ஏப்ரல் 2009
<< | ஏப்ரல் 2009 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 | ||
MMIX |
ஏப்ரல் 2009, 2009 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும். இம்மாதம் ஒரு புதன்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ஏப்ரல் 14 இல் தொடங்கி மே 14 வியாழக்கிழமை இல் முடிவடையும்.
சிறப்பு நாட்கள்
[தொகு]- ஏப்ரல் 3 - இராம நவமி
- ஏப்ரல் 5 - சிவயோக சுவாமிகள் குருபூசை
- ஏப்ரல் 8 - பங்குனி உத்தரம்
- ஏப்ரல் 14 - விரோதி புத்தாண்டு
- ஏப்ரல் 20 - திருநாவுக்கரசு நாயனார் குருபூசை
நிகழ்வுகள்
[தொகு]செய்திகள் |
- ஏப்ரல் 23: பாக்கிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 70 மைல் தூரத்தில் உள்ள மாவட்டம் ஒன்றை தலிபான்கள் கைப்பற்றினர். (பிபிசி)
- ஏப்ரல் 22: உலகப் பெருங்கடலின் 1,700,000 சதுர கிமீ பரப்பளவுக்கு ஆர்ஜெண்டீனா உரிமை கோரியது. (பிபிசி)
- ஏப்ரல் 21: சூரிய மண்டலத்துக்கு வெளியே கிளீசு 581 e என்ற புதிய கோள் கண்டுபிடிக்கப்பட்டது. (எம்எசென்)
- ஏப்ரல் 20:
- 2009-ம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசுகள் அறிவிக்கப்பட்டன. (நியூயோர்க் டைம்ஸ்)
- சீனப் பெருஞ்சுவரின் 3,850 கிமீ பகுதியைக் கண்டுபிடித்திருப்பதாக சீனா அறிவித்தது. (பிபிசி)
- ஏப்ரல் 17: ஆப்கானிசுத்தானில் நங்காகார் மாகாணத்தில் இடம்பெற்ற இரண்டு நிலநடுக்கங்களில் 22 பேர் கொல்லப்பட்டனர். (ஸ்கை செய்திகள்)
- ஏப்ரல் 16: இந்தியாவில் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்புகள் ஆரம்பமாகிய முதல் நாளில் 17 பேர் நக்சலைட்டுகளினால் கொல்லப்பட்டனர். (டைம்ஸ் ஆன்லைன்)
- ஏப்ரல் 15: பிரெஞ்சு கடற்படையினர் ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடற்கொள்ளைக்காரர்கள் 11 பேரைக் கைப்பற்றினர். (பிபிசி)
- ஏப்ரல் 14: உலகின் முதலாவது படியெடுப்பு முறையிலான ஒட்டகம் பிறந்திருப்பதாக துபாயில் அறிவிக்கப்பட்டுள்ளது. (டெலிகிராப்)
- ஏப்ரல் 13: ஜோர்ஜியாவின் அதிபர் மிக்கைல் சாக்கஷ்விலிக்கு எதிரான போராட்டங்கள் திபிலீசி நகரில் தொடர்ந்தது.(ஏஎஃபி)
- ஏப்ரல் 12: சோமாலியக் கடற்கொள்ளைக்காரர்களினால் கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கப்பல் தலைவர் ரிச்சார்ட் பிலிப்ஸ் வ்டுவிக்கப்பட்டார். (சீஎனென்
- ஏப்ரல் 11:
- தாய்லாந்தில் இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஆசியான் உச்சி மாநாடு இடைநிறுத்தப்பட்டது. (பிபிசி)
- அப்தெலசீஸ் பூட்டெபிலிக்கா அல்ஜீரியாவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (ஏபி)
- பிஜியின் இடைக்காலப் பிரதமராக அந்நாட்டு இராணுவத்தளபதி கொமர்டோர் பிராங் பைனிமாறாமா அதிபர் இலொய்லாவால் நியமிக்கப்பட்டார். (தினக்குரல்)
- ஏப்ரல் 10: பிஜியின் அரசியலமைப்பை அந்நாட்டு அதிபர் இடைநிறுத்தம் செய்தார். (நியூசிலாந்து ஸ்டந்ப்)
- ஏப்ரல் 9: பீஜியின் இராணுவ அரசு சட்டவிரோதமானது என அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. (யாகூ செய்திகள்)
- ஏப்ரல் 8: தாய்லாந்து, பாங்கொக் நகரில் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் 30,000 பேர் கலந்து கொண்டனர். (ராய்ட்டர்ஸ்)
- ஏப்ரல் 7: கடத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு உத்தரவிட்ட குற்றச்சாட்டில் பெருவின் முன்னாள் ஜனாதிபதி அல்பேர்ட்டோ பிஜிமோரிக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. (வாசிங்டன் போஸ்ட்)
- ஏப்ரல் 6: இத்தாலியில் இடம்பெற்ற 6.3 அளவு நிலநடுக்கத்தில் 207 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)
- ஏப்ரல் 5: மல்தோவாவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் பொதுவுடமைக் கட்சி பெரும் வெற்றி பெற்றது. (ஏஎஃப்பி)
- ஏப்ரல் 3:
- நஜிப் துன் ரசாக் மலேசியாவின் ஆறாவது பிரதமராகப் பதவியேற்றார். (சீஎனென்)
- எல்லைப்பிரச்சினையில் உள்ள பிரியா விகார் கோயில் அருகே தாய்லாந்து, கம்போடியா படையினர் தமக்கிடையே துப்பாக்கிச் சூடுகளை நடத்தினர். (சீஎனென்)
- ஏப்ரல் 2:
- பிச்சை எடுத்தலை வங்காள தேசம் தடை செய்தது. (பிபிசி)
- ஜி20 உச்சிமாநாடு இலண்டனில் ஆரம்பமாகியது. (பிபிசி)
- ஏப்ரல் 1:
- பிரித்தானிய ஹெலிகாப்டர் ஒன்று ஸ்கொட்லாந்து வட பகுதியில் உள்ள கடல் பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 16 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)
- அல்பேனியா, மற்றும் குரொவேசியா நேட்டோ அமைப்பில் இணைந்தன. (ஏஎஃப்பி)
