையாடி இதனை அம்பெய்திக் காயப்படுத்தினார்.[2][3][4][5] பிறகு, சூலை 1, 2015 அன்று, ஏறத்தாழ 40 மணி நேரங்களுக்குப் பிறகு, செசிலைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.[6] இக்கொலை பன்னாட்டு ஊடகக் கவனத்தை ஈர்த்ததோடு விலங்குப் பாதுகாவலர்கள், அரசியல்வாதிகள், புகழ்பெற்றவர்களின் கோபத்தையும் ஈட்டியது. பால்மரைக் கண்டித்து இணையத்தில் கண்டனங்கள் குவிந்தன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bittel, J. (July 30, 2015). "Why Cecil the lion was so popular with people". National Geographic. பார்த்த நாள் 31 July 2015.
  2. 2.0 2.1 Capecchi, Christina; Rogers, Katie (30 July 2015). "Killer of Cecil the lion finds out that he is a target now, of internet vigilantism". The New York Times. http://www.nytimes.com/2015/07/30/us/cecil-the-lion-walter-palmer.html. பார்த்த நாள்: 30 July 2015. 
  3. New York Times (28 July 2015). "Man accused in African lion death thought hunt was legal". The New York Times. http://www.nytimes.com/aponline/2015/07/28/us/ap-us-zimbabwe-lion-killed-minnesota.html?_r=0. பார்த்த நாள்: 28 July 2015. 
  4. BBC news video (29 July 2015). "Statement in first 10 secs of the video news report Cecil the lion: US hunter 'regrets' killing". BBC News. பார்த்த நாள் 29 July 2015.
  5. BBC News (July 27, 2015). "Zimbabwe's 'iconic' lion Cecil killed by hunter". BBC News. பார்த்த நாள் August 3, 2015.
  6. "Cecil the lion: Zimbabwe hunter bailed over killing". BBC News.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செசில்_(அரிமா)&oldid=2227072" இருந்து மீள்விக்கப்பட்டது