- சென் பீட்டர்ஸ்பேர்க்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் விளாடிமிர் லெனினின் சிலை ஒன்று சேதமடைந்தது. (மாஸ்கோ டைம்ஸ்)
ஈழப்போர் | பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு | மேலதிக ஈழபோர்ச் செய்திகளை |
- ஏப்ரல் 24:
- பெப்ரவரியில் கடத்தப்பட்டுக் கைது செய்யப்பட்ட சுடரொளி பத்திரிகை ஆசிரியர் நா. வித்தியாதரன் கொழும்பு நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார். (தமிழ்வின்)
- வன்னிப் போரில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 6500 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் 14 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐநா தெரிவித்தது. (ஏபி)
- இலங்கை சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவிக்கு கருணா நியமிக்கப்பட்டுள்ளார். (தமிழ்வின்)
- ஏப்ரல் 23:
- வன்னிப் போரில் சிக்கியுள்ள பொதுமக்கள் தங்கியிருக்கும் பாதுகாப்பு வலயப் பகுதிக்கு மனிதாபிமானப் பணியாளர்களின் குழு ஒன்றை அனுப்பிவைக்கப்போவதாக ஐநா செயலாளர் பான் கி மூன் அறிவித்தார். (புதினம்)
- புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மூன்று நாட்களில் மொத்தம் 103,143 பொதுமக்கள் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவத்தரப்பு தெரிவித்தது. (தமிழ்வின்)
- ஏப்ரல் 22:
- படையினர் அம்பவலவன்பொக்கணை, வலைஞர்மடம் மக்கள் வாழ்விடங்கள் மீது செறிவான ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை, பீரங்கி மற்றும் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல்களை நடத்தியதில் 324 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 423 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களை வெளியேறுவதற்கு அனுமதிக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. (பிபிசி)
- விடுதலைப்புலிகளின் ஊடகப்பிரிவு பொறுப்பாளராக இருந்த தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் ஆகியோர் படையினரிடம் சரணடைந்ததாக படையினர் அறிவித்தனர். (தமிழ்வின்)
- வலைஞர்மடம் தேவாலயப்பகுதியை நோக்கி படையினர் வீசிய ஆட்லறி எறிகணைத் தாக்குதலில் பங்குத்தந்தை வண. பிதா ஜேம்ஸ் பத்திநாதர் படுகாயமடைந்தார். (தமிழ்நெட்)
- ஏப்ரல் 21:
- பாதுகாப்பு வலயத்தில் படையினர் நடத்திய தாக்குதலில் மருத்துவர் சிவா மனோகரன் உட்பட 473 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 722-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- புதுமாத்தளன் மருத்துவமனை பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (தமிழ்வின்)
- ஏப்ரல் 20:
- புதுமாத்தளன், வலைஞர்மடம் மற்றும் அம்பலவன்பொக்கனை பகுதிகளில் இருந்து 30,000 பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்ததாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. (தமிழ்வின்)
- வன்னியின் 'பாதுகாப்பு வலய' பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, தாக்குதலில் ஈடுபட்டபோது 476 சிறுவர்கள் உட்பட 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 19: முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் 'பாதுகாப்பு வலயம்' மீது படையினர் நடத்திய தாக்குதல்களில் 178 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 344-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 18:
- இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. (தமிழ்வின்)
- புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் நடத்திய தாக்குதல்களில் 169 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 234 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 17:
- இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர் சிவானந்தன் தீக்குளித்து இறந்தார். (தமிழ்வின்)
- புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயத்தின் மீது படையினர் நடத்திய தாக்குதல்களில் 102 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 156-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- போரை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 16:
- ஐநா செயலாளர் நாயகத்தின் பிரதிநிதியாக விஜய் நம்பியார் இலங்கை வந்தார். (தமிழ்வின்)
- இலங்கை இனப் பிரச்சினை பேச்சு மூலம் தீராவிட்டால் தனி ஈழ மாநிலம் அமைய தமது கட்சி வலியுறுத்தும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. (தமிழ்வின்)
- முள்ளிவாய்க்கால் பகுதி மீது படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 43 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச கிளிநொச்சிக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டார். (தமிழ்வின்)
- ஏப்ரல் 15: புதுக்குடியிருப்பு பாதுகாப்பு வலயத்தின் மீது படையினர் நடத்திய எறிகணை, பல்குழல் பீரங்கி, வான், மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 219 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 408 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 14: புத்தாண்டுக்காக 48 மணிநேர போர் நிறுத்தத்தை அரசு அறிவித்தது. (தமிழ்வின்)
- ஏப்ரல் 13: இலங்கை அமைதி நடவடிக்கைகளில் அனுசரணை வழங்கி வந்த நோர்வே நாட்டை சமாதான ஏற்பாட்டாளர் நிலையிலிருந்து இலங்கை அரசு நீக்கியது. (தமிழ்வின்)
- ஏப்ரல் 8:
- நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக இலண்டனில் பரமேஸ்வரன், சிவா என்ற இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினர். (தமிழ்வின்)
- வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 129 பொதுமக்கள் கொல்லப்பட்டு மேலும் 100 சிறுவர்கள் உட்பட 282 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 7: வன்னியில் படையினர் நடத்திய எறிகணை, வான் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 3 குழந்தைகளும் 11 சிறுவர்களும் உட்பட 31 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு 75-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்ட்தனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 6:
- போர் நிறுத்தம் என்ற அறிவிப்பு வரும் வரை ஓய்வு ஒளிச்சலற்ற, தொய்வு அற்ற போராட்டங்கள் பல நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலண்டன் நாடாளுமன்றத்தை சூழ பல்லாயிரக்கணக்கான தழிழ் மக்கள் அலை அலையாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (தமிழ்வின்)
- புதுக்குடியிருப்பு மோதலில் புதுக்குடியிருப்பில் நச்சு வாயுத் தாக்குதலை படையினர் நடத்தி பல நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 5:
- வன்னியில் படையினர் நடத்திய எறிகணை மற்றும் உலங்குவானூர்தி தாக்குதல்களில் 30 சிறுவர்கள் உட்பட 92 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 153 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- இலங்கையின் வடபகுதியில் நடந்த கடும் சண்டையில் 250 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. மேலும் புலிகள் கைவசம் இருந்த புதுக்குடியிருப்பு பகுதியை கைப்பற்றியிருப்பதாகவும் இராணுவம் தெரிவித்தது. (தமிழ்வின்)
- ஏப்ரல் 4:
- வன்னியில் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழின அழிப்புத் தாக்குதலில் 29 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- அவுஸ்திரேலியா மெல்பேர்ணில் தமிழ்மக்கள் மேற்கொண்ட மகிழுந்து பேரணி மீது சிங்கள மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஐந்து தமிழர்கள் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 3:
- வன்னியில் படையினர் நடத்திய எறிகணை, தொலைதூர துப்பாக்கிச் சூடு மற்றும் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்தி தாக்குதல்களில் 28 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 41 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- அம்பாறை மாவட்டம் பாணமைபிரதேச லகுகல என்ற இடத்தில் 13 தமிழ் இளைஞர்களை அதிரடிப்படையினர் சுட்டுக் கொன்றனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 2: வன்னியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 25 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 56 பேர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஏப்ரல் 1:
- நோர்வேயின் சர்வதேச அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் வன்னியில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனுடன் தொலைபேசியின் ஊடாக உரையாடினார். (தமிழ்வின்)
- வன்னியில் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள் உட்பட 39 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 57 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
இறப்புகள்
[தொகு]2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்
2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்